ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – சூழல்
பொருள்
- நமக்கு அருகாமையில் இருக்கும் இடம்
- நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்
பாடல்
இன்றுதான் நீயென்னைக் கண்டிருந்துங் கண்டாயோ
அன்றித்தான் நானுன்னைக் கண்டேனோ என்றால்
அருமாயை ஈன்றவள்தன் பங்கனையார் காண்பார்
பெருமாயைச் சூழல் பிழைத்து
சிவஞான போதம் – மெய்கண்டார்
கருத்து உரை
மாணவனே, இன்று நீ என்னை உன் ஊனக் கண்ணால் கண்டும் என் ஆன்மாவின் தன்னியல்பைக் கண்டாயோ? காணவில்லை. அன்றி நான்தான் உன் பருவுடம்பைக் கண்டிருந்தும் உன்னுடைய உயிர் இயல்பைக் கண்டேனோ? காணவில்லை. மாந்தராகிய நாம் ஒருவரை ஒருவர் கண்ணால் கண்டும் முற்றிலும் காணவில்லை. எனில், நுண்ணிய மாயையிலிருந்து இவ்வுலகங்களை எல்லாம் தோற்றுவித்து அருளும் சிவ சத்தியைத் தன்னுடைய ஒரு பாகத்திலே கொண்ட உமையொரு பாகனை மாயைக்கு உட்பட்ட யார்தான் காண இயலும்? ஒருவராலும் காண இயலாது.
விளக்க உரை
மாயையை விலக்கும்வரை சிவதரிசனம் கிடையாது.