‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – பேதித்தல்
பொருள்
- மாறுபடுதல்
- பேதியாதல்
- கெடுதல்
- குழம்புதல்
- மனம் மாறுபடுதல்
- பகையாதல்
- பிரித்தல்
- வேற்றுமைப்படுத்தல்
- மாற்றுதல்
- வெட்டுதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து உரை
யான் நந்தி பெருமானைக் குருவாக அடைதற்கு முன், அறியத்தக்க பொருளை அறியாது கிடக்கின்ற மூடர்களோடு ஒன்றாக பொருந்தி இருந்தேன். அவரை அடைந்த பின், என்னைக் அந்தக் கூட்டத்திற்கு அயலானாக ஆக்கி, அறியாமையை நீக்கிச் சிவத்தை உணருமாறு ஆக்கப்பட்டால் யான் சொரூப சிவத்தில் தோய்ந்தபின்பு மீண்டும் அந்தக் கூட்டத்திற்கு செல்லாதவாறு இருக்கும் உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றார்.
விளக்க உரை
- குருவருளில் உறைத்து நிற்பதாலே கருணை உண்டாகும் என்பது பற்றிய பாடல்
- அறிவித்தல் – அறியாமை புகாதவாறு காத்தலாலே யான் ஞேயத்தின் நீங்காதவன் ஆயினேன்
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
மறைத்தல் தொழில் என்பது என்ன?
உலகத்தை உயிர்கள் நோக்கி இருக்க செய்து தன்னை வெளிப்படுத்தாது தன்னை மறைத்து நிற்கும் தொழில்