‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – சென்னி
பொருள்
- தலை
- உச்சி
- சிறப்பு
- சோழ மன்னனின் பெயர்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
வாழ்த்தி பாக்களாகப் பாட வாயும், பெருமைகளை நினைக்க ஒட்டாமல் செய்யும் அறிவற்ற நெஞ்சமும், வணங்கத் தலையும் தந்த தலைவனாகிய பெருமானை, வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தூவித் துதிக்காமல், வினை உடையவனாகிய யான் நெடுங்காலம் வீழ்ந்து இருந்தது என்னே?