என்ன வாங்கி வந்திருக்கிறாய் மகள் கேட்கையில் மறுதலித்து கைகளை ஆட்டுகிறேன் யேய் பொய் சொல்ற என்று கைகளை ஆட்டி எதிர்ப்படும் வார்தையில் தென்படுகின்றன என்றைக்குமான கடவுளின் பரிச்சயம்
எல்லா நிலைகளிலும் வெளிப்படுகின்றன கவிதைகள். எண்ண ஓட்டத்திலும் எதிர் கொள்ளும் வெற்றியிலும் கவிதைக்கான கருப்பொருள்கள். வெற்றியிலும் பாராட்டிலும் வெறுமைக்கான நிமிடங்களிலும் சந்தோஷத்தின் சாயல் காட்டும் சக தர்மினியிடமும் உணர்வுகளை உள்வாங்க துவங்கிய வேலைகளில் உள்ளிருந்து ஒலிக்கிறது குரல் நாலு காசு சம்பாதிக்க வக்கிலைனாலும் நாற்பது பக்கம் எழுதுவாரு உங்கப்பாரு.
உற்ற பொருள் தேடி உரெல்லாம் பயணம் விதை துளிர்க்க துவங்குகையில் உறுமாறும் வெறுமை துளிர்தல் தாண்டி துளைத்தல் நிகழும் ம்ண்ணின் கீழ் வேர்களாய் துளிர்தவை பரவுதலில் பரவசம் ஏற்படுத்தும் அதையும் தாண்டி அனைத்தும் மாறும் பூக்களாய் கனிகளாய் காலத்தின் மாற்றத்தால் நிலைப்புகள் நீக்கம் கொள்ளும் விழ்ந்து கிடக்கும் பொருள் தேடி விரையும் காகங்கள் கவிதையும் கவிதை சார்ந்த இடமும் பசியோடு ஆயினும் கவிஞன் என்னும் கர்வத்தோடு தலை நிமிர்ந்து நிற்கும் மிருகங்கள்