‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – பொதும்பர்
பொருள்
- மரஞ்செறிந்த இடம்
- இளமரம்
- சோலை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வார்இடர்கண்
டிரான்என்ன நிற்கின்ற ஈசன்கண் டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்றுறைவாய்
அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன் நீள்முடி அந்தணனே
பதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்கால் அம்மையார்
கருத்து உரை
வண்டு கூட்டங்கள் நிறைந்த, சோலைகள் நெருங்கியுள்ள கொன்றை மாலையை அணிந்தவனும், பாம்பின் வடிவம் ஒத்து இருக்கும் சடையாகிய நீண்ட, நிறத்தால் பொன்போன்ற முடியினையுடைய, அழகிய கருணையை உடையவனும் ஆன அவனை தலைவன் என்றும், தேவன் என்றும், இறைவன் என்றும் தன்னைப் பல நாளும் துதித்துத் தொழுகின்றவரது துன்பங்களைப் பார்த்துக் கொண்டிராதவன்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
அழித்தலின் நோக்கம் என்ன?
உயிர்களின் களைப்பு ஒழித்தல்