தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருப்பாதிரிப்புலியூர்
- இறைவன் சுயம்பு மூர்த்தி.
- இறைவனின் திருக்கண்ணை இறைவி மூடிய தவறுக்காக மனம் வருந்தி இறைவனை அரூபமாக பூசித்து, இடது கண், இடது தோளும் துடித்து சாபம் நீங்கப் பெற்றத் தலம்.
- அம்மை பாதிரி மரத்தினடியில் தவம் செய்து சிவனாரை மணந்து கொண்ட தலம்.
- நாள் தோறும் அம்பிகையே பள்ளியறைக்கு எழுந்தருளும் தனிச்சிறப்பான சுவாமி கோயில்.
- கடலில் இருந்து கரையேறிய திருநாவுக்கரசர் ‘ஈன்றாளுமாய்’ எனத் தொடங்கும் பதிகத்தில் ‘அதான்றாத்துணையார் இருந்தனன் தன் அடியோங்களுக்கே’, என்று குறிப்பிடுவதால் இப்பெருமான் ‘தோன்றாத்துணை நாதர்’
- திருநாவுக்கரசரை திருஞானசம்பந்தர் முதன்முதலில் ‘அப்பர்’ என்று அழைத்த தலம்
- திருநாவுக்கரசரை கல்லில் பூட்டிக் கடலில் இட்டபோது ‘சொற்றுனை வேதியன்’ என்ற பதிகம்பாடி அவர் கரையேறிய இடம் கரையேறவிட்டகுப்பம் (தற்போது வண்டிப்பாளையம்) இத்தலத்திற்கு அருகாமையில் உள்ளது.
- திருநாவுக்கரசர் அமர்ந்தகோலத்தில் காட்சி.
- வியாக்ரபாதர் வழிபட்டு அருள்பெற்ற பஞ்சபுலியூர் தலங்களில் ஒன்றானதும், புலியின் பாதங்களை வேண்டிப்பெற்றதும் ஆனது இத் திருத்தலம்.
- பாதிரியைத் தலமரமாகக் கொண்டதாலும், புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்) வழிபட்டதாலும் (பாதிரி+புலியூர்).
- வெளிப்பிரகாரத்தில், தல விருட்சமான இரண்டு பாதிரிமரங்கள்
பூத்து காய்க்காத தலவிருட்சமான பாதிரி (சித்திரை மாதம் முழுவதும்). கவசத்துடன் – தலவிருட்சமான ஆதிபாதிரிமரம் - மங்கண முனிவர், இறை வழிபாட்டிற்காக மலர் பறித்து, மகிழ்வுடன் திரும்பி வரும்போது தூமாப்ப முனிவரை கவனிக்காமல் அவரிடம் தான் பெற்ற முயல் வடிவ சாபம் நீங்கப்பெற்றத் தலம். பின் நாளில் வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்)
- கன்னி விநாயகர் வலம்புரிமூர்த்தி. அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் திருக்காட்சி
- துர்க்கை சன்னதியில் அம்மை அருவவடிவில் தவஞ்செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதி. அதன் பொருட்டு உருவமில்லாமல் பீடம்.
திருக்கோயிலூர் ஆதீன சுவாமி அதிஷ்டானம் – வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு அம்மன் கோயிலுக்குப் அருகில் உள்ள சாமியார் தோட்டம் அருகில். - ‘கடை ஞாழலூர்’ என்பது மருவி ‘கடலூர்’
- சந்நிதிவீதியில் ஸ்ரீமத் ஞானியார் சுவாமிகள் மடாலயம்
தலம் | திருப்பாதிரிப்புலியூர் |
பிற பெயர்கள் |
கடைஞாழல், கூடலூர் புதுநகரம், கடைஞாழல், கன்னிவனம், பாடலபுரம், ஆதிமாநகர், உத்தாரபுரம், பாதிரிப்பதி, புலிசை |
இறைவன் | பாடலேஸ்வரர், தோன்றாத்துணைநாதர், கன்னிவனநாதர், சிவக்கொழுந்தீசர், உத்தாரநாதர், கரையேற்றும்பிரான் |
இறைவி | பெரியநாயகி, பிருஹன்நாயகி, தோகையாம்பிகை, அருந்தவநாயகி |
தல விருட்சம் | பாதிரி மரம் ( பாடலம் ) |
தீர்த்தம் | பிரம்மதீர்த்தம்(கடல்), சிவகர தீர்த்தம், கெடில நதி, தென்பெண்ணையாறு, பாலோடை |
விழாக்கள் |
மகாசிவராத்திரி, ஆடிப்பூரம், நவராத்திரி, சஷ்டி, கார்த்திகை சோமவாரங்கள், மார்கழி திருவாதிரை , தை அமாவாசை / மாசிமகம் கடலில் தீர்த்தவாரி, பௌர்ணமி பஞ்சபிரகார வலம், சித்திரையில் வசந்தோற்சவம், வைகாசி 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், சித்திரை சதயத்தில் அப்பர் சதயவிழா, வண்டிப்பாளையம் அப்பர்சாமி குளத்திற்கு ஒருநாள் தீர்த்தவாரி |
மாவட்டம் | கடலூர் |
திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை 7.00 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு பாடலேஸ்வரர் திருக்கோயில் திருப்பாதிரிப் புலியூர் – அஞ்சல் கடலூர் – 607 002. 04142-236728, 98949-27573, 94428-32181 |
வழிபட்டவர்கள் | அகத்தியர், உபமன்யு முனிவர், வியாக்ரபாதர், கங்கை, அக்னி, ஆதிராஜன் |
பாடியவர்கள் |
திருஞானசம்பந்தர் 1 பதிகம், திருநாவுக்கரசர் 1 பதிகம், அருணகிரிநாதர், ஸ்ரீ பாடலேஸ்வரர் தலபுராணம் – திருவாடுதுறை ஆதீனம், இலக்கணம் சிதம்பர முனிவர் ,கலம்பக நூல் |
நிர்வாகம் | திருக்கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம் |
இருப்பிடம் | |
இதர குறிப்புகள் | தேவாரத் தலங்களில் 201 வது தலம் நடு நாட்டுத் தலங்களில் 18 வது தலம். |
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 121
திருமுறை எண் 8
பாடல்
வீக்கமெழும் மிலங்கைக் கிறை விலங்கல்லிடை
ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான்
பூக்கமழும் புனற் பாதிரிப் புலியூர்தனை
நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே
பொருள்
பெருமை மிகுந்த இலங்கைக்கு அரசனாகிய இராவணன், கயிலை மலையினை பெயர்த்த போது அவன் செருக்கு அழித்து, அவன் அலறுமாறு கால் விரலை ஊன்றிய இறைவன் எழுந்தருளி இருப்பதும், மணம் வீசும் மலர்கள் கமழும் நீர் வளம் கொண்டதுமான பாதிரிப்புலியூரை நோக்க வினைகள் மெலிந்து ஒழியும்.
பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 4
பதிக எண் 11
திருமுறை எண் 2
பாடல்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
பொருள்
வேதமான வாசகத்திற்கு நிகர் பொருளாக உள்ளவனாகவும், சோதி வடிவானவனும் அழியாத வீட்டு உலகினை உடைய எம்பெருமானுடைய பொலிவு மிக்க தன்னைத் தவிர வேறு எவரும் இணையாக உள்ள சேவடிகளை உள்ளம் பொருந்தி கைதொழுதலால் கல்லில் இணைத்துக் கடலில் தள்ளி விடபட்டாலும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தே துணையாகச் சேர்வது நமக்கு பெரிய துணையாகும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)