ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – கடந்தை
பொருள்
- திருப்பெண்ணாகடம்
- ஒரு குளவிவகை
- பெருந்தேனீ
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஆவா சிறுதொண்ட னென்னினைந் தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப் பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுட் டூங்கானை மாடத்தெம் புண்ணியனே.
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
செம்மையான தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தை என்றும் திருப்பெண்ணாகடம் என்றும் அழைக்கப்பெறும் தூங்கானைமாடத்தில் உறையும் எம் புண்ணியனே! இரக்கக்துடன் கூடிய ஆனந்தம் கொண்டு ‘இச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான்’ என்று திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப் பாதுகாக்காமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலினால் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகளில் பற்றித் தோய்ந்த திருநீற்றினை அடியேன் மீது பூசுவாயாக.
விளக்க உரை
- சிறு தொண்டன் – தொண்டர்களில் சிறியேன்; சிறு தொண்டு புரிவேன்
- அரும் பிணி நோய் – அகற்றுதற்கு இயலா பிணியையும் நோயையும்
- எம் புண்ணியனே – எமது சிவபுண்ணியப் பயனாக உள்ளவனே
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
ஞானம் எதைக் குறிக்கும்?
அறியும் கருவி