ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – ஏயிலான்
பொருள்
- தமக்குமேல் தலைவன் இல்லாதவன்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஏயி லானையெ னிச்சை யகம்படிக்
கோயி லானைக் குணப்பெருங் குன்றினை
வாயி லானை மனோன்மனி யைப்பெற்ற
தாயி லானைத் தழுவுமென் ஆவியே.
தேவாரம் – 5ம் திருமுறை (திருக்குறுந்தொகை) – திருநாவுக்கரசர்
கருத்து உரை
தமக்குமேல் தலைவன் இல்லாதவன். அன்பாலாகிய உள்ளக்கோயிலில் உறைபவன். குணக்குன்று. வாழ்த்துவோர் வாழ்த்தும் புறக்கருவியாகிய வாயினை இயல்பான இருப்பிடமாக கொண்டவன். நவந்தரு பேதங்களில் ஒன்றான மனோன்மனி எனும் சத்திபேதத்தை ஈன்றவன். தனக்கொரு தாய் இல்லாதவன். அவனை என்னுயிர் தழுவும்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
சிவஞான சித்தியாரை அருளியவர் யார்?
அருணந்தி சிவம்