ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – விரதி
பொருள்
- நோன்பு மேற்கொண்டோன்
- பிரம்மசாரி
- துறவி
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.
தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணிகலன் ஆகும். நான்கு வேதங்களையும், சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம் ஆகிய ஆறு அங்கங்களை அறிந்த அந்தணர்களுக்கு ஓதுதல் சிறந்த அணிகலன்; சிவபெருமானுக்கு பிறை உடைய அழகிய சடை சிறந்த அணிகலன். எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணிகலன் திருவைந்தெழுத்தேயாகும்.