ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – மாக்கள்
பொருள்
- மக்கள்
- பகுத்தறிவில்லாதார்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.
திருநெறி 8 – திருவருட்பயன்- உமாபதி சிவாச்சாரியார்
கருத்து உரை
மானைக் காட்டி மானைப் பிடித்தல் போல், பக்குவப்பட்ட ஆன்மாக்களை முன் நிற்கச் செய்து தன்வசமாக்கிக் கொள்வதற்காக மானிட தேகம் எனும் சட்டையை சாத்திக்கொண்டு ஆசாரியமூர்த்தமாக எழுந்தருளி வந்ததென்று ஆன்மாக்கள் அறியச் செய்வார்கள்.