‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – அடுத்தல்
பொருள்
- கிட்டல்
- சேர்தல்
- மேன்மேல் வருதல்
- சார்தல்
- ஏற்றதாதல்
- அடைதல்
- பொருத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
கொடுத்தேனே யென்னைக் கொடுத்தவுடன் இன்பம்
மடுத்தேனே நீடூழி வாழ்ந்தே – அடுத்தேனே
பெற்றேனே பெற்றுப் பிழைத்தேனே சன்மஅல்லல்
இற்றேனே ஏழைஅடி யேன்.
தாயுமானவர்
கருத்து உரை
அறிவில்லாத ஏழையாகிய என்னை, நின் திருவடிக்கு அடிமையாகக் கொடுத்துவிட்டேன்; அவ்வாறு என்னை ஒப்புவித்தவுடன் இறவாமல் இருக்கும் பேரின்பம் எய்தி, நீண்ட காலம் வாழ்ந்தேன்; திருவருளால் பெறவேண்டியவை அனைத்தும் பெற்று கடைத்தேறினேன்; பிறவிப்பெருந்துன்பம் சிறிதுமின்றி நீங்கினேன்.
விளக்க உரை
- அறிவில்லாத – நின் கருணையை உணர்த்தியும் அதை அறிய இயலாதவன் எனும் பொருளில் / கால தாமதாக உணர்ந்த பொருளில்
- ஏழை – அருளைப் பெறாதவன்