
பொதுவாக வீடுகளில் ஆண் ஆதிக்கமா, பெண் ஆதிக்கமா என்பதற்காக விளையாட்டாக கேட்கப்படும் கேள்வி இது. இது சரியானது அல்ல.
வைத்திய சாஸ்திர நூல்களுக்கு ஏற்றவாறு நாடிகளின் எண்ணிக்கை 72,000 ல் இருந்து 3,00,0000 வரை விரிவடைகின்றன.
அவற்றில் முதன்மை பெறும் நாடிகள் இடகலை, பிங்கலை, சுழுமுனை, சிங்குவை,புருடன், காந்தாரி, அசனி, அலம்பருடன், சங்குனி, குரு ஆகும். அதிலும் குறிப்பாக இடகலை, பிங்கலை ஆகிய நாடிகள் முக்கியம் பெறுகின்றன.
மூக்கின் இடது நாசியில் வழியே நடைபெறும் சுவாசம் இடகலையும்(சந்திரகலை)
வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலையும்(சூரிய கலை) பாம்பு குறீயீடாகவே குறிக்கப்படுகின்றன.
இந்த சுவாசஓட்டம் 4 நாழிக்கு (சுமார் 1 1/2 மணி நேரம்) ஒரு முறை மாறும். அதாவது ஒரு நாளில் 15 முறை (15*4 = 60 நாழிகை)
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாம் (திருமந்திரம்)
வலப்புற நாடி செல்லும் போது சில வேலைகளையும், இடப்புற நாடி செல்லும் போது சில வேலைகளையும் செய்ய வேண்டும். அப்போது அவைகள் முழுமை பெறும்.
சிதம்பரம் சூரிய நாடியை முதன்மையாய் உடையத் தலம். இதை உணர்த்தவே நடராஜரின் வலது பாதம் ஊன்றி இடது பாதம் தூக்கி ஆடும் வடிவமுடன் அமைந்திருக்கும்.
மதுரை சந்திர நாடியை முதன்மையாய் உடையத் தலம். இதை உணர்த்தவே நடராஜரின் இடது பாதம் ஊன்றி வலது பாதம் தூக்கி ஆடும் வடிவமுடன் அமைந்திருக்கும்.
அதிக விபரம் வேண்டுவோர் குரு முகமாக அறிக.
புகைப்படம் : இணையம்
புகைப்படம் : இணையம்