‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – நூறுதல்
பொருள்
- அழித்தல்
- அறைந்துகொள்ளுதல்
- வெட்டுதல்
- நெரித்தல்
- பொடியாக்குதல்
- இடித்தல்
- வளைந்துகொள்ளுதல்
- துரத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள்
தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே
திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – திருமூலர்
கருத்து உரை
யோகியர்களே, நீங்கள் பொடி செய்த மிளகை உண்ணுங்கள்; அதனால், சிறுநீர் சிவநீராய் மாறும். அவ்வாறு மாறுவதற்கு வேறு மருந்து ஒன்றும் தேவை இல்லை. (குரு முகமாக அறிக). மிளகுப் பொடியின் ஆற்றலைத் தெரிந்து கொள்ள அறிவிற்கு ஆதாரமான உச்சியில் அதனை அப்பினாலும் மேலே குறிப்பிட்டவாறு சிவநீராக மாறும். இதனாலே நரையும் மாறும்.
விளக்க உரை
- நூறுதல் – பொடித்தல் என்பதால் ‘நூறு மிளகு“ எனக் கொண்டு, எண் வரையறையாக உரைத்தல் கூடாது.
- அமுரி தாரணைக்குத் துணையாக இருக்கும் சிலவற்ரைப் பற்றி கூறுதல்