ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – பொருந்துதல்
பொருள்
- செயப்படுபொருள்குன்றிய தன்வினை
- மனம் இசை வாதல்
- தகுதியாதல்
- அமைதல்
- உடன்படுதல்.
- நெருங்குதல்
- சம்பவித்தல்
- பலித்தல்
- இயலுதல்
- கலத்தல்
- அடைதல்
- அளவளாவுதல்
- புணர்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன்வழிப்போய்ப்
பொருந்தேன் நரகில் புகுகின்றி லென், புகழ்வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன்இயல் அஞ்செழுத்தாம்
அரும்தேன் அருந்துவன் நின் அரு ளால்கயி லாயத்தனே!
பட்டினத்தார்
கருத்து உரை
நின்னுடைய அருளால், இனி வருந்த மாட்டேன், மாயைக்கு உட்பட்டு பிறப்பையும், இறப்பையும் தரும் புலன்வழி சென்று அங்கு கலக்க மாட்டேன்; நரகத்தில் புக மாட்டேன். உன்னை புகழ்ச்சி செய்யும் அடியவர் கூட்டத்தில் இருந்தேன்; அவ்வாறான அடியவர் கூட்டம் விட்டு விலக மாட்டேன்; இயல்பாக இயன்றவரை தேன்போன்ற இனிய அஞ்செழுத்தை அருந்துவேன்.
விளக்க உரை
- சொல்லப்படும் மந்திரங்களின் மேம்பட்ட நிலை, அம்மந்திரமாக ஆகுதல். தன்னிலை மறந்து அவ்வகைப்பட்ட ஐந்தெழுத்தில் ஒன்றும் போது அமுத தாரகைகள் அன்னாக்கில் தோன்றும். மேல் விபரங்களை குரு மூலமாக அறிக