‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – உறுதல்
பொருள்
- உண்டாதல்
- மிகுதல்
- சேர்தல்
- இருத்தல்
- பொருந்தல்
- கூடல்
- நேர்தல்
- பயனுறல்
- கிடைத்தல்
- வருந்தல்
- தங்கல்
- அடைதல்
- நன்மையாதல்
- உறுதியாதல்
- நிகழ்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்
உலகிற் பிறங்கும் விவகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டுங் களை கண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றாம்.
விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்
மூலம் – காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றியது
கருத்து உரை
இந்த உலகம் முழுவதும் இடைவெளி இல்லாது நீக்கமற நிறைந்திருக்கும் பொருளாக இருப்பவன் எவனோ, உலகில் உறையும் விகாரங்களாகிய காமம், குரோதம் லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள் சேராத பேரொளியாக இருப்பவன் எவனோ, உலகில் செய்யப்படும் செயல்களினின் வினை பயன்களை பிரித்து நல்வினைப் பயன்களை அருள்பவனும், தீவினைப் பயன்களை களைபவன் எவனோ, உலகிற்கு ஆதி காரணமாக இருக்கும் முதல்வன் ஆன கணபதியை மனம் மகிழ்ந்து சரணம் எனத் துதிக்கின்றோம்.