பாடல்
நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளும் கழுவினும் அதன் நாற்றம் போமோ
கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்
கொண்ட மலம் நீங்காதென்று ஆடுபாம்பே
பாம்பாட்டி சித்தர்
பதவுரை
நாற்றம் உடைய மீனைப் பல தரம் நல்ல தண்ணீர் கொண்டுக் கழுவினாலும் அதனது இயல்பான நாற்றம் போகாது; அது போல அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய பல கூறுகளை கொண்டு உடலால் ஆக்கப்பட்ட மனிதர்கள் என்னதான் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடினாலும் அதன் குற்றம் நீங்காது என்று ஆடு பாம்பே.
விளக்க உரை
- எத்தனை புனித நீராடினாலும் செய்த பாவங்கள் தண்டனைக்குரியவை என்றும், அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு என்று கூறும் பாடல்