ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – ஒத்துறு
பொருள்
- ஒன்றாக தாளம் போடுதல்
- ஒன்றாக தாள வரையறை செய்தல்
- ஒத்த வடிவம் எடுத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
வாக்கிய பயன்பாடு
நீ ஆருடா அம்பி, ஓ! ஒத்து ஊதறவனா, சரி சரி போய் வண்டில உட்கார்.
பாடல்
சத்தியாய் விந்து சத்தி யாய்மனோன் மனிதா னாகி
ஒத்துறு மகேசை யாகி உமைதிரு வாணி யாகி
வைத்துறும் சிவாதிக் கிங்ஙன் வருஞ்சத்தி யொருத்தி யாகும்
எத்திற நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள் .
திருநெறி 2 – சிவஞான சித்தியார்
கருத்து உரை
சிவபேதம் ஏழிற்கு (சிவம் (பரநாதம்),நாதம் (அபர நாதம்),சதாசிவன், மகேசன், உருத்திரன்,திருமால், அயன்) உரிய சத்திபேதமும் (சத்தி (பரவிந்து), விந்து (அபர விந்து), மனோன்மணி, மகேசை, உமை, திருமகள், கலைமகள்), என சத்திமுதல் வாணியீறாக ஏழுவகைப்படும். எம்முடைய இறைவனாகிய பரமசிவன் சிவபேதம் ஏழினும் நின்று நடக்கச் செய்கையில், அவனோடு தானும் நிற்கும் பராசத்தியும் அவனுக்குத் துணையாய் நிற்பாள்.
விளக்க உரை
ஈசனின் அனைத்து வடிவங்களிலும் அவனின் பேதங்களுக்கு ஏற்ப சக்தி தன் வடிவம் எடுத்து சிவ சக்தி சொரூபமாக இருப்பாள் எனும் பொருள்.