ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – கிளர்தல்
பொருள்
- மேலெழுதல்
- வளர்தல்
- மிகுதல்
- விளங்குதல்
- சிறத்தல்
- உள்ளக்கிளர்ச்சிகொள்ளுதல்
- சினத்தல்
- இறுமாப்புக்கொள்ளுதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் – உத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.
திருமுறை 11 – காரைக்கால் அம்மையார் – திருஇரட்டைமணிமாலை
கருத்து உரை
கல்வி, செல்வம், அதிகாரம் முதலியவற்றில் உயர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் இறந்துவிட்டால் எல்லார் போலவும், காய்ந்த விறகை அடுக்கி, உறவினர்கள் எரித்து விடுவார்கள். இவ்வளவே இவ்வுலக வாழ்வு. ஆகையினால் நீண்ட கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தினை உண்டு உலகை காத்தவனாகிய திறத்தினை, புகழை அறிந்தோர் சொல்லக் கேள். கேட்டால், நிலையான வாழ்வைப் பெறுவாய்.
விளக்க உரை
கிளர்ந்து கேள் – `ஊக்கம் கொண்டு கேள்` என உரைத்தனால், `ஊக்கம் இன்றிக் கேட்டல் பயனுடைது ஆகாது`