படைப்புகளின் வழியே பயணம்

நினைவுகளை திரும்பி பார்க்க வைத்த தீபக்கிற்கு நன்றி.

எனக்கான பயணம் பல மனிதர்களால் பக்குவப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதே நிஜம்.

எனது 8ம் வகுப்பு என்று நினைவுபாரதி பற்றிய கட்டுரையில்என்று புதுக்கவிதை பாடி இருப்பார் என்று எழுதி இருந்தேன். எனது ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

அந்த கால கட்டங்களில் பட்டினத்தார் பாடல்களை எனது தாத்தா கற்று தந்து இருந்தார்கள்.

எனது 10ம் வகுப்பில் பாடம் கற்றுத் தந்த திரு. ரங்க ராஜன் அவர்கள் ஒருமுறை பிரபந்தம் ஓதினார்கள். (பச்சைமா மலை போல் மேனி..)

எனது 11 மற்றும 12 வகுப்புகளில் கம்பன் கவி இசைச் செல்வர் புலவர் திரு இராம பத்திரன் அவர்கள் தமிழ் குறித்து மிக அழகாக விளக்கங்களையும், வழிவங்களையும் கற்றுத் தந்தார்கள்.

எனது கல்லூரிக் காலம் என்னை மிகவும் செதுக்கியது.
மதிய இடைவேளைக்குப் பிறகு, கரும்பலகையில் நிச்சயமாக ஒரு கவிதை இடம் பெற்றிருக்கும். அப்போது எழுதப்பட்டவை கவிதை அல்ல என்றும் ஒரு கவிதைக்கான கட்டுமான அமைப்புகள் இல்லை என்றும் இப்போது தோன்றுகிறது.

ஒரு முறை திரு. வீரமணி அவர்கள் எங்கள் கல்லூரிஆண்டு விழாவிற்கு வந்திருந்தார்கள். அப்போது கல்லூரி புத்தகத்தில் எனது கவிதை இடம் பெற்றிருந்தது. (தன் எதிர் காலம் கணிக்கத் தெரியா ஜோதிடன் மற்றவர்களுக்காக மரத்தடியில்). அவர்கள் அக் கவிதையினை மிகவும் பாராட்டினார்கள்.

தோழிஉன்னுடைய கவிதைகளில் நிறைய பிழைகள் உள்ளன. அதுமட்டும் அல்ல அதில் செறிவு இல்லை. பக்தி இலக்கியம் படித்துப்பார். புரியும். (இது இன்று வரை தொடர்கிறது)

சுமார் 10 வருட காலம் படைப்பு என்று ஒருவரி கூட எழுதாமல், படித்தல் மட்டும் தொடந்தது
உத்தேச வாசிப்புகள்
அசோகமித்திரன்,இந்திரா பார்த்தசாரதி,எஸ். வைத்தீஸ்வரன் எஸ்.ராமகிருஷ்ணன்((பெரும்பாலான படைப்புகள்)) .நா.சு,கரிச்சான் குஞ்சு, கலாப்ரியா,கல்யாண்ஜி, கி ராஜநாராயணன், கு. அழகிரிசாமி கு..ரா, சா.கந்தசாமி, சி.சு. செல்லப்பா சுஜாதா சுந்தர ராமசாமி,ஜெயகாந்தன்,ஞானக்கூத்தன்,தி. ஜானகிராமன்,தேவதச்சன்,.பிச்சமூர்த்தி, நகுலன்,பிரபஞ்சன் பிரமிள்,புதுமைப்பித்தன்,மகாகவி பாரதியார் மனுஷ்யபுத்திரன்,மாலன்,ராஜ மார்த்தாண்டன்,,லா.. ராமாமிருதம்((பெரும்பாலான படைப்புகள்))வண்ணதாசன் வண்ணநிலவன் வல்லிக்கண்ணன் விக்ரமாதித்யன் நம்பி ,வெங்கட் சாமினாதன், பாலகுமாரன்((பெரும்பாலான படைப்புகள்)), இந்திரா சௌந்தர்ராஜன், ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் பலர்
மனைவி : உங்களுக்கு கவிதை எழுத தெரியுமா?
சுந்தர்: சிறிதளவு எழுதுவேன்.
மனைவி : உங்கள் கவிதைகளை தாருங்கள், நான் பத்திரிக்கைகளுக்கு அனுப்புகிறேன்.
எனது தோழன் மற்றும் உறவினர் சரவணன் : அண்ணே, நீங்க கவிதை எல்லாம் நல்லா எழுதுறீங்க, இதை ஒரு ப்ளாக் ஆரம்பித்து அதில் போடலாம் அண்ணே. வேணும்ணா, புகைப் படமும் சேத்துக்குங்க.

எழுத ஆரம்பித்த பின் பார்வையாளர்கள் சுமார் 3000. CBCக்கு பின் சுமார் 15000
இங்கு (CBC) பலருடைய எழுத்துக்களைக்(தமிழ் மட்டும்) கண்டு பிரமித்து போயிருக்கிறேன். பிரசன்னா, மதி, ரவி PS , முத்து, கோபால கிருஷ்ணன், கணேஷ், தீபாஐயர், காயு வெங்கட்வெகு சிலரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.

இவை எல்லாவற்றிற்கும் மேல் எனது குருநாதருக்கு மிகவும் கடமைப்பட்டவன்


எனக்கான எல்லாப் படைப்புகளும் இன்னும் நிறைய கற்க வேண்டும் என்ற உந்துதலையே ஏற்படுத்துகின்றன. அதனால்தான் படைப்புகளின் வழியே பயணம் தொடர்கிறது.

புகைப்பட உதவி : SLKumar

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *