2038ல் – எரிபொருள்கள்

2038ல் – எரிபொருள்கள்

(இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
பெட்ரோல் விலை – இன்று காலை 11.00 மணி நிலவரம் – ரூ. 568/லி. அடுத்த விலை அறிவிப்பு 12.00 மணி செய்திகளில்.

2.
என்ன சார் எல்லா பெட்ரோல் பங்க்லேயும் கூட்டம் 2 கி.மிக்கு நிக்குது.
உங்களுக்கு தெரியாதா, பெட்ரோல் விலை அடுத்த அரை அவர்ல 0.13 காசு குறையப் போகுது.

3.
என்ன சார் பேப்பர்ல விசேசம்.
25 லி. பெட்ரோல் போட்டா 0.100கி வெங்காயம் இலவசமாம்.

4.
பேங்க் வாசலில்
பெட்ரோல் அடகு வைக்க எங்கள் கிளைகளை அணுகவும். 1லி. 511/- ரூ.

5.
அரசியல்வாதிகள் – மற்றவர்கள் கூறுவது போல் எங்களிடம் நேற்று ஒரு பேச்சும் இன்று ஒரு பேச்சும் இல்லை. பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டத்தைப் போக்க இன்று முதல் எரிபொருள் விலை ரூ.25 ஏறுகிறது.

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

ஒரு முறை இசைஞானி ஜப்பான் சென்றிருந்தார். அப்போது ஒரு இசையை கேட்க நேர்ந்தது. அந்த வாத்தியத்தை பற்றியும், அதை வாசிக்கும் கலைஞரைப் பற்றியும் கேட்டறிந்தார். அவரை சந்தித்து சென்னை வரும் போது தன்னை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அந்த கலைஞர் சென்னை வந்த போது 5 நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து, அந்த கருவியை 15 நாட்களில் வாசிக்கும் திறமையை பெற்றார்.

அந்த கருவியை வாசிக்க முழுமையாக 2 ஆண்டுகள்  ஆகும்.

சமூக ஊடகங்கள்

2038 – மின்னணு மூலம் விற்பனை

மின்னணு மூலம் விற்பனை –    e- sale  

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.

1. நட்சத்திர ஆமைகள் மற்றும் நாய்கள் விற்பனைக்கு.

2. சார், என் பொண்டாட்டிய விக்க முடியுமா சார்?

3. வயதானவர்களை இடம் மாற்றி விற்க, இங்கே அணுகவும். 50 முதல் 60 வயதான பெண்களுக்கு முன்னுரிமை அளித்து விற்றுத்தருகிறோம்.

4. புளுட்டோ கிரகத்தில் இடம் விற்பனைக்கு.

5. வெங்காயம் என்ற சொல்லுக்கு, நாங்கள் காப்புரிமை பெற்றிருக்கிறோம். அதை நீங்கள் 10 முறை பயன்படுத்த எங்களிடம் அணுகவும். 

சமூக ஊடகங்கள்

ஆடிப் பெருக்கு

ஆடிப் பெருக்கு

தமிழ் மாதம் ஆடியில் வரும் 18ம் தேதி ஆடிப் பெருக்கு.

வீட்டில் வயதானவர்களுடன்(பெரும் பாலும் – பாட்டி) ஒரு குட்டிக் குழந்தைகள் அவர்கள் உலகங்களுடன் செல்வார்கள்.

மயிலாடுதுறை – சுடுகாட்டுத்துறை, முங்கில் பாலம்(இப்போது இல்லை) துறை – 2, படித்துறை விஸ்வநாதர் துறை(கூட்டம் குறைவுதான்), மற்றும் லாகடம்.

காவிரி நதிக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இது நிகழும்.

டேய் பசங்களா, கொஞ்சம் ஆட்டம் போடாதீங்கடா, தண்ணீ கலங்கிடும்( அப்பவே 2 ஆள் ஆழத்துக்கு தண்ணி)

நீங்க வேணும்ணா வேற துறைக்கு போய் சாமி கும்பிடுங்க .

எப்படியா இருந்தாலும் வீட்டுக்குத்தான வருவ, அப்ப பேசிக்கிறேன்.

கடந்த வருடத்தில் திருமணமான தம்பதியரின் மாலைகள் வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் மாட்டி வைக்கப் பட்டிருக்கும். அதை வயதானவர்கள் ஆற்றில் விட எடுத்து வருவார்கள்

டேய், பசங்களா, இந்த மாலை எல்லாம் நடு ஆத்துல விடுங்கடா பாப்போம். – பாட்டிகள்,
‘ஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்’ –  இது கூட்டம்.

படைக்கப்பட இருக்கும் பொருளில் ஒரு மஞ்சள் கயிரு இருக்கும்.
‘டேய் கயரு கட்டிக்க வாங்கடா’
கடைசியாக வரேன், (யார் அதிக நேரம் நீரில் இருப்பவர்களே வென்றவர்கள்)

டேய் கம்னேட்டி(நான் அறிந்த வரையில் இது கும்பகோணம் மற்றும் அவை சார்ந்த பகுதி மக்கள் திட்டும் பாஷை) சீக்கிரம் கரை ஏறுடா, தலையில தண்ணி கொட்டுது.

அப்போதுதான் சப்பரம் ஞாபகம் வரும். (சிறிய வடிவ தேர். உள்ளே சாமி படம் ஒட்டப் பட்டிருக்கும்). அலங்காரம் முடிந்து அது வீடு வரையில் இழுத்து வரப் படும். கூடவே நண்பர்கள் கூட்டம்.

கலர் அன்னங்கள் – படையல் வீட்டில், மறுபடியும் விளையாட்டு தொடரும் – இது வீதிகளில்.

காவிரியினில் நீர் உண்டோ இல்லையோ, நினைவுகளில்….

சமூக ஊடகங்கள்

2038 – கடவுள் மறுப்புக் கொள்கை

1.
நாங்கள் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள். அதனால் ஏற்கவில்லை என்பதே என் கருத்து.(பெயர் – Saaraavanaakumaar)

2.
தெய்வம் என்பது பொய். (வீடுகளில் பூஜை அறை வீடு மாதிரி இருக்கும்)

3.
எண் கணிதம் என்பது பொய். இந்த காலத்தில இத நம்ப முடியுமா.(கார் நம்பர் 5ன்னு இருக்கணும்.  எல்லா எழுத்தையும்  கூட்டினாலும் 5 வரணும்

4.
நான் அடுத்த வருஷம் அமெரிக்கா போலாம்னு இருக்கேன்.
இந்த தேதி நல்லா இருக்கும் சார்.
என்னா சார் நீங்க, தேய் பிறை சதுர்த்திய நாள் குறிக்கிறீங்க. 6ம் தேதியும், சஷ்டியும் வரமாதிரி குறிச்சி குடுங்க.

5.
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கடவுள் மறுப்பு பத்தி எழுதினத்துக்கு 50 பேர் பாராட்டியிருக்காங்க.

சமூக ஊடகங்கள்

2038 – போக்குவரத்து

1.
இன்னைக்கு ரொம்ப நல்ல நாள்.
ஏன்?
பீச்ல இருந்து தாம்பரம் வரைக்கும் வண்டில ஒரு அவர்ல வந்துட்டேன்.

2.
திருவான்மீயூர் – ஒவ்வொரு வீட்டிற்கும் 10 கார் 20 டூவீலர் இருக்கிறது by RTO. (தற்போது – 2 கார், 3 டூவீலர்)

3.
வாகன விற்பனை குறைவால் எல்லா வாகனமும் உற்பத்தி 0.25 அவருக்கு  நிறுத்தி வைப்பு.(தற்போது 1 வாரம்)

4.
எல்லாரும் 10000 ரூ நோட்டா கொடுத்தா என்ன செய்யறது. ரூ 1000மா கொடுங்க.

5.
உங்க வண்டிய 125வது மாடியில பார்க் பண்ணுங்க, ஒரு நிமிஷத்திற்கு ரூ. 100/-

சமூக ஊடகங்கள்

2038 – ஊடகம்

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.

1.
ரஜினி முதன் முதலில் குடித்த சிகிரெட் – எங்களது புத்தகத்தில் மட்டும்.

2.
இன்றைய நிலவரம்
தங்கம் விலை
வெள்ளி விலை
பெட்ரோல் விலை
டீசல் விலை
கற்பழிப்புகள்
கொலை – 9632871(சென்னை மட்டும். சிறுவர்கள் கணக்கில் சேர்க்கப் படவில்லை).
நீக்கப் பட்ட அமைச்சர்கள் – 3
சேர்க்கப் பட்ட அமைச்சர்கள் – 51

3.
பெட்ரோல் வரலாறு காணா விலை ஏற்றம் – 0.01 பைசா. பெட்ரோல் பங்குகளில் அடிதடி. 100 பேர் சாவு.

4.
உலக அழகி கர்ப்பம். வியாபாரம் நஷ்டம் 1000 கோடி.(தற்போது 50 கோடி)

5.
இங்கு வெளியாகி இருக்கும் கூப்பனை வெட்டி வந்து எங்களிடம் கொடுத்தால், ஒன்றுக்கு ஒன்று கார் ஃப்ரி(நீங்கள் விரும்பும் மாடல்).

சமூக ஊடகங்கள்

2038 – மருத்துவம்

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.

1.
சார், லைன்ல வாங்க சார். நாங்களும் எங்க சொந்தக்காரன்களை ‘கருணைக் கொலை’ செய்யத்தான் நிக்கிறோம். எங்க டோக்கன் நம்பர் – 9876231. எப்படியும் கிடைச்சிடும். கவலைப்படாதீங்க.

உங்களுக்கு மாமியார், எனக்கு என் பொண்டாட்டி சார்.

2.
சார், மேடம் இங்க பாருங்க, இந்த இதயத்தை வாங்குங்க சார். லைப் டைம் வாரண்டி சார் – கடைகளில்.

3.
அதிசயம். டாக்டர்கள் சாதனை. கருவில் இருக்கும் 3 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை.

4.
இங்கு மனித மூளையின் பதிவுகள் 10 நிமிடத்தில் பிரதி எடுத்துத் தரப்படும்.

5.

Hi, This is XXX , we want sperm donors. Because my husband have zero sperm count. He candidate should be Master degree graduate from I** and height – 5ft 9 inch, body weight 72kg. You will receive one time payment of Rs. 99 Lacs

சமூக ஊடகங்கள்

2038 – சமூகம்

2038  – சமூகம்
1.
என்னப்பா, உனக்கு குழந்தை பிறக்க போவுதாமே, அதுக்கு முனைவர் பட்டம் படிக்கிறத்துக்கு பணம் கட்டி வச்சிட்டியா?

2.
சார் பின்னால வாங்க சார். அப்ளிகேஷன் வாங்க நான் போன வருஷத்திலிருந்து நிக்கிறேன். குறுக்க வராதிங்க சார்.

3.
எங்க பள்ளில PRE K.G ரொம்ப ஈசியா இடம் கிடைச்சிடும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒன்னு தான். உங்க பேர்ல தி. நிகர்ல இருக்கிற 10 கிரவுண்ட நிலத்தை எங்களுக்கு கொடுத்துடுங்க.

4.
ஏங்க, இப்பவாது பொண்டாட்டி பேச்சை கேளுங்க. அடுத்த வருஷம் நமக்கு குழந்தை பிறந்திடும். இப்ப பணத்தை பேங்கல போட்டாதான் அவன் 58 வயசுக்கு அது கிடைக்கும்.

5.
6மாத குழந்தை. என்ன அந்த ஸ்கூல போடாத. நல்ல ஸ்கூல போடு.

சமூக ஊடகங்கள்

தந்தி சேவை

தந்தி சேவை வரும் ஜூலை மாதத்தோடு நிறுத்தப்பட இருக்கிறது.

பெரும்பாலும் தந்தி என்பது துக்க செய்தி என்பது மூத்த தலைமுறை கருத்து. என் வரையில் அது நினைவுகள்.

அப்பா R.D.O வாக கடலூரில் வேலை பார்த்து வந்தார்கள். நான் அப்போது திருவல்லிக்கேணியில் தங்கி இருந்தேன்.

கடலூரில் இருந்து அப்பா தந்தி அனுப்பி இருந்தார். Start immediately .

‘யார் வயதானவர்கள்’?

‘மவுத் வாங்குற லிஸ்ட்ல யாரு இருக்கா’?

‘யாருக்கு என்ன பிரச்சனை’?

‘விடியுமா’ – கு.பா.ர கதையை விட பல எண்ணங்கள்.

‘டேய், வண்டிய சீக்கிரம் ஓட்டுங்கடா’. அப்போ Only N.H.2. No N.H.4.

‘கடவுளே என்ன வேதனை இது’

கடலூர் மஞ்ச குப்பம் அருகினில் பஸ். ‘சீக்கிரம் போங்கடா’

வேகமாக வீடு நோக்கி ஒட்டம். உண்மை. நடக்கவில்லை.

வீட்டில் அம்மா, அப்பா.

‘என்ன ஆச்சு. எதுக்கு தந்தி அடிச்சிங்க’

‘அது ஒன்னும் இல்ல. நீ ரஜினி ரசிகன் தானே. ரிசர்வேஷன் இல்ல இல்லியா, அதனால பாட்ஷா படத்துக்கு டிக்கட் சொல்லி வச்சிருக்கிறேன்’

Image – Internet

சமூக ஊடகங்கள்

சொர்க்கம்

சமீபத்தில் திருமண விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். வாசலில் நுழையும் போது இசைக் கச்சேரி. வேண்டாம் மச்சான் வேண்டாம்  இந்த .. என்ற பாடல். மிகப் பெரும்பாலான மனிதர்கள் ரசித்தார்கள். (வேறு என்ன சொல்ல)

திருமண தம்பதியருக்கு அன்பளிப்பு அளிக்க காத்திருக்கும் ஒரு கூட்டம்.  ஒரு புறம் ஏறி, மற்றொரு புறம் இறங்க வேண்டும். தீடிரென இரண்டு பேர் எதிர் முனையில் ஏறி, அன்பளிப்பு கொடுத்து விட்டு இறங்கி விட்டனர்.சினிமா அரங்கமா என சந்தேகம் வந்து விட்டது.

உணவு அரங்கத்தில் மீண்டும் கூட்டம். பந்தி ஆரம்பித்து சாம்பார் தான் சாப்பிடுகிறார்கள். அதற்கும் சரவண பவனில் சீட்டு வைத்து காத்திருப்பது போல். சாப்பிட்டுக் கொண்டிருப்பவரின் பின்னால் காத்திருக்கும் கூட்டம்.

இந்த அக்கினி நம்மை காக்கட்டும் என்று தொடரும் மந்திரங்கள் எங்கே போயின.

திருமணங்கள் சந்தோஷ தருணங்கள். ஆனால் எது சந்தோஷ தருணங்கள் என்பதில் சந்தேகம்.

சமூக ஊடகங்கள்