ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – சற்சீடர்
பொருள்
- உண்மையான சீடர்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
வைதாலும் ஓர்கொடுமை செய்தாலு மோசீறி
மாறாதிகழ்ந் தாலுமோ
மனதுசற் றாகிலும் கோணாது, நாணாது,
மாதாபி தாவெனக்குப்
பொய்யாமல் நீ யென்று கனிவொடும் பணிவிடை
புரிந்து, பொரு ளுடலாவியும்
புனித! உன்றன தெனத் தத்தஞ்செய் திரவுபகல்
போற்றி, மல ரடியில் வீழ்ந்து,
மெய்யாக வேபரவி உபதேச மதுபெற
விரும்புவோர் சற்சீ டராம்
வினைவேர் அறும்படி அவர்க்கருள்செய் திடுவதே
மிக்கதே சிகரதுகடன்
ஐயா! புரம்பொடி படச்செய்த செம்மலே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
அறப்பளீசுர சதகம் – அம்பலவாணக் கவிராயர்
கருத்து உரை
ஐயா! மனதில் நினைத்ததை தரும் சதுரகிரியில் வளரும் அறப்பளீசுர தேவனே! தலைவனே! முப்புரங்களை நீறுபடச் செய்த பெரியோனே!, தூயவனே! தலைவனாகிய எமது தேவனே! வைதாலும், ஏதேனும் கொடுமை இழைக்கினும், மாறாமல் சினந்து இழிவுபடுத்தினும், சிறிதும் மனம் கோணாமலும் வெட்கப்படாமலும், உண்மையாக எனக்கு அன்னையும் தந்தையும் நீயேயென்று கூறி, ஆசிரியனுக்கு மனங்கனிந்து வழிபாடு செய்து, என் பொருளும் உடலும் உயிரும் உன்னுடையவை என்று கூறி அனைத்தையும் கொடுத்து, இரவும் பகலும் விடாமல் வணங்கி, ஆசிரியனின் மலர்போன்ற திருவடிகளில் உண்மையாகவே வீழ்ந்து புகழ்ந்து கூறி, அறிவுபெற விரும்புவோர் நல்ல மாணாக்கராவர். அவர்களுக்கு வினையின் வேருடன் கெடும்படி அருள் செய்வது சிறந்த ஆசிரியரது கடமையாகும்.
விளக்க உரை
- நன்மாணாக்கர் இயல்புகளை விளக்கும் பாடல்
- ஆசிரியரின் திருவடியை வணங்குதல் அனைத்து வினைகளையும் அழிக்கும்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
நிமித்த காரணம் காட்டும் உவமை எது?
குயவன்