தெளிவுறு சித்து

தெளிவுறு சித்து_KP
தடைபடா மௌனத்தில்
ஒடுங்குமிறது
நாதமும்
* தெளிவுறு சித்துதெளிந்த சித்தம்திருமந்திரம் 1064
புகைப்படம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

வல்வினைக் காடு

வல்வினைக்காடு

பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் – முன்வைத்து – காற்று
அடர் காடொன்றில் பயணிக்கிறேன்.
தொலைவில் பிண வாடை
காற்றில் கலந்து வருகிறது.
காலம் கரைகளில் உணர்கிறேன்
அது என்னிடத்தில் இருந்து வருவதை.
உடலெங்கும் மனிதர்கள் ஈன்ற மலங்களை
பூசிக் கொள்கிறேன். *
திருநீற்று வாசம்
மனதினை நிறைக்கிறது.
கண் முன்னே சிறு குழந்தை ஒன்று.
என்னைத் தெரியவில்லையா?’ என்கிறது
விதி வழி விலக்கப்பட்ட மாந்தர்களில்
நானொருவன், எவரை அறிந்து
எது நிகழப்போகிறதுஎன்கிறேன்.
செலவழியா பொருளொன்றை ஈய
வந்திருக்கிறேன்என்கிறது அக்குழந்தை.
வியப்புறுகிறேன்.
காற்றே அழியா பொருள், காற்றினைக் கைக்கொள்,
வாசனைகள் அற அதுவே வழிஎன்கிறது.
யார் நீ?’ என்கிறேன்.
தேகம் மறைந்து காற்றில் கரைகிறது
வார்த்தைகள்நானே வாலை‘.
பிறிதொரு பொழுதுகளில்
உலகங்கள் மட்டும் இயங்கின.
*கேட்டறிந்த  உண்மை சம்பவம் முன்வைத்து
 

Loading

சமூக ஊடகங்கள்

சோளக்கொல்லை பொம்மை

சோளக்கொல்லை பொம்மை_KarthikPasupathy
காலத்தின் மாற்றத்தில்
சோளக்கொல்லை பொம்மையாகி
நிற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
‘அழகாக உடுத்தி
வீதியின் நிற்றலே வேலை’ என்றார்கள்
கனவுகளுடன் காத்திருக்கையில்
பெரு வயல்வெளிதனில்
கருங்குருவி ஒன்று வந்தது.
விரட்ட எத்தனமானேன்.
‘காகங்களை விரட்டுதலே வேலை
கருங்குருவி விரட்டுதல் அல்ல’
என்றது தலைமை பொம்மை.
பார்வைகள் பதிருக்கும் காங்களில்
பாத்திகளின் மேல் காகங்கள் அமர்ந்தன.
விரட்ட எத்தனமானேன்.
‘பாத்திகள் இருவருக்கு உரித்தானவைகள்’
என்றது மற்றொரு பொம்மை
‘நம்மின் வேலை தொடர்வோம்’ என்றும் கூறின.
முதுகுக்கு பின் சில காகங்கள் வட்டமிட்டன.
விரட்ட எத்தனமாகிறேன்.
‘முன்னே பார்த்தல் மட்டுமே நம் வேலை
பின்னே பார்த்தல் மற்ற பொம்மையின் வேலை’ என்றது தலைமை பொம்மை.
கண் எதிரே சில அண்டங்காக்கைகளும்
சில வீட்டுக் காகங்களும் விளையாடின.
விரட்ட எத்தனமானேன்.
வீட்டுக்காகங்கள் மதிக்கப்பட வேண்டும்
அண்டங்காகங்களை மட்டும் விரட்டப்பட வேண்டும்’
என்றது மற்றுமொரு தலைமை பொம்மை
பிறிதொரு நாளில்
வேறு சில பொம்மைகள் வயல்களில்.
வார்தைகள் அற்று வினவுகிறேன்.
‘மற்ற பொம்மைகளின் படிச் செலவு
மாதம் விடுத்து தினமாகிறது’ என்றது தலைமை பொம்மை.
காலத்தின் மாற்றத்தில்
ஆடைகள் அற்றுக் கிடக்கிறது 
பொம்மை ஒன்று,
சில காகங்கள் மட்டும் சீண்டி விளையாடுகின்றன 
அப் பொம்மையை.

புகைப்படம்: Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

பௌர்ணமி நாட்கள்

பௌர்ணமி நாட்கள்_Swathi

மகளால் வரையப்படும்
கிறுக்கல்களால் அழகு பெறுகின்றன
நாட்களும்.
 

புகைப்படம் :  Swathika Senthil

Loading

சமூக ஊடகங்கள்

திசை அறிதல்

திசை அறிதல்_KP

பாதங்களின் நிழல் பற்றி
நடந்து செல்லும் பாதைகளில்
தடம் பதியாது பறந்து செல்கிறது

பறவையின் நிழல் ஒன்று.

புகைப்படம் :  Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

பயணித்தல் – இலக்கு நோக்கி

பயணித்தல் - இலக்கு நோக்கி

மனித சஞ்சாரம் அற்ற
காடுடொன்றில் தனித்து பயணிக்கிறேன்.
சிறு மழை பெற்ற பின்னொரு பொழுதாய்
மண்ணில் வாசம்
உச்சரிக்கப்படும் ஒரு நாமம் ஒன்று
பெண்ணாகி என் எதிரே.
இனம் கண்டது எப்படி என்கிறேன்.
மூலத்தின் பிரதி
எப்படி மூலத்தில் இருந்து விலகலாம் என்கிறாள்.
என் காலடி ஓசையுடன் சேர்ந்தே
ஒலிக்கின்றன தண்டையின் ஒலிகள்.
பாதங்கள் பாதைகளில்
பயணிக்கின்றன.
விளையாட்டாய் ஆரம்பிக்கிறது
வார்த்தை விளையாட்டுக்கள்.
‘பிரம்மம் என்ன செய்து கொண்டிருக்கிறது’ என்கிறேன்
‘பிரம்மமாய் இருக்கிறது’ என்கிறாள்.

ஆதி நாளின் சூன்யத்தில் உடல்.


புகைப்படம் : பாலா அவர்கள்
 

Loading

சமூக ஊடகங்கள்

பயன் இயல்

பயன் இயல்

தேனீர் அருந்துதல் என்பது
அத்தனை எளிதானது அல்ல.
‘ஒரு கோப்பைத் தேனீர்’ எனும்
புத்தக வாசிப்பினை உங்களுக்கு தந்திருக்கலாம்;
நினைவுகளில் மூழ்கி இருக்கையில்
தேனீர் பற்றி இருக்கும் சிகரெட்
விரல்களை சுட்ட தருணங்களை
உங்களுக்கு தந்திருக்கலாம்;
தொலைபேசியில் சிரித்துப் பேசியபடி
சந்தோஷங்களை உங்களுக்கு
தந்த தருணமாக இருந்திருக்கலாம்;
யாசிப்பின் மொழி அறிந்து
பெற்ற பெரும் செல்வத்தில்
பசியினை அறுக்க பருகும்
தருணமாக இருந்திருக்கலாம்;
தன்னிடம் இருக்கும் சில சில்லறைகளை ஈந்து
மீதமிருக்கும் சில்லறைகளில்
பிஸ்கோத்து வாங்கி,  நாயிக்குஅளித்து
தானும் அதுவும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்
தருணமாக இருந்திருக்கலாம்;
மனிதர்களால் விலக்கப்பட்டு
வலிகளின் அடிநாதம் அறிந்து
பிறிதொரு நாளில்
பருகும் கடைசி பாகமாகவும் இருக்கலாம்.
தேனீர் அருந்துதல் என்பது
அத்தனை எளிதானது அல்ல.

புகைப்படம் :  Ram N

 
 

Loading

சமூக ஊடகங்கள்

ப்ரியங்கரீ

ப்ரியங்கரீ_Pawan
பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் – முன்வைத்து – நீர்
யாரும் அற்ற தனிமை என்பதே இல்லை
நினைவுகள் இருக்கும் வரை
என அறிந்தே
குப்பைக் காட்டினில்
தனித்திருக்கிறேன்.
கண் முன்னே மெல்லிய ஆடை ஒன்று
பற்றி எரிகிறது.
கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடை.
‘உன்னில் என்னைக் கண்டிருந்தாய்
காலமாற்றத்தில்
நீயும் நானும் விலகினோம்’ என்கிறது.
வாக்கியத்தின் முடிவில்
மற்றொரு ஆடை பற்றி எரிகிறது.
மீண்டும் கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடையும்.
ஆடைகளும், காகிதங்களும்
குப்பைகளும் பெரும் தீ உண்டாக்கி
பற்றி எரியத் துவங்குகின்றன.
ஜுவாலையின் விளிம்புகள்
தேகம் தீண்டுகின்றன.
‘எரிவது நானா, ஆடையா, பிற பொருள்களா’
கேள்விகள் எழுகின்றன.
எழும் கேள்வினை உறுதி செய்ய
பெரு மழை ஒன்று
பூமியினை நனைக்கிறது.
யார் நீஎன்கிறேன்.
பிரளயங்களுக்கு உரித்தானவள் என்கிறாள்அவள்
பின்னொரு பொழுதுகளில்
நீரில் கரைந்திருந்தது மற்றொரு உடல்.
 
புகைப்படம் : இணையம்
ப்ரியங்கரீ – அன்பு செய்பவள். 

Loading

சமூக ஊடகங்கள்

வினை ஒறுத்தல்

ஊன் எங்கும் ஆரத் தழுவி இருக்கின்றன
தழும்புகள்
கண்ணுக்கு தெரியா காலமொன்றில்
ஒன்று தான் இருந்தது.
காலமாற்றத்தில் பெருகிப் போனது.
ஆடை ஒன்றை அணிகிறேன்
ஆடைகள் பல்கி பெருகுகின்றன.
பிறிதொரு நாளில்
காயங்கள்

முற்றுப் பெருகின்றன
நான் நிர்வாணமாகிறேன்.

வினை ஒறுத்தல் –  வினை அனைத்தையும் அழித்தல்
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்