
பாடல்
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்
மூதுரை – ஔவையார்
கருத்து – நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால், அவன் மறவாமல் திரும்பச் செய்வான் என்பதை உரைக்கும் பாடல்
பதவுரை
நற்குணங்கள் பொருந்திய ஒருவனுக்கு உதவி செய்தால் அவன் எப்பொழுது திரும்ப செய்வான் என எண்ண வேண்டாம். தளர்ந்துவிடாமல் நிலைபெற்று வளர்கின்ற தென்னை மரமானது தனது அடியாகிய வேர்களின் வழியே உண்ட நீரை தன் முடியாலே சுவையுள்ள இளநீராக்கித் தருவதைப் போல் அந்த உதவியை மறவாமல் திரும்பிச் செய்வான்.
#அந்தக்கரணம் #அமுதமொழி #மூதுரை #ஔவையார்