‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – துடி
பொருள்
- மிகச்சிறிய மூலக்கூறு
- இரு கரங்கள் கொண்டு வாசிக்க உடுக்கைப்போன்று சற்றே நீண்ட இருபுறமும் தோலால் ஆன வாத்தியம்
- சலிப்பு
- காலநுட்பம்
- வேகம்
- சுறுசுறுப்பு
- அறிவுநுட்பம்
- மேன்மை
- வலி
- அகில்மரம்
- தூதுளை
- சங்கஞ்செடி
- ஏலச்செடி
- மயிர்ச்சாந்து
- உடுக்கை
- துடிக்கூத்து
- துடிகொட்டுபவன்
- சிறுமை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் — ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.
உண்மை விளக்கம் – திருவதிகை மனவாசகங்கடந்தார்
கருத்து உரை
டமருகம் எனப்படும் உடுக்கையில் இருந்து தோன்றும் ஒலியால் படைத்தல் தொழிலையும், திருக்கரத்தினால் காட்டும் அபயத்தினால் காத்தல் தொழிலையும், மற்றொரு திருக்கரத்தில் நெருப்பினை ஏந்தி இருப்பதால் அழித்தல் தொழிலையும், வெளிப்பட இயலாத வாறு முயலகன் மேல் ஒரு காலை ஊன்றி இருப்பதால் மறைத்தல் தொழிலையும், மற்றொரு திருத்தாளை உயர்த்தி இருப்பதால் அருளல் தொழிலையும் செய்து குறிப்பிடப்படும் கூத்தப் பெருமான் இவ்வாறான திருக்கூத்துச் செய்வனென்று சுய விசாரணை செய்து அறிவாயாக.
விளக்க உரை
- சிவன் தானே முன் நின்று பஞ்சத் தொழில்களையும் செய்வான் என்பதை விளக்கும் பாடல்