சைவத் திருத்தலங்கள் 274 – திருஊறல்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஊறல்

இறைவன் – சுயம்பு மூர்த்தி
நந்தியின் வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டிருந்ததாலும், இறைவன் திருவடியில் நீர் சுரப்பதாலும் இவ்வூருக்கு திருஊறல்
தக்கன் நடத்திய யாகத்தை அழித்து அவன் தலையை வீரபத்திரர் தலையைக் கொய்த தலம்
தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு “ஓ” என்று ஓலமிட்டதால் தக்கோலம்
பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா. அவர் யாகம் நடத்தும் சமயம் அங்கு வந்த காமதேனு பசுவினை அங்கு தங்க கூறுதல். காமதேனு மறுத்தல், அதனால் காமதேனுவினை கட்ட முயல சாபம் பெறுதல். நாரதரின் அறிவுரைப்படி ஈசனை பூஜித்து சாப விமோசனம் பெறுதல். உததி முனிவர் வழிபட்டு வேண்டிக்கொண்டதால் நந்தியெம்பெருமான் தன்வாய் வழியாக கங்கையை வரவித்த சிறப்புடையது இத்தலம்
நர்த்தன நிலையில்(உக்கடி ஆசனத்தில்) தட்சிணா மூர்த்தி
நிறம் மாறும் லிங்கம்(உத்ராயணம் – சிகப்பு நிறம், தட்சிணாயனம் – வெண்மை நிறம்)

தலம்
திருஊறல்
பிற பெயர்கள்
தக்கோலம்
இறைவன்
ஜலநாதேஸ்வரர், ஜலநாதீஸ்வரர் உமாபதீசர்
இறைவி
கிரிராஜ கன்னிகாம்பாள்(மோகன வல்லியம்மை)
தல விருட்சம்
தீர்த்தம்
பார்வதி சத்ய கங்கை தீர்த்தம், குசத்தலை நதி
விழாக்கள்
வைகாசி விசாகம், ஆனிதிருமஞ்சனம், ஆடிப்பூரம், மார்கழி திருவாதிரை, மாசிமகம், தைப்பூசம், திருக்கார்த்திகை.
மாவட்டம்
வேலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 8.00 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை
அருள்மிகு ஜலநாதேஸ்வரர் திருக்கோவில்
தக்கோலம் அஞ்சல்
அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம்
PIN – 631151.
வழிபட்டவர்கள்
சம்வர்த்த முனிவர், காமதேனு, இந்திரன், சந்திரன், எமன், திருமால், பாண்டவர்கள், சப்த கன்னியர், உததி முனிவர், தீர்க்கத முனிவர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 1 பதிகம், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லும் வழியில் தக்கோலம் கூட்ரோட்டில் இருந்து 4 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 244 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது    12 வது தலம்.
ஜலநாதீஸ்வரர் 
 
 
 
கிரிராஜ கன்னிகாம்பாள்
 
 
புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை         1          
பதிக எண்         106          
திருமுறை எண்    7           
பாடல்
கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந்தெய்துதலுங் கலங்கி
மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தா னிடம்வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளு மெய்யுந்நெரிய வன்று
ஒறுத்தருள் செய்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.

பொருள்
(கோபம் கொண்டதால்) கறுத்த மனம் உடையவனாகிய காலன் தன் உயிரை பறிப்பதற்காக வரும் போது அது கண்டு கலங்கிய  மார்கண்டேயனுக்கு அருளியவனும், கோபத்தினால் சினம் கொண்டு வந்த வாள் வித்தையில் வல்லவனாகிய இராவணனின் தலை, தோள், உடல் ஆகியவற்றை நெரித்து அவனுக்கு அருள் செய்தவனுமாகிய சிவபெருமான் விரும்பி உறையும் இடம் திரு ஊறல் ஆகும். அதனை நாம் நினைவோமாக.
கருத்து
சினம் கொண்ட இருவருக்கு அவர்களின் சினம் அடக்கி அவர்களை ஆட்கொண்டு அருளிய திறம் இங்கு சிறப்பாக விளக்கப்படுகிறது.
பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை         1          
பதிக எண்         106          
திருமுறை எண்    8           
பாடல்
நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று
தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரும் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே.
பொருள்
கடல் மீது துயில் கொள்ளும் திருமாலும், ஞானத்தினால் நிறைவுபெற்ற நான்முகனும் தேடி அறிய முடியாதவாறு நிமிர்ந்து நின்றவனும், இப்பரந்து பட்ட நில உலகில் அடியவர்கள் மகிழ்ந்து வணங்க தக்கதாகவும் பாம்பினை இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் திரு ஊறல் ஆகும். அதனை நாம் நினைவில் கொள்வோமாக.
கருத்து
·         நிறைநான் முகனும் – ஞானத்தால் நிறைவு பெற்றவன். முற்றிலும் உணர்ந்தவன்.
·         அரவம் – பாம்பு. கொடிய விலங்குகளும் அவனிடத்தில் அதன் தன்மைகளை இழந்து விடும். மற்றொரு பொருள் யோக மார்க்கத்தில் இருப்பவன்.
·         உள்குதல் – உள் முகமாக நினைத்தல்
இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.
 
 
 

சமூக ஊடகங்கள்