Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
நூலகம்
முரண் – 9
பசி
முரண் – 8
அகமும் புறமும்
கடவுள்
முரண் – 7
ஓங்கி வளர்த்த கட்டிடத்தில்
ஓளிர்ந்தன பொன் நிற எழுத்துகள்
குடிசைப் பகுதி மாற்று வாரியம்
முரண் – 6
மருத்துவமனையில் நோயாளியை
பெயரிட்டு அழைத்தார்கள்
ஆரோக்யம் இங்கே வா
முரண் – 5
குடிசையிலிருந்து ஒலித்தது குரல்
கோடீஸ்வரா சாப்பிட வா
முரண் – 4
இரங்கல் கூட்டதில்
ஓங்கி ஒலித்தன குரல்கள்
தலைவர் வாழ்க
முரண் – 3
வேலைகாரியை அழைத்தார்கள்
ராஜ குமாரி இங்கே வா
முரண் – 2
கடையில் எழுதப்பட்டிருந்தது
திருமகள் வேஸ்ட் பேப்பர் மார்ட்
முரண் – 1
இறைச்சி கடையில் எழுதப்பட்டிருந்தது
அன்பு மட்டன் ஸ்டால்
நிஜங்கள்
கனவுகளோடு விடிகிறது
கவிதைகளோடு முடிகிறது
கவிதைகளோடு முடிகிறது