சற்று நேரம் கழித்து அலுவலகத்தில்நுழைந்தேன்.
‘என்னாசார் லேட்?’
‘நண்பர்போன் பண்ணார், யாருக்காவது ஒரு சாப்பாடு வாங்கிகுடுக்கச் சொன்னார், அதான் கோயிலுக்கு எதித்தாப்பலஒரு அம்மா இருந்திச்சி. அதுகிட்டகொடுத்து வந்தேன். ஆனா என்ன வேடிக்கைன்னாஅது பிச்சகாரி மாதிரியே தெரியல, ஹின்டு படிக்குது‘
‘ஓ அந்த டாக்டர் அம்மாவா‘
எனக்குதலை சுற்றியது.
‘என்னங்கசொல்றீங்க‘
‘மேட்டர்தெரியாதா, அது ‘GH’ல ‘Professor‘. இப்பவும் சீனியர் டாக்டர் எல்லாம்வந்து ‘consultation’னு வராங்க. பசங்கஎல்லாம் காச வாங்கி அதவிரட்டி விட்டாங்க, அட போங்கடான்னு அந்தஅம்மாவும் வெளில வந்திருச்சி . இப்பமழை பெய்யுதுன்னு பெசன்ட் நகர் ”bus depot” ல படுத்துக்கிடக்குது.
காலம் கனக்கச் செய்யும் பொழுதுகளில் கண்களிலும் ஈரம்.
Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru