பாடல்
அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே
கந்தர் அநுபூதி – அருணகிரிநாதர்
பதவுரை
எங்கும் விரிந்து எதையும் தாங்கும் உறுதியான உள்ளம் கொண்டவனே, மிகுந்த வலிமை உடையவனே, எல்லோராலும் விரும்பப்படுகின்றவனே, தேவர்கள் இடையறாது தியானம் செய்யும் பிரவண சொரூபமானவனே, தேவலோகத்தைத் தாங்குபவனே, கிடைப்பதற்கு அரிதாகிய மெய்யுணர்வாகிய சிவஞானத்தை அடியேனுக்கு உரியவையாக கிடைக்கும் படி தகுதி உடைவனாகும்படி செய்து, எனக்கு உபதேசமும் செய்து அருளி உணர்த்திய பெருமையை என்னவென்று சொல்வது?
விளக்க உரை
- விரி தாரண – தனக்கு அருள் செய்தது போல் உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும்
- முருகன் எல்லாவற்றையும் அருளிக் காப்பாற்றுவதை குறித்த பொருள்.
- தாரகம் – பிரணவம்