ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – சுத்தம்
வார்த்தை : சுத்தம்
பொருள்
- ஞானம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாசம் மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.
திருமந்திரம் – 6ம் தந்திரம் – திருமூலர்
கருத்து உரை
சிவன், தான் நேரே அருளுதல், குருமூர்த்தமாக நின்று அருளுதல் என்னும் இருவழிகளில் அருளுவார். இவ்வாறான ஆதி குரு மாணாக்கன்பால் மிகவும் அன்பு கொண்டு உபதேச மொழியால் எல்லாப் பொருள்களையும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களில் அடக்கி உணரவைத்து, அந்த உணர்வினால், பக்குவப்படுத்தி, பாசத்தை நீக்கி முத்திக் காலத்தில் எல்லா நலங்களையும் அருளுவார்.
விளக்க உரை
- சிவகுருவின் ஆற்றல் குறித்து கூறப்பட்ட பாடல்
- நிராதாரம் – விஞ்ஞானகலர் பிரளயாகலர்கட்கு
- சாதாரம் – சகலர்க்கு