
பாடல்
எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை
மூதுரை – ஔவையார்
கருத்து – கற்பக மரத்தின் கீழ் நின்றாலும் வினையின் காரணமாக விதிக்கப்பட்டதே கிடைக்கப் பெறும் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
தாம் எண்ணிய செயல்கள் எண்ணியவாறு நடக்கவில்லையே என்று வருந்திக்கொண்டிருக்கும் மூடத்தனமான நெஞ்சமே! நீ நீனைத்தபடி எல்லாச் செயலும் நடந்துவிடுமா? கருத்தில் ஒருமை கொண்டு, நினைத்தவற்றை எல்லாம் வழங்கத் தக்கதான கற்பக மரத்திடம் சென்று கேட்டாலும், விதியில் எழுதியுள்ளபடி நமக்குக் கிடைக்கக் கூடியதான எட்டிக்காயே கிடைக்கும் என்றால் அது நம் முன் வினைப் பயனே.
விளக்கஉரை
- காஞ்சிரங்காய் – எட்டிக்கொட்டை, எட்டிக்காய்