Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
வாசனைகள்

எப்போதாவது பூக்கின்றன
குறிஞ்சிப் பூக்கள்.
தாயின் மடியினில் இருந்து
தலையசைக்கின்றன சில பூக்கள்.
கைகளை அகல விரித்து
கண்களைக் காட்டி
பயமுறுத்துகின்றன சில பூக்கள்.
முடிவில்லா பயணத்தில்
முழுநீள புன்னகையோடு சில பூக்கள்.
பூக்களின் சிந்தனையில்
பூரணமான வலி வயிற்றினில்
கருமை நிறைந்த இரவுப் பொழுதினில்
எங்கு சென்று தேடுவது
மளிகைக் கடையையும் மருந்துக் கடையையும்
எப்பொதும் பூக்கின்றன
காட்டுச் சாமந்திகள்
ஒரு மாதிரி

சூழ்ந்து செல்லும் ஆறு,
சுழன்று வீசும் காற்று,
கண்களுக்கு இனிய பசுமை,
காதுகளுக்கு இனிய ஒலிகள்,
மனதுக்கு இனிய வாசம்
சந்தோஷத்தின் சாயலில் ஏற்றுக் கொண்ட போது
ஒரு மாதிரி என்றார்கள்.
கால சுழற்சியில் மாறின காட்சிகள்
மூடின கண்கள், சாயல் அற்ற நினைவுகள்
சதா சர்வ காலமும் ஏகாந்ததில் திளைப்பு
இப்பொழுதும் கூறுகிறார்கள் ஒரு மாதிரி
எப்படிதான் வாழ்வது என்ற கேள்விக்கு
எவருமே விடையளிக்கவில்லை.
கவிஞன்
கலைஞன்

ஏதோ ஒரு கணத்தில்
வந்து விடுகிறது
வயிற்றுக்கும் கைகளுக்குமான போட்டி
மயிர் நீப்பீன் உயிர் வாழா கவரிமான்
மானம் கெட்ட வயிற்றுக்கு தெரிகிறதா என்ன
வயிற்றுக்கான வலிகளில்
கைநீட்டி யாசகம் கேட்க எத்தனிக்கையில்
எதிர்படுகின்றன வார்த்தைகள்
அவன் பிறவிக் கலைஞன்
பிழைப்புக்காக கை ஏந்துவானா?
அடை மழை வந்து நனைக்கிறது
வயிற்று நெருப்பின் வலிகளை.
ஐயனார்
பொம்மைகள்
குழந்தைப் பருவங்கள்
கடவுளை விற்றல்
கடவுள் பொம்மைகளை விற்றால் தான் காசு
தெரு ஒர விற்பனை கலைஞன்
தெரு ஒர விற்பனை கலைஞன்