ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – பனுவல்
பொருள்
- நூல்
- புத்தகம்
- பஞ்சு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
சகலகலாவல்லி மாலை – குமரகுருபரர்
கருத்து உரை
கடல் போன்ற வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த செல்வமாகிய தமிழ்நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் எல்லாத்துறைகளிலும் ஆளுமைதருகின்ற கல்வியும் சொற்சுவை நிரம்பிய வாக்கும் பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக
விளக்க உரை
- *இன்று குமரகுருபரர் குருபூசை*. இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர்.
- இவர் தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில், சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் பெற்றார்.
- இவர் எழுதிய நூல்கள்
- கந்தர் கலிவெண்பா
- மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
- மதுரைக் கலம்பகம்
- நீதிநெறி விளக்கம்
- திருவாரூர் நான்மணிமாலை
- முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
- சிதம்பர மும்மணிக்கோவை
- சிதம்பரச் செய்யுட்கோவை
- பண்டார மும்மணிக் கோவை
- காசிக் கலம்பகம்
- சகலகலாவல்லி மாலை
- மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
- மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
- தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
- கயிலைக் கலம்பகம்
- காசித் துண்டி விநாயகர் பதிகம்