சுயம் இழத்தல்


வாழ்வினில் என்ன
சுவாரசியம் இருக்கிறது
சுயம் இழத்தல் தவிர

சமூக ஊடகங்கள்

தேனிர்


வெயிலில் ஐஸ்
வண்டிக்காரன்
கையில் தேனிர்

சமூக ஊடகங்கள்

வேஷம்


கடவுள் வேஷம் போட்டுக்
கொண்டு தெருவில் நடந்தாலும்
குரைக்கின்றன நாய்கள்

சமூக ஊடகங்கள்

மனசு


தரும ராசா
உதவி பண்ணுங்கள்
சொன்னவனிடம் மறுதலித்து
சட்டை பையை தொட்டு பார்க்கின்றது கைகள்
உள்ளுகுள் மனைவியிடம்
வாங்கிய ஒற்றை நாணயம்

சமூக ஊடகங்கள்

இடமாற்றம்


கலைத்த குருவி கூட்டின் இடத்தில்
கத்தும் குருவி பொம்மை

சமூக ஊடகங்கள்

அழுகை ஓலி


வெட்டுகையில் கவனித்து பாருங்கள்
மரங்களின் அழுகை ஓலி

சமூக ஊடகங்கள்

வண்ணம்


வாழ்வின் தொடக்கதில்
வாழ்க்கைக்கான வண்ணம் எல்லாம்.
சமாதானதிற்கான நிறம்
வெண்மை
சக்திக்கான நிறம்
சிகப்பு
பசுமை நிறம் பச்சை
உயிரின் மூலமறிதலில்
உண்மையான நிறம் நீலம்
என்றார்கள்.
நாளொடும் பொழுதொடும்
நகர்ந்தன
என் வண்ணம் எல்லாம்.
அழகாய் சமுகம்
கொடுத்திருகிறது எனக்கு நிறம்
நிறமற்றவன் என்று.

சமூக ஊடகங்கள்

மண்குதிரை


புற்கள் இருந்தும்
மேயவில்லை
மண்குதிரை

சமூக ஊடகங்கள்

தாய்மை நினைவுகள்


கட்டிய கட்டிடம் கடக்கையில்
எட்டி பார்கிறது மனது
குழந்தைக்கு கட்டிய தூளியும்
பாடிய தாலாட்டும்

சமூக ஊடகங்கள்

நூலகம்


நூலகத்தில் எழுதப்பட்டிருந்தது
சப்தம் செய்யாதீர்
பாவம் அணில்களுக்கு படிக்க தெரியாது

சமூக ஊடகங்கள்

முரண் – 9


பயிற்சி வாகனத்தில்
எழுதப்பட்டிருந்தது
வேகம்

சமூக ஊடகங்கள்

பசி


நாங்கள் சாதாரணமானவர்கள்
அதனால் தான்
பசி அசாதாரணமாக இருக்கிறது

சமூக ஊடகங்கள்

முரண் – 8


வறுமை ஓழிப்பு மா நாட்டிற்கு பின்
விருந்து
ஐந்து நட்சத்தர ஓட்டலில்

சமூக ஊடகங்கள்

அகமும் புறமும்


வெயிலில் பக்தர்கள்
குளிர் அறையில் கடவுள்

சமூக ஊடகங்கள்

கடவுள்


வெளியே வெப்பத்தின் கொடுமை
இருந்தும் இருட்டறை விட்டு
வெளியே வரவில்லை எந்த கடவுளும்

சமூக ஊடகங்கள்

முரண் – 7

ஓங்கி வளர்த்த கட்டிடத்தில்
ஓளிர்ந்தன பொன் நிற எழுத்துகள்
குடிசைப் பகுதி மாற்று வாரியம்

சமூக ஊடகங்கள்

முரண் – 6

மருத்துவமனையில் நோயாளியை
பெயரிட்டு அழைத்தார்கள்
ஆரோக்யம் இங்கே வா

சமூக ஊடகங்கள்

முரண் – 5

குடிசையிலிருந்து ஒலித்தது குரல்
கோடீஸ்வரா சாப்பிட வா

சமூக ஊடகங்கள்

முரண் – 4

இரங்கல் கூட்டதில்
ஓங்கி ஒலித்தன குரல்கள்
தலைவர் வாழ்க

சமூக ஊடகங்கள்

முரண் – 3

வேலைகாரியை அழைத்தார்கள்
ராஜ குமாரி இங்கே வா

சமூக ஊடகங்கள்