ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – அடுதல்
பொருள்
- கொல்லுதல்
- தீயிற் பாகமாக்குதல்
- சமைத்தல்
- வருத்துதல்
- போராடுதல்
- வெல்லுதல்
- காய்ச்சுதல்
- குற்றுதல்
- உருக்குதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அடுதலையே புரிந்தான், நவை; அந்தர மூஎயிலும்
கெடுதலையே புரிந்தான்; கிளரும் சிலை நாணியில் கோல்
நடுதலையே புரிந்தான்; நரி கான்றிட்ட எச்சில் வெள்ளைப்-
படுதலையே புரிந்தான்-பழமண்ணிப் படிக் கரையே .
தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்
கருத்து உரை
உலகத் தொகுதியின் வினைகள் அழித்தலை விரும்பினவனும், வானில் இருந்த மூன்று மதில்கள் கெட்டு அழிதலை விரும்பி வில் நாணில் அம்பைப் பூட்டுதலை விரும்பினவனும், நரி உமிழ்ந்த எச்சிலாகிய வெண்மையான அழிந்த தலையை விரும்பியவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம், ‘திருப்பழமண்ணிப் படிக்கரை’ என்னும் தலமே.