அமுதமொழி – குரோதி – மார்கழி – 17 (2025)


பாடல்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு

மூதுரை  –  ஔவையார்

கருத்து – விநாயகப் பெருமானின் திருவடிகளைப் பூசிப்பவர்க்குக் கல்வியும், செல்வமும், நலமும் உண்டாகும் என்பதைக் கூறும் பாடல்

பதவுரை

பவளம் போன்ற சிவந்த திருமேனியினை உடையவரும், துதிக்கையை உடையவரும் ஆன விநாயகக் கடவுளின் திருவடிகளை நாள்தோறும் தவறாமல் பூக்களைக் கொண்டு அவரை பூசை செய்வோருக்கு சொல்வளம் எனும் வாக்கு வளம் உண்டாகும்; நல்ல சிந்தனை உண்டாகும்; பெருமை பொருந்திய செந்தாமரைப்பூவில் இருக்கும் இலக்குமியின் அருட்பார்வை உண்டாகும்; அவர்களது உடம்பானது பிணிகளால் வாட்டமுறாது இருக்கும்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #மூதுரை #ஔவையார்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *