பாடல்
நங்காய் இதென்னதவம்
நரம்போ டெலும்பணிந்து
கங்காளம் தோள்மேலே
காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள்
காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத்
தரித்தனன்காண் சாழலோ
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – கங்காளம் காதலித்தது, தவக்கோலம் அல்ல என்றும் அயன், மால் என்பவரும் நிலையாமையுடையரே என்பது உணர்த்துதம் பொருட்டு ஈசன் திருமேனி எலும்பு மாலை கொண்டு விளக்கம் அளிக்கும் பாடல்.
பதவுரை
ஏ! தோழியே! நரம்போடு கூடிய எலும்புக் கூட்டினை அணிந்தும், எலும்புகளை விரும்பி தோளில் சுமந்தான், இது என்ன தவ வடிவம் என்று புதியவள் வினவினாள்; எலும்புக்கூடு வந்த விதத்தைக் கேட்பாயாக கால, கால வேற்றுமையால் ஒவ்வொரு ஊழிக்கால முடிவிலும் திருமால்,பிரமன் ஆகிய இருவரது வாழ்நாளை முடிவு செய்து அவர்கள் எலும்பைத் தரித்தனன் என்பதை அறிக.
விளக்க உரை
- சீர் – செல்வம், அழகு, நன்மை, பெருமை, புகழ், இயல்பு, சமம், ஓசை
- கங்காளம் – எலும்புக்கூடு
- செத்தார்தம் எலும்பு அணிந்து சேஏறித்திரிவீர் எனும் திருமுறை பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத்தக்கது
1 |
மனுஷ வருஷம் |
1 தெய்வீக நாள் |
360 |
தெய்வீக நாள் |
1 தெய்வீக ஆண்டு |
12000 |
தெய்வீக ஆண்டுகள் |
1 சதுர் யுகம் |
கிருத யுகம் |
4800 |
தெய்வீக ஆண்டுகள் |
17,28,000 |
மனித ஆண்டுகள் |
திரேதா யுகம் |
3600 |
தெய்வீக ஆண்டுகள் |
12,96,000 |
மனித ஆண்டுகள் |
துவாபர யுகம் |
2400 |
தெய்வீக ஆண்டுகள் |
8,64,000 |
மனித ஆண்டுகள் |
கலி யுகம் |
1200 |
தெய்வீக ஆண்டுகள் |
4,32,000 |
மனித ஆண்டுகள் |
சதுர் யுகம் |
12000 |
தெய்வீக ஆண்டுகள் |
43,20,000 |
மனித ஆண்டுகள் |
71 |
சதுர் யுகம் |
1 மநுவந்தரம் |
8,52,000 |
தெய்வீக ஆண்டுகள் |
1000 |
சதுர் யுகம் |
1 கல்பம் |
432,00,00,000 |
மனித ஆண்டுகள் |
2 |
கல்பம் |
1 பிரம்ம நாள் |
864,00,00,000 |
மனித ஆண்டுகள் |
360 |
பிரம்ம நாள் |
1 பிரம்ம ஆண்டு |
3,11,040,00,00,000 |
மனித ஆண்டுகள் |
2,00,00,000 பிரம்மாவின் ஆயுள் – விஷ்ணுவின் ஒரு நாள்
1,00,00,000 விஷ்ணுவின் ஆயுள் – சிவன் புன்னகைக்கும் நேரம் *
*நீட்சியும் குறுக்கமும் சிவம் மட்டுமே அறியும்