ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – துய்ய
பொருள்
- தூய்மையுள்ள
- கலப்பற்ற
- உறுதியான
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
செய்ய திருமேனி செம்பட் டுடைதானும்
கையில் படைஅங் குசபாசத் தோடபயம்
மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி
துய்ய முடியும் அவயவத் தோற்றமே.
திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்
கருத்து உரை
மேலே குறிப்பிட்டவாறு பூஜை செய்யும் போது சிவந்த நிறம் கொண்டவளாய், செம்பட்டு உடை அணிந்தவளாய், கைகளில் அங்குசம், பாசம் என்னும் படைக்கலங்களும், அபய வரதங்களும் உடையவளாய், திருமேனியில் அணிகலன்களையும் இரத்தின ஆபரணங்களையும், தூய்மையான கிரீடம் அணிந்தவளாய் புவனாபதி அம்மை தன் வடிவில் தோன்றுவாள்.
விளக்க உரை
- புவனாபதி தியானத்திற்கு உரிய அம்மையின் வடிவு கூறப்பட்டது
- ரத்தின மாம்மேனி – இரத்தினம் போன்ற தோற்றம் உடைய திருமேனி
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
உமாபதி சிவம் சித்தி பெற்ற இடம் எது?
சிதம்பரதிற்கு அருகில் கொற்றவன்குடி