வல்வினைக் காடு

வல்வினைக்காடு

பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் – முன்வைத்து – காற்று
அடர் காடொன்றில் பயணிக்கிறேன்.
தொலைவில் பிண வாடை
காற்றில் கலந்து வருகிறது.
காலம் கரைகளில் உணர்கிறேன்
அது என்னிடத்தில் இருந்து வருவதை.
உடலெங்கும் மனிதர்கள் ஈன்ற மலங்களை
பூசிக் கொள்கிறேன். *
திருநீற்று வாசம்
மனதினை நிறைக்கிறது.
கண் முன்னே சிறு குழந்தை ஒன்று.
என்னைத் தெரியவில்லையா?’ என்கிறது
விதி வழி விலக்கப்பட்ட மாந்தர்களில்
நானொருவன், எவரை அறிந்து
எது நிகழப்போகிறதுஎன்கிறேன்.
செலவழியா பொருளொன்றை ஈய
வந்திருக்கிறேன்என்கிறது அக்குழந்தை.
வியப்புறுகிறேன்.
காற்றே அழியா பொருள், காற்றினைக் கைக்கொள்,
வாசனைகள் அற அதுவே வழிஎன்கிறது.
யார் நீ?’ என்கிறேன்.
தேகம் மறைந்து காற்றில் கரைகிறது
வார்த்தைகள்நானே வாலை‘.
பிறிதொரு பொழுதுகளில்
உலகங்கள் மட்டும் இயங்கின.
*கேட்டறிந்த  உண்மை சம்பவம் முன்வைத்து
 

Loading

சமூக ஊடகங்கள்

ப்ரியங்கரீ

ப்ரியங்கரீ_Pawan
பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் – முன்வைத்து – நீர்
யாரும் அற்ற தனிமை என்பதே இல்லை
நினைவுகள் இருக்கும் வரை
என அறிந்தே
குப்பைக் காட்டினில்
தனித்திருக்கிறேன்.
கண் முன்னே மெல்லிய ஆடை ஒன்று
பற்றி எரிகிறது.
கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடை.
‘உன்னில் என்னைக் கண்டிருந்தாய்
காலமாற்றத்தில்
நீயும் நானும் விலகினோம்’ என்கிறது.
வாக்கியத்தின் முடிவில்
மற்றொரு ஆடை பற்றி எரிகிறது.
மீண்டும் கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடையும்.
ஆடைகளும், காகிதங்களும்
குப்பைகளும் பெரும் தீ உண்டாக்கி
பற்றி எரியத் துவங்குகின்றன.
ஜுவாலையின் விளிம்புகள்
தேகம் தீண்டுகின்றன.
‘எரிவது நானா, ஆடையா, பிற பொருள்களா’
கேள்விகள் எழுகின்றன.
எழும் கேள்வினை உறுதி செய்ய
பெரு மழை ஒன்று
பூமியினை நனைக்கிறது.
யார் நீஎன்கிறேன்.
பிரளயங்களுக்கு உரித்தானவள் என்கிறாள்அவள்
பின்னொரு பொழுதுகளில்
நீரில் கரைந்திருந்தது மற்றொரு உடல்.
 
புகைப்படம் : இணையம்
ப்ரியங்கரீ – அன்பு செய்பவள். 

Loading

சமூக ஊடகங்கள்