தல வரலாறு (சுருக்கம்) – திருமயிலாப்பூர்
· உமை அம்மை மயிலாக இருந்து பூஜித்த இடம். மயில் + ஆர்ப்பு + ஊர்= மயிலாப்பூர். மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர்
· சிங்கார வேலர் சூரனை அழிக்க அம்மை அப்பனை பூஜித்து சக்தி வேல் பெற்ற இடம்
· பிரம்மனின் கர்வம் நீங்கி படைப்பு ஆற்றல் பெற்ற இடம்
· சுக்ராச்சாரியார் தனது கண்களை மீண்டும் பெற்ற இடம்
· மனதினைக் கோயிலாக கொண்டு வழிபட்ட வாயிலார் நாயனார் தோன்றிய தலம்.
· சோமுக அசுரன் களவாடிச் சென்ற வேதங்களை மகா விஷ்ணு மீட்டு வந்து இங்கு சேர்த்ததால் – வேதபுரி,
· சுக்ராச்சார்யார் ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால் – சுக்ரபுரி
· மயிலை மற்றும் திருவொற்றியூரில் வாழ்ந்த கபாலிகர்கள் ஈசனை போற்றி வழிபட்டதால் – கபாலீச்சரம்
· திருஞானசம்மந்தப் பெருமான் எலும்புகளை ஒன்று சேர்த்து பூம்பாவை ஆக்கிய தலம்
· கலிங்க தேச அரசன் தருமனின் மகன் சாம்பவன் தனது பெரும் பாவங்கள் தீர பங்குனி உத்திரத்தன்று இந்தத் தீர்த்தத்தில் நீராடி முக்தி அடைந்த தலம்
· ஈசான மூலையில் காக வாகனத்தின் மீது வீற்றிருக்கும் சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி
· நின்ற திருக் கோலத்தில் அம்பிகை ஸ்ரீகற்பகாம்பாள் அபய-வரத ஹஸ்தத்துடன்
· கபாலீஸ்வரரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள் – திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், திரு மயிலை யமக அந்தாதி, கபாலீசர் பதிகங்கள், திருமயிலைக் கபாலீசர் இரட்டை மணிமாலை, திருமயிலைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருமயிலாப்பூர் பதிகங்கள், கங்காதர நாவலர் இலக்கியங்கள், ஸ்ரீகபாலீச்சரர் தோத்திரம், சென்னைத் திருமயிலை ஸ்ரீகபாலீச்சரர் துதிப்பா மாலை, கபாலீசர் குறுங்கழி நெடில், திருமயிலை நான்மணிமாலை, பாபநாசம் சிவன் கீர்த்தனைகள், திருமயிலைக் குறவஞ்சி, திருமயிலைக் கபாலீசன் மாலை, திருமயிலை வெண்பா அந்தாதி, திருமயிலை ஸ்ரீகபாலீசுவரர் துதி
· ஸ்ரீகற்பகாம்பாள் மீது பாடப்பட்ட இலக்கியங்கள் – கற்பகவல்லியம்மை பதிகம், திருமயிலைக் கற்பகவல்லி அஷ்டகம், கற்பகவல்லி மாலை, கற்பகவல்லியார் பஞ்சரத்தினம், ஸ்ரீகற்பகாம்பாள் பாடல்கள், கற்பகாம்பிகை அந்தாதிப் பதிகம், திருமயிலாபுரிக் கற்பகாம்பிகை மாலை, திருமயிலைக் கற்பகாம்பிகை பிள்ளைத் தமிழ்
· ஸ்ரீசிங்காரவேலரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள் – திருமயிலை சிங்காரவேலர் பிள்ளைத் தமிழ், திருமயிலைக் கோவை, சிங்கார வேலர் மாலை, திருமயிலைக் குகன் பதிகங்கள், மயிலைச் சண்முகப் பஞ்சரத்தின மாலை, அருட்புகழ், மயிலைச் சிங்காரவேலர், இரட்டை மணிமாலை, திரு மயிலைச் சிங்கார வேலர் பதிகம்
· மயிலைவாழ் தெய்வங்களைப் போற்றும் நூல்கள் – திருமயிலைப் பிள்ளைத் தமிழ், திரு மயிலைக் கோவை, திருமயிலை உவமை வெண்பா, திருமயிலை வெண்பா, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பதிகங்கள், திருக்குருகூர் ஞானசித்த சுவாமிகளின் பதிகங்கள், தாச்சி அருணாசல முதலியார் பதிகங்கள், கி.ஊ.பா. கங்காதர நாவலரின் நூல்கள்
தலம்
|
மயிலாப்பூர்
|
பிற பெயர்கள்
|
வேதநகர், சுக்கிரபுரி, பிரம்புரம், சுந்தரபுரி, கபாலி மாநகர்,கபாலீச்சரம், திருமயிலாப்பூர், கந்தபுரி, புன்னை வனம். பிரம்மபுரி , வேதபுரி, மயூரபுரி, மயூரநகரி, பத்மநாதபுரம், வாமநாதபுரம்
|
இறைவன்
|
கபாலீசுவரர், புன்னை வனத்து ஈசன், வேத நகரினான், சுக்கிர புரியான், கபாலீச்சரத்தினான், பூம்பாவை ஈசன், புன்னை வன மயூரநாதன், கபாலி மாநகரான்
|
இறைவி
|
கற்பகாம்பாள்
|
தல விருட்சம்
|
புன்னை
|
தீர்த்தம்
|
கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம்,வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம்
|
விழாக்கள்
|
சித்ரா பௌர்ணமி,வசந்த உற்சவம், வைகாசி – லட்ச தீபம்; விசாகம்; ஞானசம்பந்தர் விழா 10-ஆம் நாள்; ஆனி – 1008 சங்காபிஷேகம் (கும்பாபிஷேக திரு நட்சத்திரம்); பவித்ரோத்சவம்; ஆனித் திருமஞ்சனம், ஆடி – ஆடிவெள்ளி 5 வாரம்; பன்னிரு திருமுறை 12 நாள் விழா, ஆவணி – விநாயகர் சதுர்த்தி; லட்சார்ச்சனை, புரட்டாசி – நவராத்திரி விழா; நிறைமணிக் காட்சி, ஐப்பசி – கந்தர்சஷ்டி விழா 6 நாள்; சிங்காரவேலர் லட்சார்ச்சனை; ஐப்பசி திருவோணத்தன்று ஸ்ரீராமன், கபாலீஸ்வரரை வணங்கி வழிபட்டு அமுதூட்டிய ஐதீக விழா, கார்த்திகை – கார்த்திகை சோமவாரம்; சங்காபிஷேகம் 5 வாரம்; கார்த்திகை தீபம்; சுவாமி லட்சார்ச்சனை, மார்கழி – உஷத்கால பூஜை; திருவெம்பாவை 10 நாள் விழா; ஆருத்திரா தரிசனம், தை – அம்பாள் லட்சார்ச்சனை; தெப்பத் திருவிழா 3 நாள், மாசி – மகா சிவராத்திரி; மாசி மகம் கடலாட்டு விழா, பங்குனி- பிரம்மோற்சவம் 10 நாள்; விடையாற்றி 10 நாள்.
|
மாவட்டம்
|
சென்னை
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை.
நிர்வாக அதிகாரி,
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை – 600 004.
+91- 44 – 2464 1670.
|
வழிபட்டவர்கள்
|
சிங்கார வேலர்,பிரம்மன், சுக்ராச்சாரியார்
|
பாடியவர்கள்
|
திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர், சேக்கிழார், பாபநாசம் சிவன்
|
நிர்வாகம்
|
இந்து சமய அறநிலையத்துறை
|
இருப்பிடம்
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 266 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 24 வது தலம்
|
கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்
ஓவ்வொரு மாதமும் வரும் திருவிழாவினைச் சொல்லி காண வாராயோ என்று திருஞான சம்மந்தர் பூம்பாவையை அழைக்கிறார்.
பூரட்டாதி – அன்ன தானம்
ஐப்பசி – ஓணம்
கார்த்திகை – விளக்கீடு
மார்கழி – திருவாதிரை
தை – பூசம்
மாசி – மகம் – கடலாடுதல்
பங்குனி – உத்திரம்
சித்திரை – அஷ்டமி
ஊஞ்சமல் திருவிழா
பாடியவர் திருஞான சம்மந்தர்
|
திருமுறை இரண்டாம் திருமுறை
|
பதிக எண் 47
|
திருமுறை எண் 1
|
பாடல்
மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
பொருள்
தேன் பொருந்திய அழகிய புன்னை மரங்கள் நிறைந்து இவ்விடம். இள மயில்கள் ஆர்ப்பரிக்க கூடியது இவ்வூர். இவ்வூரில் விருப்பமுடன் அமர்ந்தவன் இந்த இறைவன். அவன் மீது விருப்பமுடன் அவன் அடியார்களுக்கு அமுது செய்விக்கும் காட்சியைக் காணாமல் போவாயோ? பூம்பாவாய்.
கருத்து
- இள மயில்கள் ஆர்ப்பரித்தல் – மழை வரும் காலத்தில் மயில் ஆர்ப்பரிக்கும். இது தொடந்து நிகழ்வதால் மயில்கள் ஆர்ப்பரிக்கின்றன. (அஃதாவது – மாதம் மும்மாரி பெய்கிறது)
- விருப்பமுடன் அமர்ந்தவன் என்பதனால் மயிலையே கயிலையே என்பது விளங்கும்.
- உருத்திர பல்கணத்தார்-மாகேசுரர் – அடியவர்
- விழாக் காலங்களில் அமுது செய்வித்தல் – அன்னம் படைப்பு
- அட்டு-திருவமுது
- இட்டல்-இடுதல்
- இது பூரட்டாதியில் நிகழ்வது.
பாடியவர் திருஞான சம்மந்தர்
|
திருமுறை இரண்டாம் திருமுறை
|
பதிக எண் 47
|
திருமுறை எண் 4
|
ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
பொருள்
ஊர்ந்து வரும் அலைகள் உடையட கடலை அடுத்தது உயர்வான மயிலாப்பூர். அங்கு கூரிய வேல் வித்தையில் வல்லவர்களும் வெற்றி கொள்பவர்களும் உடைய சேரிகள்(சிறு குழக்கள் வாழும் இடம்) இருக்கின்றன. அங்கு மழை தரும் சோலைகள் இருக்கின்றன. அதில் அமர்ந்திருக்கும் கபாலீச்சரத்தின் ஆதிரை(திருவாதிரை) நாள் காணாமல் போவாயோ பூம்பாவாய்.
கருத்து
- உயர் மயிலை என்பதனால் – மயிலையின் சிறப்பு விளங்கும்.
- கூர்தரு வேல்வல்லார் – கூர்மையான வேல்களை உடையவர் – வெற்றி கொள்பவர் அஃதாவது – தோல்வி அற்றவர்கள்
- கார்தரு சோலை – மழையத் தரும் சோலைகள் உடைய