ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – நறவு
வார்த்தை : நறவு
பொருள்
- தேன்
- கள்
- நறை
- மணம்
- மணக்கொடிவகை
- ஈண்டுப் பிச்சையேற்ற உணவு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
கோடெ லாநிறை யக்குவ ளைம்மல ருங்குழி
மாடெ லாமலி நீர்மண நாறும்வ லஞ்சுழிச்
சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை யில்நற வேற்றதே.
தேவாரம் – 2ம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
கரைகளெல்லாம் நிறையுமாறு அங்கு இருக்கும் குளங்களில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்து அங்குள்ள நீர் குவளை மலரின் மணத்தை வீசுகின்றது. அவ்வாறு குவளை மலர் மணம் வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும் பெருமைகள் எல்லாம் உடையவரே! சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! நாடறியத் தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ? சொல் வீராக.
விளக்க உரை
கோடு – கரைகள்
மாடு – பக்கம்
சேடு – பெருமை