ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – ஆவாகனம்
பொருள்
- விக்ரகத்தில் எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிப் பிராணப்பிர திட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியான மதுசெய்யே.
திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்
கருத்து உரை
புவனாபதி அம்மையை வழிபடும் பொழுது முதலில் மனத்தில் காமாதி குற்றங்கள் நீங்கித் தூய்மையுடையதாக செய்து, வெளியில் நிறை குடம், திருவுருவ மற்றும் இச்சக்கரம் என்பவைகளில், அந்த அந்த மறைமொழிகளால், (மந்திரங்களால்) ஆவாகனம், ஸ்தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம், அவகுண்டவம், தேனுமுத்திரை, பாத்தியம், ஆசமனீயம், அருக்கியம், புஷ்பதானம், தூபம், தீபம், நைவேத்தியம், பாணீயம், ஜெப சமர்ப்பணம், ஆராத்திரிகை செய்து முடித்து, அகத்தில் அவளது உருவத்தை நினைவுகூர்ந்து, அவளது ஒளிமிக்க வடிவம் மனத்திலே நன்கு பொருந்தும்படி தியானித்து நிற்பாயாக.
விளக்க உரை
- புவனாபதி அம்மையது வழிபாட்டு முறை குறித்தது இப்பாடல்.
- அகத்தினில் ஆவாகனம் – நினைவுகூர்தல். புறத்தினில் ஆவாகனம் – வரைவழைத்தல்
- பிராணப் பிரதிட்டை – உயிர் கொடுத்து நிலைப்பித்தல்.
சோடச பட்டியல் – புறத்தில் குடை, ஸ்தாபனம், பாத்யம் கொடுத்தல், ஆசனமளித்தல், அர்க்கியம், அபிஷேகம் வஸ்திரம், சந்தனம், புஷ்பாஞ்சலி, தூயதீபம், நைவேத்தியம், பலி போடுதல், ஹோமம், ஸ்ரீபலி, கேயம் வாத்தியம், நர்த்தனம், உத்வாஸனம்
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
உமாபதி சிவம் பிறந்து வாழ்ந்த தலம் எது?
சிதம்பரம்