சைவத் திருத்தலங்கள் 274 – திருத்துறையூர்

 தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருத்துறையூர்

 • சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடிய போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும், பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்து கரையில் இறங்கிய பிறகு இறைவன் சுந்தரர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டப் பின், “நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்” என்று அசரீரி வாக்குக்கு இணங்க, சுந்தரருக்கு சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து தவநெறி உபதேசம் செய்த தலம்
 • சந்தானக் குரவர்களில் ஒருவரான அருணந்திசிவாச்சாரியார் முக்தித் தலம்). (சமாதிக்கோயில் கோயிலுக்கு நேரெதிரில்). (புரட்டாசி மாத பூர நட்சத்திரம் – அருணந்திசிவாச்சாரியார் குருபூஜை)
 • சுந்தரரை சிவனார் கிழவனார் வடிவில் தோன்றி ஆட்கொண்ட இடம் கிழப்பாக்கம். இத்தலத்திற்கு அருகாமையில்.
 • சிவன், சுந்தரருக்கு திருவடி சூட்டி குருவடிவுடன் எழுந்தருளி அருமறைகளை உபதேசித்த தலம்.
 • சித்திரைமாத முதல் வாரம் சூரிய வழிபாடு
 • அம்பாள் சந்நிதி எதிரில் உள்ள தல மரத்தின் அருகில் அகத்தியர் வழிபட்ட லிங்கத்திருமேனி.
 • அஷ்டபுஜ மகாகாளியம்மன் திருக்கோயில் – மாமன்னர் விக்ரமாதித்தன் மற்றும் மகாகவி காளிதாசர் ஆகியோருக்கு அருள்புரிந்த அம்மன் அமையப்பெற்றத் தலம்
 • சிற்ப சிறப்புகள்
 1. உற்சவத்திருமேனிகளுள் சாட்டை பிடித்த நிலையில் காட்சி தரும் குதிரைச்சொக்கர் வடிவம்
 2. கருவறை முன்மண்டப தூணில் சுந்தரர் ஓடத்தில் இத்தலம் வந்தடைந்த வரலாறு சிற்பம்
 3. தட்சிணாமூர்த்தி சந்நிதிக்குப் பக்கத்தில் உமாமகேஸ்வரர் சுந்தரருக்கு காட்சி தந்த சிற்பம்

 

தலம் திருத்துறையூர்
பிற பெயர்கள் திருத்தளூர்
இறைவன் சிஷ்டகுருநாதேஸ்வரர்,பசுபதீஸ்வரர், தவநெறியப்பர்
இறைவி சிவலோகநாயகி, பூங்கோதைநாயகி
தல விருட்சம் கொன்றை மரம்
தீர்த்தம் சூரிய தீர்த்தம்
விழாக்கள் வைகாசி விசாகம், மாசிமகம், பங்குனி உத்திரம், திருவாதிரை, நவராத்திரி, மகாசிவராத்திரி, கார்த்திகை தீபம், கந்தசஷ்டி, ஐப்பசி அன்னாபிஷேகம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சிஷ்டகுருநாதர் திருக்கோவில்
திருத்துறையூர் அஞ்சல், பண்ருட்டி வட்டம்
கடலூர் மாவட்டம். 607205
04142-248498, 94448-07393
வழிபட்டவர்கள் நாரதர், வசிஷ்டர், அகத்தியர், சூரியன், ராமர், சீதை, திருமால், பிரம்மன், பீமன்
பாடியவர்கள் சுந்தரர், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம் பண்ருட்டியில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 205 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  15    வது தலம்.

பாடியவர்           சுந்தரர்
திருமுறை         ஏழு
பதிக எண்          13
திருமுறை எண் 2             

பாடல்

மத்தம்மத யானையின் வெண்மருப் புந்தி
முத்தங்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால்
பத்தர்பயின் றேத்திப் பரவுந் துறையூர்
அத்தாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே

பொருள்

மயக்கங்கொண்ட மதயானைகளின் தந்தங்களைத் தள்ளிக்கொண்டுவந்தும், அழகிய முத்துக்களைக் கரையில் எறிவதும் ஆகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ளதும், அடியவர் பலகாலமும் வந்து தொழுது வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே! உன்னிடத்தில் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.

பாடியவர்           சுந்தரர்
திருமுறை         ஏழு
பதிக எண்          13
திருமுறை எண் 6        

பாடல்

மட்டார்மலர்க் கொன்றையும் வன்னியுஞ் சாடி
மொட்டாரக்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால்
கொட்டாட்டொடு பாட்டொலி ஓவாத் துறையூர்ச்
சிட்டாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே.

பொருள்

தேன் நிறைந்த மலர்களை உடைய கொன்றை மரம், வன்னி மரம் இவைகளை முறித்து, அவற்றின் அரும்புகளோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரையில், வாத்திய முழக்கமும், ஆடலும், பாடலும் நீங்காது விளங்குகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள மேலானவனே, உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவெண்ணைநல்லுர்

ஓவியம் : இணையம்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவெண்ணைநல்லுர்

 • ஈசன் நஞ்சுண்ட காலத்தில் அது அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர்
 • மறைகளும் , தாருகாவனத்து முனிவர்களும் தவஞ்செய்து அருள்பெற்ற தலம்
 • சுந்தரர், இறைவனை ‘பித்தன்’ என்று வசைவு பொழிய, காரணங்களை விளக்கியப்பின் இறைவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு “பித்தனென்றே பாடுவாயென” மொழிய, சுந்தரமூர்த்தி சுவாமிகள் ‘பித்தாபிறைசூடீ’ எனப் முதல் தேவாரப்பதிகம் பாடி ஆட்கொள்ளப்பட்டு அருள்வாழ்வு பெற்ற தலம்
 • கோவில் உள்ளே – சுந்தரர் வழக்கு நடந்த ‘வழக்கு தீர்த்த மண்டபம்’
 • சிவனார் முதியவர் வடிவில் வந்து சுந்தரரை தடுத்தாட்கொள்ள வந்த போது அணிந்திருந்த பாதுகைகள் இன்றும் இக்கோயிலில் பாதுகாப்பாக இருக்கின்றன.
 • இத்தலத்திற்கு மிக அருகில் சுந்தரரின் திருமணம் நின்ற இடமான மணம் தவிர்ந்த புத்தூர் (மணப்பந்தூர்)
 • சடையப்ப வள்ளல் வாழ்ந்த தலம். அவர், கம்பரைக் கொண்டு ராமாயணம் பாடுவித்தத் தலம்.
 • அர்ஜுனனுக்கு குழந்தைவரம் அளித்த விஜயலிங்க சிவனாருக்கு சந்நிதி
 • நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் தனிச்சன்னதி
 • இந்திரன் வழிபட்ட சுந்தரலிங்கர் சந்நிதி
 • மகாவிஷ்ணு வழிபட்ட சங்கரலிங்கர் சந்நிதி
 • அர்ஜுனன் தனது பாவங்களைப் போக்கிக்கொண்ட தலம்
 • சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் வாழ்ந்து உபதேசம் பெற்ற தலம்(அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார்)
 • ஐப்பசி சுவாதியில் மெய்கண்டார் குருபூஜை (வடக்கு வீதியின் கோடி)

 

தலம் திருவெண்ணைநல்லுர்
பிற பெயர்கள் திருவருள்துறை, திருவருட்டுறை, திருவெண்ணெய்நல்லூர்
இறைவன் கிருபாபுரீஸ்வரர் ( வேணுபுரீஸ்வரர், அருட்டுறைநாதர், தடுத்தாட்கொண்டநாதர், அருட்கொண்டநாதர், ஆட்கொண்டநாதர் )
இறைவி மங்களாம்பிகை ( வேற்கண்ணியம்மை )
தல விருட்சம் மூங்கில்

தீர்த்தம்

தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம்

விழாக்கள் பங்குனி உத்திரம் , ஆடி சுவாதி, ஆருத்ரா தரிசனம் , ஆவணி மூல புட்டு உற்சவம் , கந்தசஷ்டி
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவெண்ணைநல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
PIN – 607203
04153-234548, 99942-70882, 93456-60711, 94424-22197 ( மெய்கண்டார் கோயில்)
வழிபட்டவர்கள் நவக்கிரகங்கள், இந்திரன், மகாவிஷ்ணு,அர்ஜுனன்
பாடியவர்கள் சுந்தரர், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்

திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவு, விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ தொலைவு

இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 200 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில் 14  வது தலம்.

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        ஏழாம்
பதிக எண்          1
திருமுறை எண் 1

பாடல்

பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே.

பொருள்

பித்தனே, சந்திர பிறையைக் தலையில் சூடிய பெருமை உடையவனே, அருளாலனே, பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் சார்ந்ததான `அருட்டுறை` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்து அருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகிய என்னை, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேச வைத்தது பொருந்துமோ!

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        ஏழாம்
பதிக எண்          1
திருமுறை எண் 4

பாடல்

முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அடிகேள்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே.

பொருள்

இடபத்தை ஊர்தியாக உடையவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ள  உள்ள திருவெண்ணெய்நல்லூர் சார்ந்ததான `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அவ்வாறான பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித்து அருளியதால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழ்ந்து மூப்படைந்து வருந்தவும் ஆன துன்பங்களை அறுத்தேன். நெறி கெட்டவனாகி பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறுக்காமல் ஏற்றறு அருள்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவிடையாறு

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவிடையாறு

 

 • மூன்று நிலைகளை உடைய கோபுரம். கொடிமரம் அற்று 2 பலிபீடம் மற்றும் நந்தி
 • ஈசனுக்கும் அன்னைக்கும் நடுவில் கணபதி குழந்தை வடிவில். மேல் இரு கைகளில் லட்டும் பலாச்சுளையும். கீழ் இரு கைகளில் அபய முத்திரையும் கரும்பும்
 • முருகர் ‘கலியுகராமப் பிள்ளையார்’ என்று போற்றப்படுகிறார்.
 • அகத்தியர் வழிபட்ட லிங்கம் அகத்தீஸ்வரர். அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது.
 • கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அதை சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டதால் அவரை  பூமியில் பிறக்கும் படி சபித்தார். சாப விமோசனம் நீங்க அந்த சாப விமோசனம் நீங்க வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற்றார்.
 • சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கின்றன.
 • சுந்தரர் பாடியுள்ள 39 வைப்புத் தலங்களுக்கு நிகரானது என்று அவரது பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • சந்தானச்சாரியர்களில் ஒருவரான மறைஞானசம்பந்தர் அவதாரத் தலம். இவருக்கு அருள் செய்த விநாயகர் இருப்பிடம் வயல்வெளியில் தனிக்கோயிலில்
 • மாசி மாதம் 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

 

தலம் திருவிடையாறு
பிற பெயர்கள் திரு இடையாறு, T. எடையார்
இறைவன் மருதீஸ்வரர், இடையாற்றீசர், இடையாற்றுநாதர், கிருபாபுரீஸ்வரர்
இறைவி ஞானாம்பிகை, சிற்றிடை நாயகி
தல விருட்சம் மருதமரம்
தீர்த்தம் சிற்றிடை தீர்த்தம்
விழாக்கள் தைமாதம் ஆற்றுத்திருவிழா
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு மருதீஸ்வரர் திருக்கோவில்,
மருதீஸ்வரர் தேவஸ்தானம்
டி.எடையார் அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 607203
94424-23919, 98847-77078, 04146-216045, 04146-206515
வழிபட்டவர்கள் சுகமுனிவர் , பிரம்மன் , அகத்தியர் , சுந்தரர் , மறைஞான சம்பந்தர்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் திருக்கோயிலூரில் இருந்து சுமார் 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள சித்தலிங்க மடத்தை அடுத்து அமைந்துள்ளது இத்தலம் .
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 203 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 13 வது தலம்.

ஞானாம்பிகை உடனாகிய மருதீஸ்வரர்

                             மருதீஸ்வரர் ஞானாம்பிகை

புகைப்படங்கள் : தினமலர்

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்           31
திருமுறை எண்  8

பாடல்

தேச னூர்வினை தேயநின் றான்திரு வாக்கூர்
பாச னூர்பர மேட்டி பவித்திர பாவ
நாச னூர்நனி பள்ளிநள் ளாற்றை யமர்ந்த
ஈச னூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொருள்

ஒளிவடிவினனும், உயிர்களின் தீவினைகள் குறையுமாறு செய்து நிற்பவனும், திருவருளாகிய தொடர்பினை உடையவனும், மேலிடத்தில் இருப்பவனும், தூயவனும், பாவத்தைப் போக்குபவனும், `நள்ளாறு` என்னும் தலத்தை விரும்பி இருக்கின்ற முதல்வனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள்  ` ஆக்கூர், நனிபள்ளி, இடையாறு, இடைமருது` என்னும் இவைகளே.

கருத்து

தேசனூர் , பாசனூர் , நாசனூர் , ஈசனூர் ` என்பன வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர்.

 

 

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்           31
திருமுறை எண்  9

பாடல்

தேச னூர்வினை தேயநின் றான்திரு வாக்கூர்
பாச னூர்பர மேட்டி பவித்திர பாவ
நாச னூர்நனி பள்ளிநள் ளாற்றை யமர்ந்த
ஈச னூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொருள்

எல்லா உயிர்கட்கும் பேறாகின்றவனும், பிறையை அணிந்த சடையை உடையவனும், (மாயையை விளக்கி ஞானத்தை) தெளியப்படுபவனும், திருமகளுக்குத் தலைவனாகிய திருமாலை ஒரு பாகத்தில் உடையவனும், இடபத்தை உடையவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் பெருவேளூர், குரங்காடுதுறை, கோவலூர், இடையாறு, இடைமருது` என்னும் இவைகளே.

 

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஅறையணிநல்லூர்

 • அகழி அமைப்புடைய கருவறையில் மிகப்பழமையான சுயம்பு மூலவர்
 • அரை + அணி – பாறை + அழகு – பாறையில் அழகாக அமர்ந்திருப்பவர்
 • தனிச்சன்னிதியில், திருஞானசம்பந்தர் தாளமேந்தி நின்ற கோலத்தில்
 • சமணர்கள் இக்கோயில் கதவை அடைத்து திருஞானசம்பந்தரை நுழைய விடாமல் தடுத்த போது, அவர் பதிகம் பாடி கதவை திறந்த தலம்.
 • சம்பந்தர் சிவனாரை தரிசிக்க வசதியாக பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடதுபுறமாகவும் சற்று சாய்ந்த அமைப்பு
 • சம்பந்தர் இங்கிருந்தே திருவண்ணாமலையை தரிசித்த தலம். (அடையாளமாக கொடிமரத்தின் அருகே 3 அடி உயர பீடத்தில் சம்பந்தரின் பாதம் )
 • ரமண மகரிஷியை திருவண்ணாமலைக்கு வருமாறு அம்பாள் ஆணையிட்ட தலம்
 • திருக்கோயிலூர் ஸ்ரீஞானானந்த சுவாமி இங்குள்ள கோபுரத்தில் அமர்ந்து தவஞ்செய்து அருள்பெற்ற தலம்
 • சனீஸ்வரர், காகத்தின் மீது காலை ஊன்றிய கோலம் , நின்ற கோலம் என இரு வடிவங்களில் காட்சி
 • பீமன் குளம் – கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில்
 • மூர்த்தங்கள் அற்று ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக்கோயில்களாக ஐந்து அறைகள்
 • மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி சன்னதி – ஸ்ரீதேவி கையில் முத்திரை பதித்த தண்டம் , இடப்புறத்தில் பெண், வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஆண்.

 

தலம் திருஅறையணிநல்லூர்
பிற பெயர்கள் அறையணி நல்லூர், அரகண்ட நல்லூர்
இறைவன் அதுல்யநாதேஸ்வரர், ஒப்பிலாமணீஸ்வரர் , அறையணிநாதர்
இறைவி சௌந்தர்ய கனகாம்பிகை , அருள் நாயகி , அழகிய பொன்னம்மை
தல விருட்சம் வில்வமரம்
தீர்த்தம் தென்பெண்ணையாறு
விழாக்கள் வைகாசியில் 1௦ நாட்கள் பிரம்மோற்சவம்,  மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை தீபம்
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில்
ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் கோவில் தேவஸ்தானம்
அரகண்டநல்லூர் அஞ்சல்,
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 605752
04153-224745, 93456-60711, 99651-44849
வழிபட்டவர்கள் நீலகண்டமுனிவர் , கபிலர், பஞ்ச  பாண்டவர்கள், பிரசண்டமுனிவர், மெய்ப்பொருள் நாயனார், நரசிங்க முனையரையர், இராமலிங்க சுவாமிகள்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்
நிர்வாகம்
இருப்பிடம் திருக்கோயிலூர் – விழுப்புரம் சாலையில் திருக்கோயிலூரில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவு,

விழுப்புரத்தில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவு

இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 202 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 12 வது தலம்.

அழகிய பொன்னம்மை உடனாகிய அதுல்யநாதேஸ்வரர்

                         அதுல்யநாதேஸ்வரர்  அழகிய பொன்னம்மை

புகைப்படங்கள் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை         2
பதிக எண்          77
திருமுறை எண் 3   

பாடல்

என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்
பின்பினாற்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று
முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் றாள்களுக்
கன்பினாரறை யணிநல்லூர் அங்கையாற்றொழு வார்களே.

பொருள்

எலும்பு மாலையை அணிந்தவர்; கனலும் சூலத்தை ஏந்தியவர்; சிறந்த பிறைமதியை உச்சியில் சூடியவர்;. தலையின் பின்னே தாழ்ந்து தொங்கும் சடையினை உடைய  தலைக்கோலம் உடையவர்; பிறப்பற்றவர் என்று அறையணிநல்லூர் இறைவரைக் கைகூப்பித் தொழுபவரே வலிமைமிக்க மும்மூர்த்திகளும் தொழுது வணங்கும் முக்கண்மூர்த்தன் திருவடிகளில் அன்புடையவர் ஆவர்.

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை         2
பதிக எண்          77
திருமுறை எண் 5         

பாடல்

தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழு தேவன்நீ
ஆயினாய்கொன்றை யாயன லங்கையாயறை யணிநல்லூர்
மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்
பாயினாயதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.

பொருள்

தீப்போல விளங்கும் செம்மேனி உடைவயனே! தேவர்களால் தொழப்பெறும் தேவனாக நீயே ஆனவன்! கொன்றை மலர் அணிந்தவனே! அனலைக் கையில் ஏந்தியவனே! அறையணிநல்லூரை அடைந்து வழிபடுபவரின் பழவினைகளைத் தீர்ப்பவனே! கொடிய காலனைக் அழித்தவனே! ஒலிக்கும் கழலணிந்தவனே! பரமனே உன் திருவடிகளைப் பணிகின்றேன்.

 (இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கோவிலூர்

274

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருக்கோவிலூர்

 

 • அட்ட வீரட்டத் தலங்களில் இரண்டாவது தலம். சிவனார் அந்தகாசூரனை சம்ஹாரம் செய்த வீரச்செயல் புரிந்த தலம்.
 • அந்தாகசூரன் எனும் அசுரனை அழிக்க ஈசனால் 64 பைரவர்கள் மற்றும் 64 பைரவிகள் தோற்றுவிக்கப்பட்ட தலம்
 • முருகர் தெய்வீகன் என்ற இளவரசனாக பச்சைக்குதிரையோடு குகமுனிவரின் யாகத்தீயில் தோன்றி காரண்டன் வல்லூரன் என்ற இரு அசுரர்களை சம்ஹரித்து மக்களின் துயர்போக்கி பாரியின் மகள்களான அங்கவை , சங்கவையை மணந்த தலம்
 • முருகர் அசுரனைக் கொன்ற பாவம் தீர சிவனாரை வழிபட்ட தலம்
 • சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம்
 • வாஸ்து சாந்தி என்ற ஐதீகம் தோன்றிய தலம்
 • அம்பாள் திரிபுர பைரவி அவதாரத்தலம்
 • சப்தமாதர்கள் அவதாரத்தலம்
 • ஔவையார் விநாயகர் அகவல் பாடியருளிய தலம்
 • ஔவையாரை சுந்தரருக்கு முன்பு கயிலாயத்தில் சேர்ப்பித்த கணபதியான பெரியானைக்கணபதிக்கு உள்பிரகாரத்தில் சந்நிதி
 • பைரவர் வாகனம் இல்லாமல் திருக்காட்சி
 • கோயிலுக்கு அருகின் ஸ்ரீமத் ஞானியார் சுவாமி மடலாயம்
 • அருகினில் குகை நமச்சிவாயர் சமாதி, சுவாமி ஞானானந்தகிரி சுவாமிகளின் தபோவனம், ஸ்ரீ ரகோத்தமசுவாமி பிருந்தாவனம்
 • மெய்ப்பொருள் நாயனார் அரசாண்ட தலம். (ஆலய நுழைவுவாயில் உட்புற மண்டபத்தூணில் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம்)
 • கபிலர் பாரிவள்ளலின் மகள்களை திருமுடிக்காரிக்குத் திருமணம் செய்வித்து , பின் வடக்கிருந்து உயிர்நீத்த தலம். ஆற்றின் நடுவில் கபிலர் குகை.
 • ராஜராஜ சோழன் பிறந்த தலம்.
 • குந்தவை நாச்சியார் திருப்பணிகள் செய்துள்ள தலம்.
 • பாடல் பெற்ற தலமான அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) இங்கிருந்து சுமார் 3 கி.மி. தொலைவு.

 

தலம் திருக்கோவிலூர்
பிற பெயர்கள் அந்தகபுரம், மலையமான் நாடு , கீழையூர், கோவலூர் வீரட்டம், திருக்கோவலூர்
இறைவன் வீரட்டேஸ்வரர், அந்தகாந்தர்
இறைவி சிவானந்தவல்லி, பெரியநாயகி , பிருஹன்நாயகி
தல விருட்சம் வில்வமரம் , சரக்கொன்றை
தீர்த்தம் தென்பெண்ணையாறு, தட்சிண பிணாகினி மற்றும் ருத்ர , கபில , கண்ணுவ , ராம , பரசுராம , யம , பிதிர் , சப்தஇருடியர் , சூரிய , அக்னி  தீர்த்தங்கள்
விழாக்கள் சித்திரையில் வசந்தோற்சவம், ஆனித்திருமஞ்சனம்,ஆடி வெள்ளிக்கிழமைகள், ஐப்பசி அன்னாபிஷேகம் , கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்,சஷ்டியில் லட்சார்ச்சனை, ஆருத்ரா தரிசனம், மார்கழியில் மாணிக்கவாசகர் திருவிழா, நவராத்திரி, மகாசிவராத்திரி, சூரசம்ஹாரம்
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
கீழையூர், திருக்கோவிலூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 60575704153-253532 , +91-93448-79787 , +91-94862-80030 , +91-98426-23020 , +91-98423-10031 , +91-93456-60711
வழிபட்டவர்கள் விநாயகர், முருகர், ராமர், பரசுராமர், கிருஷ்ணன், காளி, ஏகாதச ருத்ரர், இந்திரன், யமன், காமதேனு, சூரியன், குரு, கண்வர், ரோமசமுனிவர், கபிலர், மிருகண்டு முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர், காமன், குபேரன், வாணாசூரன், சப்தரிஷிகள், ஆதிசேஷன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம், திருநாவுக்கரசர் 1 பதிகம் சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் திருவண்ணாமலையில் இருந்து சுமார் 37 கிமீ, விழுப்புரத்தில் இருந்து சுமார் 37 கிமீ
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 201 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 11 வது தலம்.

அருள்மிகு பெரியநாயகி  உடனாகிய வீரட்டேஸ்வரர்

                                    வீரட்டேஸ்வரர்         பெரியநாயகி

புகைப்படங்கள் : தினமலர்

 

பாடியவர்             திருஞானசம்பந்தர்
திருமுறை          1
பதிக எண்            46
திருமுறை எண்  8

 

பாடல்

கல்லார் வரையரக்கன் றடந்தோள் கவின்வாட
ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்
பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
வில்லா லெயிலெய்தா னாடும்வீரட் டானத்தே.

பொருள்

கயிலை மலையை பெயர்த்து எடுத்த இராவணனின் பெரிய தோள்களின் அழகு வாடுமாறும் அவனை வருந்துமாறும் செய்து பின் அவனுக்கு அருள் பல செய்தும், முப்புரங்களை வில்லால் எய்து அழித்தும், தனது பெருவீரத்தைப் புலப்படுத்திய பற்கள் பொருந்திய பிளந்தவாயை உடைய வெள்ளிய தலைமாலையைச் சூடிய இறைவன் இத்திருவதிகை வீரட்டானத்தே ஆடுவான்.

கருத்து

கல்லார் வரை – கயிலையை
கவின் – அழகு
ஒல்லை – விரைவாக
காலந் தாழ்க்க அடர்ப்பின் அவனிறந்தேபடுவான் என்னுங் கருணையால்.
பல் ஆர் பகுவாய – பற்கள் பொருந்திய பிளவுபட்ட வாயையுடைய.

 

பாடியவர்           சுந்தரர்
திருமுறை         7
பதிக எண்           17
திருமுறை எண்  10         

பாடல்

மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்
   தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்
   வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கஒண் ணாததோர் வேழத்
   தினையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிடம் ஆவது
   நந்திரு நாவலூரே.

பொருள்

தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அவன் கர்வத்தை அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் மிகவும் அடக்கமாக  இருந்து அதை பிறரிடம் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும், தடுக்க இயலாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.

கருத்து

நடுக்கங் கண்டார் – அஞ்சுவித்தார்

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

 

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருநெல்வெண்ணை

274

 

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருநெல்வெண்ணை

 • ஈசன் சுயம்பு மூர்த்தி
 • 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டத் தலம்
 • இறைவழிபாட்டை மறந்திருந்த மக்களை, ஈசன் மழையை பெய்வித்து, ஏரி குளம் ஆகியவற்றை உடைத்து நெல்லைப் பெற்றுக் கொண்டு மழையை நிறுத்தி அவர்களுக்கு பரிசாக தங்கம் நிரம்பிய குடங்களை பரிசாக அளித்தத் தலம்.
 • சிவன், நெல்லை அணையாக கட்டியத் தலம் ‘நெல் அணை’
 • திருஞான சம்பந்தர் திருத்தல யாத்திரை வரும் போது இருட்டியதால், ஈசன் அம்பாளிடம் சொல்லி அவருக்கு வழிகாட்டி அழைத்துவரப்பட்டத் தலம்.
 • அம்பாள் திருஞானசம்பந்தர் எதிரில் நின்று அழைத்ததால் ‘எதலவாடி’
 • சனகாதி முனிவர்கள் ( சனகர் , சனந்தனர் , சனாதனர் , சனற்குமாரர் ) வழிபட்ட தலம்
 • ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று அதிகாலையில் சிவனாருக்கு சூரியவழிபாடு நடைபெறும் தலம்.
 • ஞானசம்பந்தர் கையில் தாளமின்றி, கை கூப்பிய நிலையில் உள்ள வடிவம், சுந்தரர், நடன சுந்தரரான வடிவம், அப்பர் பெருமானும் கை கூப்பிய நிலையில் உள்ள வடிவம்
 • அதிகார நந்தி இரண்டு காலகளையும் இணைத்து கை கூப்பி வணங்குவது போன்ற அமைப்பு.

 

தலம் திருநெல்வெண்ணை
பிற பெயர்கள் நெல்வெண்ணெய், ‘நெல் அணை, எதலவாடி
இறைவன் சொர்ணகடேஸ்வரர், வெண்ணெயப்பர் , நெல்வெண்ணெய்நாதர்
இறைவி பிருஹன்நாயகி, நீலமலர்க்கண்ணி
தல விருட்சம் புன்னைமரம்
தீர்த்தம் பெண்ணையாறு
விழாக்கள் மகா சிவராத்திரி , சனிப்பெயர்ச்சி,கார்த்திகை தீபம், மாசிமகம், மார்கழி திருவாதிரை
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சொர்ணகடேஸ்வரர் – நெல்வெணெயப்பர் திருக்கோயில்
நெய்வெயைகிராமம் – கூவாடு அஞ்சல்
(வழி) எறையூர் – உளுந்தூர்ப்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம் – 607 201

04149-209097, 04149-291786, 94862-82952
கிருஷ்ணமூர்த்தி குருக்கள் 9047785914

வழிபட்டவர்கள்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 200 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 10 வது தலம்.

நீலமலர்க்கண்ணி உடனாகிய சொர்ணகடேஸ்வரர்

சொர்ணகடேஸ்வரர்       நீலமலர்க்கண்ணி

புகைப்படங்கள் : தினமலர்

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         3
பதிக எண்           96
திருமுறை எண் 6

பாடல்

நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே

பொருள்

நெற்றிக்கண்ணை உடையவரும், திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவரும், அடியவர்கட்கருளும் பண்புடைய பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியை உடைய வருமாகிய சிவபெருமானே! அவ்வாறு பிறைபோன்ற நெற்றியுடைய உமா தேவியை உடைய உம்மை வழிபடுதலே ஞான நூல்களைக் கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         3
பதிக எண்           96
திருமுறை எண் 8

 

பாடல்

நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
றரக்கனை யசைவுசெய் தீர
அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய்
திருக்கவல் லாரிட ரிலரே

பொருள்

நெருங்கிய சோலைகள் சூழ்ந்து அழகுடன் விளங்கும் திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்ருது அருள்பவரும், அரக்கனான இராவணனை வலிகுன்றச் செய்தவருமான சிவபெருமானே! அவ்வாறு அரக்கனை வலிகுன்றச் செய்தவரான உம்மை அன்புடன் வணங்குபவர்கள் துன்பமே இல்லாதவர்கள் ஆவர்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருமுதுகுன்றம்

274

 • ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவர் தானே ஒரு மலையாகத் தோன்றி அருள் செய்தார். எனவே பழமலை.
 • சுந்தரர் ஈசனிடம் பொன்பெற்று இங்குள்ள மணிமுத்தாற்றில் இட்டு அதை திருவாரூர்க் கமலாலய தீர்த்தத்தில் எடுத்துக்கொண்டத் தலம்.
 • 4 புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவர்கள், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவில்.
 • பாதாள விநாயகர் – முதல் வெளிப் பிரகாரத்தில் சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ள கிழக்கு நோக்கிய விநாயகர் சந்நிதி.
 • மூன்றாம் பிரகாரத்தில் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்பு
 • சைவ சமயத்தில் உள்ள 28 ஆகமங்களை, 28 லிங்கங்களாக முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளத் தலம். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் எனவே இக்கோயில் ஆகமக்கோயில்.
 • ஆதி காலத்தில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணி வேலை செய்தவர்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து கூலியாக கொடுக்க அவை அத்தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப பொற்காசுகளாக மாறிய தலம்.
 • இத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம்
 • 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருநமசிவாயர் என்னும் மகான் கிழத்தி என்று நாயகியைப்பாட, ‘கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டு வர இயலும்’ எனக் கேட்க அடுத்த பாடலில் இளமை நாயகியாய் பாடியதால் இளமை நாயகியாய் வந்து உணவளித்த தலம்.
 • சக்கரதீர்த்தம் – ஆழத்துப்பிள்ளையார் சந்நிதி அருகில் திருமால் சக்கரம் கொண்டு உருவாக்கியது
 • அனைத்தும் ஐந்தாக கொண்டு விளங்கும் தலம்.
 1. தலத்தின் ஐந்து பெயர்கள் – திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, விருத்தகிரி
 2. சிவனாரின் பஞ்ச பெயர்கள் – விருத்தகிரீஸ்வரர், விருத்தகிரிநாதர், முதுகுன்றீஸ்வரர், பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர்
 3. ஐந்து கோபுரங்கள் – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்
 4. ஐந்து பிரகாரம் – தேரோடும் பிரகாரம், கைலாசப்பிரகாரம், வன்னியடிப் பிரகாரம், அறுபத்துமூவர் பிரகாரம், பஞ்சவர்ண பிரகாரம்
 5. ஐந்து கொடிமரங்கள். அவற்றிற்கு முன்புள்ள நந்திகள் இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி
 6. ஐந்து உள்மண்டபங்கள் – அர்த்தமண்டபம், இடைகழிமண்டபம், தபனமண்டபம், மகாமண்டபம், இசைமண்டபம்
 7. ஐந்து வெளிமண்டபம் – இருபதுகால் மண்டபம், தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபச்சித்து மண்டபம், சித்திர மண்டபம்
 8. ஐந்து வழிபாடுகள் – திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
 9. ஐந்து தேர் – விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், பழமலைநாதர், பெரியநாயகி என பஞ்சமூர்த்திகளுக்கும் தனித்தனி தேர்
 10. பஞ்ச மூர்த்தங்கள் – விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், சிவனார், அம்பாள்
 11. பஞ்ச விநாயகர்கள் – ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜகணபதி , வல்லபை கணபதி
 12. சிவனாரை தரிசித்த ஐவர் – ரோமச முனிவர், விபச்சித்து முனிவர், நாத சர்மா, அநவர்த்தினி, குமாரதேவர்.

 

தலம் திருமுதுகுன்றம்
பிற பெயர்கள் திருமுதுகுன்றம் , விருத்தகாசி , விருத்தாசலம் , நெற்குப்பை , விருத்தகிரி
இறைவன் விருத்தகிரீஸ்வரர் , பழமலைநாதர் , முதுகுந்தர்
இறைவி விருத்தாம்பிகை,  பெரிய நாயகி  , பாலாம்பிகை  இளைய நாயகி
தல விருட்சம் வன்னிமரம்
தீர்த்தம் மணிமுத்தாறு , நித்யானந்தகூபம் மற்றும் அக்னி , குபேர , சக்கர தீர்த்தங்கள்
விழாக்கள் ஆடிப்பூர திருவிழா, வைகாசி வசந்த உற்சவம், மார்கழி திருவாதிரை, மாசிமகம் 10 நாள் பிரம்மோற்ஸவம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 9..00 மணி வரைஅருள்மிகு பழமலைநாதர் திருக்கோவில்
விருத்தாசலம்
விருத்தாசலம் அஞ்சல்
கடலூர் மாவட்டம் , PIN – 606001
வழிபட்டவர்கள் திருமால் , பிரம்மன் , அகத்தியர் , தேவர்கள் , விதர்க்கணன் , விபச்சித்து முனிவர் , கலிங்கன் , குமாரதேவர் , சுவேதன் , ஞானக்கூத்தர் , கச்சிராயர் , குரு நமச்சிவாயர்
பாடியவர்கள் திருநாவுக்கரசர் – 1 பதிகம், திருஞானசம்பந்தர் – 7 பதிகம், சுந்தரர் – 3 பதிகம், அருணகிரிநாதர் – 3 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 23 கிமீ, கடலூரில் இருந்து சுமார் 60 கிமீ, பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 83 கிமீ, சிதம்பரத்தில் இருந்து சுமார் 45 கிமீ
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 199 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 9 வது தலம்.

விருத்தகிரீஸ்வரர்

விருத்தகிரீஸ்வரர்

விருத்தாம்பிகை

விருத்தாம்பிகை

புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிக எண்          12
திருமுறை எண் 8          

 

பாடல்

செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்
கதுவாய்கள்பத் தலறீயிடக் கண்டானுறை கோயில்
மதுவாயசெங் காந்தண்மலர் நிறையக்குறை வில்லா
முதுவேய்கண்முத் துதிரும்பொழின் முதுகுன்றடை வோமே.

 

பொருள்

பொல்லா மொழிகளைக் கருதிக் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் வடுவுள்ள  வாய்கள் பத்தும் அலறும்படி கால்விரலால் ஊன்றிய அடர்த்த சிவபிரானது கோயில் விளங்குவதும், தேன் நிறைந்த இடம் உடைய செங்காந்தள் மலர்களாகிய கைகள் நிறையும்படி முதிய மூங்கில்கள் குறைவின்றி முத்துக்களை உதிர்க்கும் பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருமுதுகுன்றை நாம் அடைவோம்.

 

கருத்து

செதுவாய்மைகள் கருதி – பொல்லாச் சொல்லை எண்ணி
கதுவாய்கள் – வடுவுள்ளவாய்

 

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்          25
திருமுறை எண் 1          

பாடல்

பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் மெரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடியேன்இட் டளங்கெடவே.

பொருள்

பொன்னைப்போலும் திருமேனியை உடையவரே, புலியினது தோலை இடுப்பில் அணிந்தவரே, நன்கு செய்யப்பட்ட மூன்று மதில்களையும் முன்பு எரித்தவரே, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே, அடிகளே, மின்னல் போலும் நுண்ணிய இடையை யுடையவளும், `பரவை` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுதற்கு நீவிர் என் செய்தவாறு!

கருத்து

இட்டளம் – துன்பம் . ` இட்டளங்கெட என்செய்தவாறு  – , ` துன்பத்தை நீக்குகின்றீர் என்று நினைத்து முயல்கின்ற எனக்கு , நீர் துன்பத்தை ஆக்கினீர் ` என்றபடி

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

 

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருநாவலூர்

274

தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருநாவலூர்

 • மூலவர் சற்று உயரமான பாணத்துடன் சிறிய கருவறையில் கிழக்கு நோக்கி திருக்காட்சி
 • பார்வதி சிவனாரை வழிபட்டு அவரை மணந்துகொண்ட தலம்.
 • உமையன்னை உடன் வந்த சூலினி என்ற சக்தி தனது  சூலாயுதத்தால் நிலத்தில் ஊன்றி உண்டாக்கப்பட்ட தீர்த்தம். பாதாளகங்கை வெளிப்பட்டது சாம்பூநத தீர்த்தம். முருகப்பெருமான் தனது வேற்படையால் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். இதுவே சக்தி பில தீர்த்தமாகும். சாம்பூநத தீர்த்தமும் விநாயகர் அளித்த மலர்களையும் பயன்படுத்தி மகாசிவராத்திரியன்று முதலிரண்டு ஜாமங்களில் அபிஷேக ஆராதனைகள், பில தீர்த்த நீர் கொண்டு அடுத்த இரண்டு காலங்களிலும் உமை பூஜை செய்த தலம்.
 • சடையனாரும் , இசைஞானியாரும் (சுந்தரரின் தாய்) வாழ்ந்து முக்திபெற்ற தலம்
 • சுந்தரர் பிறந்த தலம்
 • இரு மனைவியர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் சூழ, எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி திருக்காட்சி
 • கோயிலுக்குப் பக்கத்தில் சுந்தரர் மடாலயத்தில் சுந்தரர் கையில் செண்டுடன் காட்சி
 • சுந்தரரை ஆட்கொள்ள சிவனார் முதியவர் வேடத்தில் வந்தபோது அணிந்திருந்த பாதுகைகள் – இப்பொழுதும் பாதுகாப்புடன். குருபூசை நாள் : ஆடி – சுவாதி.
 • சுக்கிரன் வழிபட்ட தலம்
 • சூரியன் திசைமாறி மூலவரை பார்த்தவாறு அமைப்பு. சுக்கிரனுக்கு எதிரில் அவர் வழிபட்ட சுக்கிரலிங்கம்
 • தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின் மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் கோலத்தில் காட்சி
 • திருமால் ஈசனை வழிபட்டு நரசிம்ம அவதாரம் எடுக்கும் ஆற்றலை பெற்ற தலம்
 • திருமாலின் யோக அக்னி தாக்கி, ஆதி சேஷன் விஷம் வெளிப்பட கருமை நிறமாக மாறிய கருடன். பின் அவர் சாம்பூநத தீர்த்தத்தில் நீராடி அவரது மேனியில் கருமை நீங்கி வெண்ணிறமும் புத்தொளியும் ஏற்பட்ட தலம். இதனால் கருடனுக்கு காலாந்தகன் என்றும் பெயர்
 • பங்குனிமாதம் 23 – 27 நாட்களில் சூரிய ஈசனின் மேல்வழிபாடு
 • கிருதயுகத்தில் திருமாலும், திரேதாயுகத்தில் சண்டிகேஸ்வரரும், திரேதாயுகத்தில்  சண்டிகேஸ்வரரும், துவாபரயுகத்தில் பிரம்மனும், கலியுகத்தில் சுந்தரரும் வழிப்பட்ட தலம்
 • திரேதாயுகத்தில் வன்னிவனமாக விளங்கிய இப்பகுதியில் ஒரு பசு இங்கு தோன்றியிருந்த லிங்கத்தின் மீது பரிவு கொன்டு ஆறு காலம் பாலாபிஷேகம் செய்து பூசித்தது. புலியால் கொல்லப்பட இருந்த பசுவை காப்பாற்றியதால் ஈசனார் பசுபதி
 • கருவறை சுவற்றில் சண்டிகேஸ்வரர் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள்
தலம் திருநாவலூர்
பிற பெயர்கள் ஜம்புநாதபுரி , திருநாமநல்லூர்
இறைவன் பக்தஜனேஸ்வரர், திருநாவலேஸ்வரர் , ஜம்புநாதேஸ்வரர்
இறைவி மனோன்மணியம்மை, நாவலாம்பிகை , சுந்தரநாயகி , சுந்தராம்பிகை
தல விருட்சம் நாவல் மரம்
தீர்த்தம் கோமுகி தீர்த்தம் , கருட நதி
விழாக்கள் ஆவணி உத்திர நட்சத்திர நாளில் சுந்தரர் ஜனனவிழா, ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று சுந்தரர் குருபூஜை, சித்திரைத்தேர்விழா, தமிழ்புத்தாண்டு பஞ்சமூர்த்திகள் மற்றும் சுந்தரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், ஆடிப்பூரம்,
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு பக்த ஜனேஸ்வரர் திருக்கோவில்
திருநாவலூர் அஞ்சல்
உளுந்தூர்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம் – 607204
முத்துசாமி சிவம் : 94433 82945
செந்தில் குருக்கள் : 9486150809
வழிபட்டவர்கள் பிரம்மன் , சண்டிகேஸ்வரர் , இந்திரன் , அஷ்டதிக்பாலகர்கள் , சூரியன் , சப்தரிஷிகள்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம் உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 198 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 8 வது தலம்.

பக்தஜனேஸ்வரர்

பக்தஜனேஸ்வரர்

மனோன்மணியம்மை

மனோன்மணியம்மை

புகைப்படங்கள் : தினமலர்

பாடியவர்           சுந்தரர்
திருமுறை          7ம் திருமுறை
பதிக எண்           17
திருமுறை எண்  5

பாடல்

உம்பரார் கோனைத்திண் தோள்முரித்தார்உரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ணநீற்றர்ஓர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.

பொருள்

தேவர்கட்கு அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும், யானையை உரித்தவரும், சிவந்த பொன்போன்றதும் , நெருப்புப்போன்றதும் ஆகிய நிறத்தை உடையவரும் , தூய வெள்ளை நிறத்தையுடைய நீற்றை அணிந்தவரும், என்போலும் அடியவர்கட்குத் தலைவரும், ஓர் ஆவணத்தினால் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட நம் அனைவர்க்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.

பாடியவர்           சுந்தரர்
திருமுறை          7ம் திருமுறை
பதிக எண்           17
திருமுறை எண்  10

பாடல்

மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கஒண் ணாததோர் வேழத்தினையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிடம் ஆவதுநந்திரு நாவலூரே.

பொருள்

தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும், தடுக்க வொண்ணாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவதிகை

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவதிகை

 • வீரம் வெளிப்பட்ட அட்ட வீரட்டானத் தலங்களில் மூன்றாவது தலம். சிவனார் திரிபுர தகனம் செய்தருளிய தலம்
 • 16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம். இவருக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி
 • திருஞானசம்பந்தருக்கு சிவனார் திருநடனக்காட்சி காட்டிய தலம்
 • திருநாவுக்கரசரின் தமக்கையாரான திலகவதியார் சிவத்தொண்டு செய்த தலம்
 • சூலை நோய் நீங்கப்பெற்று ‘திருநாவுக்கரசர்’ என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த தலம்
 • இத்தலத்தை மிதிக்க அஞ்சிய சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில்(தற்போதைய பெயர் – சித்தாண்டிமடம், சித்தாத்த மடம், கோடாலம்பாக்கம் ) தங்கி, திருவடி தீட்சை பெற்ற தலம்.
 • சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான ‘உண்மை விளக்கம்’ நூலை அருளிய மனவாசகங்கடந்தார் அவதரித்த தலம்
 • உள் சுற்றின் தென்மேற்கே பல்லவர் காலத்தைச் சார்ந்த பஞ்சமுக லிங்கம். மூன்று திக்குகளை நோக்கி நான்கு முகங்கள் உள்ளன. ஒரு முகம் (அதோ முகம்) மேல் நோக்கியது.
 • வாயில் நுழைவிடத்தில் 108 கரண நடன சிற்பங்கள்.
 • தேர் வடிவ திருக்கோயில் அமைப்பு

 

தலம் திருவதிகை
பிற பெயர்கள் அதிகாபுரி , திருஅதிகை வீரட்டானம், அதிரைய மங்கலம், அதிராஜமங்கலியாபுரம்
இறைவன் வீரட்டேஸ்வரர் வீரட்டநாதர் , அதிகைநாதர், ஸ்ரீ சம்ஹார மூர்த்தி, திருக்கெடிலவாணர்
இறைவி திரிபுரசுந்தரி
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் கெடிலநதி, சக்கரதீர்த்தம்
விழாக்கள் வைகாசி விசாகம் – 10 நாள்கள் பிரம்மோற்சவம், சித்திரைச்சதயம் – 10 நாள்கள் அப்பர் திருவிழா, பங்குனி-சித்திரை மாதங்களில் நாள் வசந்தோற்சவம்,ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் ,மாணிக்கவாசகர் உற்சவம் , மார்கழி திருவாதிரை , மகா சிவராத்திரி , கார்த்திகை சோமவார சங்காபிஷேகங்கள் , பங்குனி உத்திரம் , திலகவதியார் குருபூஜை
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரைஅருள்மிகு அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
திருவதிகை
பண்ருட்டி அஞ்சல்
கடலூர் மாவட்டம்
PIN – 607106

04142-240317, 04142-240246, 94439-88779, 94427-80111, 98419-62089

வழிபட்டவர்கள் திருமால் , பிரம்மன் , திரிபுர அசுரர்களான வித்யுன்மாலி-தாருகாக்ஷன்-கமலாக்ஷன் , கருடன் , பாண்டவர் , திருமூலர் , திலகவதியார் , மகேந்திரவர்மன் , சப்தரிஷிகள் , வாயு , வருணன் , யமன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம்,,திருநாவுக்கரசர் 16 பதிகங்கள், சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம் பண்ருட்டியில் இருந்து  சுமார் 2 கி.மி. தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 197 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  7   வது தலம்.

திரிபுரசுந்தரி உடனாகிய வீரட்டேஸ்வரர்

Isan

புகைப்படம் : இணையம்

பாடியவர்          திருநாவுக்கரசர்
திருமுறை        4
பதிக எண்         26
திருமுறை எண் 9         

பாடல்

பிணிவிடா ஆக்கை பெற்றேன்
பெற்றமொன் றேறு வானே
பணிவிடா இடும்பை யென்னும்
பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் தூய னல்லேன்
தூமலர்ப் பாதங் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன்
அதிகைவீ ரட்ட னாரே

பொருள்

அதிகைப்பெருமானே! நோய்கள் விடுத்து நீங்காத இம்மனித உடலைப் பெற்றேன்,செயற்படாதொழியாத துன்பம் நல்கும் நல்வினை தீவினையாகிய சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு, அவற்றை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும் மன உறுதியும் இல்லாதேனாய், அத்தூய்மை துணிவு என்பன வற்றை நல்கும் உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.

 

கருத்து

பிணிவிடா ஆக்கை – பிணியானவை விடாத உடலை.
இடும்பை – இருள்சேர் இருவினையாலும் எய்தும் துன்பம்.
தூயன் – கட்டு நீங்கினேன்.
அறியமாட்டேன் – உணரமாட்டேன்

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்         38
திருமுறை எண் 1      

பாடல்

தம்மானை அறியாத சாதியார் உளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்
உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்து
எம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடும்என்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

பொருள்

உலகில் தம் தலைவனை உருவம் அறியாதவர் உளரோ? இல்லை. அப்படியிருக்க நீலகண்டனாகிய அப்பெருமான் தனது திருவடியை என் தலைமேல் வைத்து, சடைமேல் பிறையை உடையவனும், விடை ஏறுபவனும், யானைத் தோலைப் போர்ப்பவனும் கரிந்த காட்டில் ஆடுபவனும் எம் தலைவனும் ஆகிய, கெடில நதியின் வடகரையிலுள்ள திருவீரட்டானத்தில் விரும்பியிருக்கின்ற பெருமானை, அவன் அதனைச் செய்வதையும் யான் அறியாமல் இகழ்வேன் ஆயினேன் போலும். என்னே என் அறியாமை ! இனி அவ்வாறு நேராது போலும்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருச்சோபுரம்

274

 • அகத்திய மாமுனியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம்(லிங்கம் அகத்தியர் அமைத்த கைத்தடத்துடன்). (அகத்தியர் தாங்கமுடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டு தனது வேதனையை எம்பெருமானிடம் சொல்லியபடியே கடற்கரை மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முயற்சித்து, அமைக்க முடியாமல் பின் மூலிகைச் செடிகளைப் பறித்து வந்து சாறு எடுத்து அதை மணலோடு சேர்த்து உதிராத சிவலிங்கத்தை உருவாக்கி அதற்குப் பூஜைகள் செய்து வழிபட்ட ஈசன்)
 • மூலவர் சதுர ஆவுடையார். சற்று நீட்டுவாக்கில் அமைந்த சுற்றளவு குறைந்த பாணம்
 • ஈசனும் பார்வதியும் ஒன்றாக இருப்பதால் சிவனுக்கு, மஞ்சளும் குங்குமமும் வைத்து வழிபாடு
 • திரிபுவன சக்கரவர்த்தியின் மனைவி தியாகவல்லி திருப்பணி செய்த தலம்
 • ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்த இப்பகுதி, ‘மதுரை இராமலிங்க சிவயோகி’ யால் மணலில் புதைந்திருந்த விமான கலசமும் பின் கோயிலும் கண்டறியப்பட்ட தலம்.
 • ஸ்வர மூர்த்தி – தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தி விக்ரகத்தைத் தட்டினால் சப்த ஸ்வரங்களின் ஓசைகள். வழக்கத்திற்கு மாறாக இடது கையில் நாகம், வலது கையில் அக்னியும் ஏந்தியவாறு திருக்காட்சி.

 

தலம் திருச்சோபுரம்
பிற பெயர்கள் தியாகவல்லி, தம்பிரான் கோயில்
இறைவன் சோபுரநாதர் ( மங்களபுரீஸ்வரர் )
இறைவி தியாகவல்லியம்மை ( சத்யதாக்ஷி , வேல்நெடுங்கண்ணி )
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் சோபுரதீர்த்தம் , கிணற்றுத்தீர்த்தம்
விழாக்கள் மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை தீபம் , ஐப்பசி அன்னாபிஷேகம் , பங்குனி உத்திரம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்
திருச்சோபுரம்
தியாகவல்லி அஞ்சல், கடலூர் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608801.
98436-70518 , 94425-85845, 94429-36922
வழிபட்டவர்கள் அகத்தியர், காகபுஜண்டர்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர் *
நிர்வாகம்
இருப்பிடம் கடலூர் – சிதம்பரம் சாலையில் கடலூரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஆலப்பாக்கம் அடைந்து, அங்கிருந்து திருச்சோபுரம் செல்லும் கிளைச்சாலையில் இருந்து சுமார் 2 கிமீ
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 195 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  6  வது தலம்.

 

*சுந்தரரின் ‘திருவிடையாறு’ தலப்பதிகத்தில் – ஊர்த்தொகையில் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

சோபுரநாதர்

சோபுரநாதர்

 

சத்யதாக்ஷி

சத்யதாக்ஷி

 

புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிக எண்          51
திருமுறை எண் 8      

 

பாடல்

விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டுவிற லரக்கர்
குலங்கள்வாழு மூரெரித்த கொள்கையிதென் னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே.
பொருள்

இலங்கையில் நிலைபெற்று வாழும், வாட்போரில் வல்ல அவுணர் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மேரு மலையைக் கொடியதொரு வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?.

கருத்து

விலங்கல் – மேருமலை.
அரக்கர் – திரிபுராதிகள்.
ஆணவம் கொண்டு தன் தவற்றை உணர்ந்து பின் அவனை மன்னித்தல் என்றவாறு

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிக எண்          51
திருமுறை எண் 9      

         

பாடல்

விடங்கொணாக மால்வரையைச் சுற்றிவிரி திரைநீர்
கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரணமென் னைகொலாம்
இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர்மே லயனும்
தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுரமே யவனே.

பொருள்

மண்ணுலகை அகழ்ந்து உண்ட திருமாலும், இனிய தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், முற்காலத்தே உன்னைத் தொடர்ந்து அடிமுடி காணமாட்டாராய் நின்றொழியத் திருச்சோபுரத்தில் மேவி விளங்கும் இறைவனே! தேவர்கள் விடத்தையுடைய வாசுகி என்னும் பாம்பை மந்தரம் என்னும் பெரிய மலையைச் சுற்றிக் கட்டி, விரிந்த அலைகளையுடைய கடல்நீரைக் கடைந்தபோது, அதனிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக் காரணம் என்னையோ?

 

கருத்து

நாகம் – வாசுகி என்னும் பாம்பு.
மால் வரை – மந்தரமலை.
நஞ்சை உண்டு உகந்த – தேவர்கள் அஞ்சிய நஞ்சைத் தாம் உண்டு அவர்களைக் காத்தும்,
சாவாமைக்கு ஏதுவாகிய அமுதத்தை அவர்களுக்குக் கொடுத்து அளித்தும் மகிழ்ந்த.
இடந்து – தோண்டி

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருத்திணை நகர்

274

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருத்திணை நகர்

 • சுயம்பு திருமேனி. சற்று கூர்மையான பாணத்துடன் கூடிய சதுர ஆவுடையார்
 • நடராச மூர்த்தியின் கீழே பீடத்தில் மகாவிஷ்ணு, சங்கை வாயில் வைத்து ஊதுவது போலவும், பிரம்மா பஞ்சமுக வாத்யம் வாசிப்பது போலவும் கூடிய சிறிய மூர்த்தங்கள்
 • இறைவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி ஆராதனை
 • விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவன் மீது அதிக பக்தியுடன் தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இறைவன் பணியாளாக வந்து தோட்டத்தில் உழுது பின் உணவு அருந்தினார். ஒரு நாளில் பயிர்கள் அனைத்தும் வளர தானே காரணம் என உணர்த்தினார். ஒரே நாளில் தினை விளைந்ததால் தினைநகர்
 • சிவனுக்கு தினமும் தினையமுது உணவு படையல்
 • வீரசேன மன்னனின் குஷ்டநோய் நீங்கிய தலம்
 • தட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் முயலகன் இல்லாமல் நான்கு சீடர்களுடன் கூடிய திருக்காட்சி அமைப்பு.
 • சிவனார் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்திய ஏர் மற்றும் நீர் இறைத்த கலம் முதலியவை இன்றும் உள்ளன
 • சண்டிகேஸ்வரர் தனது மனைவியுடன் அருள்பாலிக்கும் தனிச்சந்நிதி
 • முன்வினைப் பயனால் ஜாம்பு(கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி, சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றாதால் தீர்த்தம் ஜாம்புவ தீர்த்தம்

 

 

தலம் திருத்திணை நகர்
பிற பெயர்கள் தீர்த்தனகிரி,
இறைவன் சிவக்கொழுந்தீசர், சிவக்கொழுந்தீஸ்வரர்
இறைவி ஒப்பிலாநாயகி  கருந்தடங்கன்னி,நீலதாம்பிகை
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் ஜாம்பவ தீர்த்தம்
விழாக்கள் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம், மகாசிவராத்திரி , ஐப்பசி அன்னாபிஷேகம் , ஆருத்ரா தரிசனம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோவில்
தீர்த்தனகிரி அஞ்சல்
கடலூர் வட்டம்,கடலூர் மாவட்டம்
PIN – 608801
04142-289861 , 99653-28278 ,99653-28279 ,97864-67593 ,99422-48966 , 94434-34024
வழிபட்டவர்கள் விஷ்ணு , பிரம்மா , ஜாம்பவான்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் கடலூரில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில்  வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  5  வது தலம்.

சிவக்கொழுந்தீஸ்வரர்

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d

ஒப்பிலாநாயகி

%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%bf

புகைப்படங்கள் : தினமலர்

பாடியவர்             சுந்தரர்
திருமுறை           7
பதிக எண்            64
திருமுறை எண்   7

பாடல்

தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்
பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொருள்

மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல் தவத்தொழிலைச் செய்து  பயனில்லாத சொற்களைப் பேசி  பின்னுதல் பொருந்திய சடைகளைச்சேர்த்துக் கட்டிக்கொள்ளு தலுடன் எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டாலே  மக்கள்  பிறவியாகிய கடலை முற்றக் கடந்துவிடுதல் இயலாது; ஆதலின், அந்நிலை நின்னின் வேறாய் நிற்க  நீ  தேவர் கட்குத் தேவனாய் உள்ள பெருந்தேவனாகிய  செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற  நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை  அணுகச் சென்று  இவனே  தொன்மையாய முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.

பாடியவர்             சுந்தரர்
திருமுறை           7
பதிக எண்            64
திருமுறை எண்   8    

பாடல்

பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும்
பலருங் கண்டழு தெழஉயிர் உடலைப்
பிரிந்து போம்இது நிச்சயம் அறிந்தாற்
பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து
கருந்தடங் கண்ணி பங்கனை உயிரைக்
கால காலனைக் கடவுளை விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

 

பொருள்

மனமே, அன்புள்ள சுற்றத்தாரும், மற்றும் துணையாக உள்ளாரும் ஆகிய பலருங் கண்டு, உடல்மேல் விழுந்து அழுது எழும்படி, உயிர் உடலைப் பிரிந்து அப்பாற் போய்விடும்; இது நிச்சயம். இதனை நீ அறிந்துளை என்றால், அறியாமையையுடைய வாழ்வாகிய இம்மாறுபட்ட நெறியை நீங்கி, கரிய பெரிய கண்களை யுடையவளாகிய உமையது பாகத்தை உடையவனும், உயிர்களில் நிறைந்திருப்பவனும்,  காலனுக்குக் காலனும், எல்லாப் பொருளையும் கடந்துள்ளவனும் ஆகிய  செருந்தி (ஒரு வகைப் புல்) மரங்கள் பொன்போலும் மலர்களை மலர்கின்ற திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை, விரும்பி , அணுகச் சென்று அடைவாயாக.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஎருக்கத்தம்புலியூர்

274

தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருஎருக்கத்தம்புலியூர்

 • தனது தாயை மீனப் பெண்ணாக சபித்ததற்காக முருகன் வேதாக நூல்களை கடலில் வீசி எறிந்தார். இதனால் சாபம் பெற்ற முருகன் மதுரையில் தனபதி என்பவரின் மகனாக உருத்திரசர்மர் என்ற பெயரில் ஊமைப்பிள்ளையாக பிறந்து இத்தலம் வந்து வழிபாடு செய்து பேசும் திறன் பெற்றார்.
 • குமரன் வழிபட்டதால் சிவன் திருநாமம் திருக்குமாரசாமி
 • வியாக்ரபாதர் வழிபட்ட பஞ்ச புலியூர்களில் (பெரும்பற்றப்புலியூர், திருப்பெரும்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், திரு எருக்கத்தம்புலியூர்) இத்தலமும் ஒன்று
 • 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய அவதாரத்தலம். திருவுருவம் மதங்க சூளாமணியாருடன்
 • தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு வந்த போது ஏற்பட்ட வேடர்களின் தொந்தரவால் அவர்கள் வெள்ளெருக்காக மாறி வழிபாடு செய்யும் தலம்
 • அத்தம் = காடு, எருக்கத்தம் = எருக்கங்காடு. எருக்கஞ் செடிகள் நெருக்கமாக நிறைந்திருந்த காட்டில் எழுந்த ஊர் எருக்கத்தம்புலியூர்
 • இராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும், அவனுடைய மகன் இராஜேந்தர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம்
 • மார்ச் மாதம் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் மூலவர் மீது சூரியஒளி வழிபாடு செய்யும் தலம்
 • இவ்வூருக்குக் கிழக்கே உள்ள கீழ்க்கோட்டூர் மணியம்பலத்தில் கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பாடப் பெற்றது.

 

தலம் திருஎருக்கத்தம்புலியூர்
பிற பெயர்கள் ராஜேந்திரப்பட்டினம், எருக்கத்தம்புலியூர் , திருவெருக்கத்தம்புலியூர் , குமரேசப்பட்டினம், யாழ்ப்பாணாயன்பட்டினம்
இறைவன் ஸ்வேதாரண்யேஸ்வரர், திருக்குமாரசுவாமி, நீலகண்டேஸ்வரர் )
இறைவி நீலமலர்க்கண்ணி வீராமுலையம்மன் , அபீதகுஜநாயகி , நீலோற்பலாம்பாள்
தல விருட்சம் வெள்ளெருக்கு
தீர்த்தம் நீலோற்பலதீர்த்தம் , கந்த தீர்த்தம் , ஸ்வேத தீர்த்தம் , செங்கழுநீர்
விழாக்கள்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில்
ராஜேந்தரப்பட்டினம் அஞ்சல்
விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608703
04143 – 243533, +91-94440 63806.+91-93606 37784
வழிபட்டவர்கள் வியாக்ரபாதர், உருத்திரசன்மர்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம் ஸ்ரீமுஷ்ணம் – விருத்தாசலம் சாலையில் முஷ்ணத்தை அடுத்து அமைந்துள்ளது இத் தலம்
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 194 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  4  வது தலம்.

திருக்குமாரசுவாமி

%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf

வீராமுலையம்மன்

%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d

புகைப்படங்கள் : தினமலர்

பாடியவர்           திருஞான சம்பந்தர்
திருமுறை         1
பதிக எண்          89
திருமுறை எண் 8       

பாடல்

ஆவா வெனவரக்க னலற வடர்த்திட்டுத்
தேவா வெனவருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயில்
தேவே யெனவல்லல் தீர்தல் திடமாமே.

பொருள்

ஆ ஆ என்று தன்னைக் காப்பாற்றும்படி இராவணன் அலறுமாறு அவனை அடர்த்து, பின் தேவா என அவன் தவறினை உணர்ந்து வேண்ட அருளோடு நிறைந்த செல்வங்கள் பலவற்றை வழங்கியருளிய தலைவனே, எருக்கத்தம்புலியூரில் விளங்கும் சிறப்புமிக்க கோயிலில் எழுந்தருளும் தேவனே என்று போற்ற, நம் அல்லல்கள் தீர்தல் உறுதியாகும்.

 

 

பாடியவர் திருஞான சம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 89
திருமுறை எண் 9        

பாடல்

மறையா னெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையா னெருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.

பொருள்

வேதங்களை ஓதும் நான்முகனும், நெடுமாலும் காணுதற்கு அரியவனே, மழுவைக் கையில் ஏந்தியவனே, கலை நிறையாத பிறை மதியைச் சூடியவனே, முத்துக்களின் கொத்துப் போன்ற இறையோனே என்று போற்றி, எருக்கத்தம்புலியூரை இடமாகக் கொண்ட நீலகண்டனை அண்ணலை நினைந்தால், வினை கெடும்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கூடலையாற்றூர்

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கூடலையாற்றூர்

 • இறைவன் சுயம்பு மூர்த்தி
 • பிரமனுக்கு நர்த்தனம் செய்து காட்டியவராதலின் இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர்
 • அகத்தியர் தான் கற்று அறிந்த வித்தைகள் அனைத்தும் மறக்காமல் இருக்க வழிபட்ட தலம்
 • மணிமுத்தாறும் வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ள ஊராதலின் இருப்பதால் கூடலையாற்றூர்
 • சுந்தரர் இத்தலத்தை வணங்காமல் திருமுதுகுன்றம் சென்றபோது   இறைவன் அந்தணராக வந்து ‘கூடலையாற்றூருக்கு வழி இஃது’ ன்று கூறி வழிகாட்டியத் தலம்
 • நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெள்ளப்பெருக்கில் இக்கோயில் அழிந்த பிறகு, அங்கிருந்த கற்களைக் கொண்டு வந்து கட்டப்பட்ட கோயில்
 • இரு அம்பாள் சந்நிதி – பராசக்தி அம்பாள் சந்நிதியில் திருநீறு, ஞானசக்தி அம்பாள் சந்நிதியில் குங்குமம் பிரசாதம்
 • வெளிப்புறத்தில் அகத்தியர் சிற்பம் கொண்ட மதில்
 • ஆகமத்தில் இருப்பது போல் இல்லாமல் கொடிமரம், பலிபீடம் அற்ற தலம்
 • உற்சவ மூர்த்தங்களில் பிற்காலச்சேர்க்கையான சித்திரகுப்தர் (ஒரு கையில் எழுத்தாணியுடன் மறுகையில் ஏடும் கொண்ட வடிவம்)
 • நவக்கிரக சந்நிதி அற்ற திருக்கோயில்
 • சித்திரை முதல் மூன்று நாட்கள் மூலவரின் மேல் சூரிய ஒளி பட்டு சூரிய பூஜை
தலம் திருக்கூடலையாற்றூர்
பிற பெயர்கள் தட்சிணப்பிரயாகை
இறைவன் நர்த்தனவல்லபேஸ்வரர் ( நெறிக்காட்டுநாதர் )
இறைவி பராசக்தி , ஞானசக்தி (புரிகுழல்நாயகி) (இரு அம்பாள் சந்நிதிகள்)
தல விருட்சம் கல்லாலமரம்
தீர்த்தம் சங்கமத்தீர்த்தம் ( வெள்ளாறும் , மணிமுத்தாறும் கூடும் இடம் ) மற்றும் பிரம்ம , அகத்திய , கார்த்தியாயனர் தீர்த்தங்கள்
விழாக்கள் மாசி 13 நாள் பிரம்மோற்சவம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோவில்
திருக்கூடலையாற்றூர்
காவலாகுடி அஞ்சல்
காட்டுமன்னார் கோவில் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608702
04144-208704 , 99422-49938
வழிபட்டவர்கள்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் – திருப்புகழ் 1 பாடல்
நிர்வாகம்
இருப்பிடம் சேத்தியாதோப்பு – கும்பகோணம் பாதையில், ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில்  ‘காவாலகுடி’யை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம்.
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 193 வதுத் தலம்

நடு நாட்டுத் தலங்களில் 3 வதுத் தலம்.

நர்த்தனவல்லபேஸ்வரர்

%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%aa%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d

பராசக்தி

%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை         7
பதிக எண்          85
திருமுறை எண் 8        

பாடல்

மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில்
அறவன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே

பொருள்

வேதத்திற் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும், அத்தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும், பேய்க்கூட்டமும் சூழ்ந்திருக்க , பிறைபோலும் நெற்றியை யுடைய உமாதேவியோடும், பூதப் படையோடும், திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாது  ஒழிந்தேன் என் அறியாமை!

பாடியவர்          சுந்தரர்
திருமுறை         7
பதிக எண்          85
திருமுறை எண் 9

பாடல்

வேலையின் நஞ்சுண்டு விடையது தான்ஏறிப்
பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே
கோலம துருவாகிக் கூடலை யாற்றூரில்
ஆலன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே

பொருள்

திருப்பாற்கடலினை கடைந்த பொழுது அதில் இருந்து உண்டான எழுந்த நஞ்சினை உண்டவனும், விடையை ஊர்ந்து செல்பவனும், பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமா தேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக் கொண்டு திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான், இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாது  ஒழிந்தேன் என் அறியாமை!

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருத்தூங்கானைமாடம்

274தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருத்தூங்கானைமாடம்

 • மூலவர் சுயம்பு லிங்கம்; சற்று உயரமான, சதுர வடிவான ஆவுடையார்.
 • ஆழி வெள்ளம் வந்த போது அசையாது அதிகார நந்தி மூலம் பிரளய கால வெள்ளத்தைத் தடுத்த பெருமானின் திருத்தலம்.
 • தேவகன்னியர் ( பெண் ) , காமதேனு ( ஆ ) , வெள்ளை யானை ( கடம் ) வழிபட்ட தலமாதலால் பெண்ணாகடம்.(பெண்+ஆ+கடம்)
 • வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள தலம்.
 • காமதேனு பூசை செய்யும்போது வழிந்தோடிய பால், கயிலை தீர்த்தத்தில் நிரம்பி உண்டான குளம்.
 • ஐராவதம் வழிபட்டதால் ‘தயராசபதி’, ஆதிநாளில் மலர்வனமாக விளங்கியதால் ‘புஷ்பவனம், புஷ்பாரண்யம்’, இந்திரன் வழிபட்டதால் ‘மகேந்திரபுரி’, பார்வதி வழிபட்டதால் ‘பார்வதிபுரம்’ , நஞ்சுண்ட இறைவனின் களைப்பைத் தீர்த்த தலமாதலின் ‘சோகநாசனம்’ , சிவனுக்குகந்த பதியாதலின் ‘சிவவாசம்’
 • திருநாவுக்கரசர் – சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலம்.
 • சந்தான குரவர்கள் மெய்கண்ட தேவர், மறைஞான சம்பந்தர் ஆகியோர்பிறந்த தலம்.
 • ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் ‘கடந்தை நகர்
 • மாகேஸ்வர பூசையில் தனது பணியாள் வந்த போது அவருக்கு பூஜை செய்ய மறுத்த மனைவியின் கரங்களை வெட்டிய கலிகம்ப நாயனார் (மீண்டும் துளிர்க்க அருளிச் செய்த பிரான்-கைவழங்கீசர் ) முக்தி பெற்றத் தலம்.
 • கஜபிருஷ்ட விமான அமைப்பிலான விமானம்
 • இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப கட்டப்பட்டது சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி

 

தலம் திருத்தூங்கானைமாடம்
பிற பெயர்கள் பெண்ணாகடம், பெண்ணாடம்
இறைவன் பிரளயகாலேஸ்வரர் ( சுடர்க்கொழுந்தீஸ்வரர் ), கைவழங்கீசர்
இறைவி ஆமோதனம்பாள் ( கடந்தை நாயகி , அழகிய காதலி ), விருத்தாம்பிகை
தல விருட்சம் செண்பக மரம்
தீர்த்தம் கயிலை தீர்த்தம் , பார்வதி தீர்த்தம் , இந்திர தீர்த்தம் , முக்குளம் , வெள்ளாறு
விழாக்கள் சித்திரையில் 12 நாட்கள் பிரம்மோற்சவம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

 

அருள்மிகு பிரளயகாலேசுவரர் திருக்கோயில்,

பெண்ணாகடம் & அஞ்சல்,

விருத்தாச்சலம் வழி,

திட்டக்குடி வட்டம்,

கடலூர் மாவட்டம் – 608 105.

தொலைபேசி : +91-9976995722, +91-98425-64768, 04143 – 222788.

வழிபட்டவர்கள் ஐராவதம், இந்திரன் மற்றும் பார்வதி
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
நிர்வாகம்
இருப்பிடம் விருத்தாசலத்தில் இருந்து சுமார் 17 கிமீ, தொழுதூரில் இருந்து சுமார் 15 கிமீ, திட்டக்குடியில் இருந்து சுமார் 15 கிமீ
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 192 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில் 2  வது தலம்.

சுடர்க்கொழுந்தீஸ்வரர்

%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d

விருத்தாம்பிகை

%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%88

புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்

திருமுறை         1

பதிக எண்         59

திருமுறை எண்   9

 

பாடல்

நோயும் பிணியும் அருந்துயரமும்

நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்

வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்

மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்

தாய அடியளந்தான் காணமாட்டாத்

தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்

தோயுங் கடந்தைத் தடங்கோயில்சேர்

தூங்கானை மாடம் தொழுமின்களே

பொருள்

உடலை வருத்தும் நோய்களும், மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குரிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம்புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், மண்ணையும், விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காண மாட்டாத தலைவனாகிய சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானை மாடப்பெருங்கோயிலைத் தொழுவீர்களாக.

 

கருத்து

 

நோய் – உடலைப்பற்றியனவாகி வாதபித்த சிலேட்டுமத்தால் விளைவன.

பிணி – மனத்தைப் பிணித்து நிற்கும் கவலைகள்.

அருந்துயரம் – அவற்றால் விளையும் துன்பங்கள்.

 

 

 

பாடியவர்          திருநாவுக்கரசர்

திருமுறை         4

பதிக எண்         109

திருமுறை எண்    1

 

பாடல்

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு

விண்ணப்பம் போற்றிசெய்யும்

என்னாவி காப்பதற் கிச்சையுண்

டேலிருங் கூற்றகல

மின்னாரு மூவிலைச் சூலமென்

மேற்பொறி மேவுகொண்டல்

துன்னார் கடந்தையுள் தூங்கானை

மாடச் சுடர்க்கொழுந்தே.

பொருள்

விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருநெல்வாயில் அரத்துறை

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருநெல்வாயில் அரத்துறை

 • திருத்தூங்காணை மாடத்தில் இருந்து நடந்தே சென்ற திருஞான சம்பந்தரின் கால்கள் நோகாமல் இருக்க அவருக்கு சிவன் முத்துச்சிவிகையும், முத்துக்குடையும், முத்துச்சின்னமும் அருளியத் தலம்
 • வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த போது சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்த்து வெள்ளம் வடிந்ததால் சற்று திரும்பியுள்ள நந்தியின் தலை
 • ஏழு துறைகளில்(அரத்துறை , ஆதித்துறை ( காரியனூர் ) , திருவாலந்துறை , திருமாந்துறை , ஆடுதுறை , திருவதிட்டத்துறை ( திட்டக்குடி ) , திருக்கைத்துறை) சப்தரிஷிகள் ஈசனை வழிபட்ட தலம்
 • செவ்வாயும், சனியும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்ட தலம்.

 

தலம் திருநெல்வாயில் அரத்துறை
பிற பெயர்கள் தீர்த்தபுரி,திருவரத்துறை , திருவட்டுறை, திருவட்டத்துறை,  நெல்வாயில் அருத்துறை, சிவபுரி
இறைவன் தீர்த்தபுரீஸ்வரர், ஆனந்தீஸ்வரர் , அரத்துறைநாதர்
இறைவி திரிபுரசுந்தரி, ஆனந்தநாயகி , அரத்துறைநாயகி
தல விருட்சம் ஆலமரம்
தீர்த்தம் நீலமலர்ப்பொய்கை , நிவாநதி (வடவெள்ளாறு நதி)
விழாக்கள் மகாசிவராத்திரி , மார்கழி திருவாதிரை , பங்குனி உத்திரம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

 

அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் (அரத்துறைநாதர்) திருக்கோவில்

திருவட்டுறை அஞ்சல்

திட்டக்குடி வட்டம்

கடலூர் மாவட்டம்

PIN – 606111

04143-246303, 04143-246467

வழிபட்டவர்கள் மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், அரவான்,சனகர், ஆதி சங்கரர், குகை நமச்சிவாயர், இராமலிங்க அடிகள்,சேர, சோழ, பாண்டியர்கள்
பாடியவர்கள் திருநாவுக்கரசர் 1 பதிகம் , திருஞானசம்பந்தர் 1 பதிகம் , சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம் திருப்பெண்ணாகடதிற்குத் தென்மேற்கே 7-கி. மீ. தூரம். விருதாச்சலம் தொழுதூர் சாலையில் கொடிகளம் என்னும் இடத்தில் இறங்கி, தெற்கே 1-கி. மீ. தூரம்
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 191  வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  1   வது தலம்.

அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாகிய தீர்த்தபுரீஸ்வரர் 

combined

புகைப்படம் : தினமலர்

பாடியவர்                                          திருநாவுக்கரசர்

திருமுறை                                       5

பதிக எண்                                          3

திருமுறை எண்                            9

 

பாடல்

 

காழி யானைக் கனவிடை யூருமெய்

வாழி யானைவல் லோருமென் றின்னவர்

ஆழி யான்பிர மற்கும ரத்துறை

ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே.

 

பொருள்

 

சீகாழிப்பதியில் உறைபவரும், பெருமையை உடைய இடப வாகனத்தில் செல்லும் நித்தத் திருமேனி உள்ளவரும், பிறரால் ‘வல்லோர்கள்’ என்று கூறப்படுவோராகிய திருமால் மற்றும் பிரமனும் ஊழிக் காலத்தில் ஒடுங்கும் இடமாகக் கூடியவரும் அரத்துறை மேவும் பரமனே, நாம் தொழுகின்ற இறைவனாகிய நம் சிவபெருமான் ஆவார்.

 

கருத்து

 

திருமாலும் பிரமனும் வணங்க, ஊழிதோறும் விளங்கும் அரத்துறை எனும் பொருள் பிரித்து அறிவார்களும் உளர்.

 

 

பாடியவர்                          சுந்தரர்

திருமுறை                       7

பதிக எண்                          3

திருமுறை எண்            8

 

பாடல்

 

திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன்

திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி

ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின்

நெல்வாயி லரத்துறை நின்மலனே

பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்

பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன்

அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான்

அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

 

 

பொருள்

 

வலிமை மிக்க தோள்கள் இருபதையும் நெரித்து பின் (அவன் கர்வம் அழிந்தப்பின்) அவனுக்கு அருளி, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே,  மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ளார்க்குத் தலைவனே, நான் முற்பிறவிகளில் செய்த நல்வினையினால் உனது பெயரைப் பல காலமும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி, அடியேன், உலகியலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

 

கருத்து

தேவர்க்குத் தேவர், காரணக் கடவுளர் –  அயனும், மாலும்

நாமமாவது – திருவைந்தெழுத்து

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஇரும்பைமாகாளம்

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஇரும்பைமாகாளம்

 

 • காடுவெளி எனும் வெட்ட வெளியைக் குறிக்கும் கடுவெளிச்சித்தர் இத்தலத்தில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்ததால், தவத்தின் காரணமாக மழை இல்லை என்று எண்ணி மாது ஒருவளை அனுப்பினான். அவள் உப்பும் காரமும் சேர்த்தஅப்பளத்தை அரச இலை போல் செய்து தை உண்ணச் செய்து அவரின் தவத்தை கலைத்தாள். சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல்     அங்கேயே தங்கி சிவப் பணி செய்து வந்தார். பஞ்சம் நீங்கப் பெற்றப்பின் நடைபெற்ற திருவிழாவில் அம்மாதுவின் காற் சிலம்பு கீழே விழுந்தது. அந்த நடன நிகழ்ச்சி தடைபடக் கூடாதென்றெண்ணி, அச்சிலம்பை எடுத்து நடனமாதின் காலில் அணிவித்து விட்ட செயலைக் கண்ட மக்கள், சித்தரின் செயலை ஏளனம் செய்து நகைத்தனர். சித்தர் கோபம் கொண்டு இறைவனை நோக்கிப் பாட, ஆலயத்திலுள்ள மூலலிங்கம் வெடித்து 3 பகுதிகளாக சிதறியது. மன்னன் மன்னிப்பு கேட்டப்பின் சித்தர் மீண்டும் 1 பாடல் பாட  சிதறிய சிவலிங்கம் ஒன்று கூடியது.மன்னன் சிவலிங்கத்தை செப்புத்தகடு வேய்ந்து ஒன்றாக்கி வழிபட்டான்
 • மாகாளம் என்ற பெயருடன் விளங்கும் மூன்று சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று. மற்றவை வடநாட்டிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம்
 • கடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது, அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்லியதால் அம்பாளின் நாமம் “குயில்மொழி நாயகி’
 • சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டதால். அவர்களை மகாகாளி அவதாரம் எடுத்து, தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் என்னுமிடத்தில் வதம் செய்தாள். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க தவம் செய்து தோஷம் நீங்கப் பெற்ற இடம்.
 • வீர சைவ மரபில் வந்த மகாகாளர் எனும் மகரிஷி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவன் மகாகாளநாதர்
 • கிரகங்கள் தம் மனைவியருடன் ஒன்றாக இருக்கும் நவக்கிரக சன்னதி
 • நடராஜர், கால் சற்று  கீழே மடங்கியபடி  சந்தோஷ  கோல அமைப்பு
 • விமானம் ஏகதள விமானம்

 

தலம் திருஇரும்பைமாகாளம்
பிற பெயர்கள் இரும்பை மாகாளம், திருவிரும்பை மாகாளம், இருஞ்சேரி , இலுப்பைவனம்
இறைவன் மாகாளநாதர், மகாகாளேஸ்வரர்
இறைவி மதுரசுந்தரநாயகி  குயில் மொழியம்மை
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் மகாகாள தீர்த்தம்
விழாக்கள் மகாசிவராத்திரி , மாசிமகம் , திருக்கார்த்திகை , பங்குனி உத்திரம்
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 00 மணி முதல் இரவு 8 00மணி வரை

 

அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோவில்

இரும்பை அஞ்சல், வானூர் வட்டம்

கடலூர் மாவட்டம், PIN 605010

+91- 413 – 268 8943, 98435-26601 , 94434-65502

வழிபட்டவர்கள் சுந்தரர் – ஊர்த்தொகை நூல்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், பட்டினத்தார்
நிர்வாகம்
இருப்பிடம் திண்டிவனம் – பாண்டி ( வழி : கிளியனூர் ) சாலை->  திருச்சிற்றம்பலம் கூட்ரோடு -> இரும்பை சாலையில் இருந்து சுமார் 2 கிமீ
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 274 வது தலம்

தொண்டை நாட்டுத் தலங்களில் 32  வது தலம்.

மாகாளநாதர்

மாகாளநாதர்

குயில் மொழியம்மை

 

குயில் மொழியம்மை

 

புகைப்படம் : தினமலர்

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்

திருமுறை         2

பதிக எண்         117

திருமுறை எண்    9

 

பாடல்

அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி

எட்டுமற்றும் மிருபத்திரண் டும்இற வூன்றினான்

இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்

மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளமே.

 

பொருள்

 

மார்க்கண்டேய முனிவரொடு போராடிய காலனுயிரைக் கவர்ந்தவனும், இராவணன் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவனும் ஆகிய சிவன் விருப்பமாக உறையும் இடம் தேனார்ந்த பொழில் சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும்.

 

கருத்து

 

அட்ட – மார்க்கண்டேய முனிவரொடு போராடிய,

எட்டும் இருபத்திரண்டும்(8+22) – பத்துத் தலைகளும் இருபது கைகளுமாகிய முப்பதும்

மட்டு – தேன்

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்

திருமுறை         2

பதிக எண்         117

திருமுறை எண்    10

 

பாடல்

 

அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி

பிரமன்மாலும் அறியாமை நின்ற பெரியோனிடம்

குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் இரும்பைதனுள்

மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.

 

பொருள்

 

நாகத்தை தன் இடையில் அணிந்தவரும், தீயினை கையினில் ஏந்தியவரும், குயில்கள் வாழும் குரா மரங்கள் நிறைந்ததும், பிரமன், மால் ஆகியோரால் அடிமுடி அறியாதவாறு ஓங்கிநின்றதும்,வானோரும் மறையோரும் தொழும் இடம் பெரியோனின் திருமாகாளமாகும்.

 

கருத்து

ஆர்த்து – கட்டி ((ஆர்த்த பிறவி துயர் கெட..),   குரவம் – குராமரம் (மலைவசம்பு அல்லது குரவகம்)

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஅரசிலி

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஅரசிலி
·   அரச மரத்தை இறைவன் வீடாக கொண்டமையால் திருஅரசிலி(திரு+அரசு+இல்)
·   ருத்ராட்ச பந்தலின் கீழ் மூலவர் சிறிய பாணம், தாழ்வான ஆவுடையார்; தலையில் அம்பு பட்ட தழும்பு
·   மகர தோரணத்தில் தட்சிணாமூர்த்தி காலடியில் உள்ள முயலகன் இடதுபுறம் திரும்பி கையில் நாகத்தை பிடித்தவாறு காட்சி
·   வாம தேவர் எனும் முனிவருக்கு அரச மரத்தடியில் சுயம்புவாக காட்சி கொடுத்து சாபம்  விலக்கிய திருத்தலம்.
·   சத்திய விரதன் எனும் மன்னனுக்கு புத்திர பாக்யம் தருவதற்காக மான் வடிவில் காட்சி தந்து, அம்பு வாங்கி,  பின் மறைந்து லிங்க வடிவ காட்சி கொடுத்த இடம்.
·   வடிவமைப்பு –  சாளுவ மன்னன்
 
தலம்
திரு அரசிலி
பிற பெயர்கள்
ஒழுந்தியாப்பட்டு
இறைவன்
அரசிலிநாதர் ( அஸ்வத்தேஸ்வரர் , அரசலீஸ்வரர் )
இறைவி
பெரியநாயகி ( அழகியநாயகி )
தல விருட்சம்
அரசமரம்
தீர்த்தம்
வாமதேவ தீர்த்தம் ( அரசடித்தீர்த்தம் )
விழாக்கள்
வைகாசி விசாகம் 10 நாட்கள், மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை,
அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில்
ஒழிந்தியாப் பட்டு – அஞ்சல்
வானூர் (வழி)
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் -605 109
04147 – 235472,295376, 9994476960
வழிபட்டவர்கள்
வாமேதவ முனிவர், சாளுக்கிய மன்னனான சத்தியவிரதன்,இந்திரசேனன், இந்திரசேனனின் மகள் சுந்தரி
பாடியவர்கள்
சிரவையாதீனம் கௌமார மடாலயம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள்
நிர்வாகம்
இருப்பிடம்
திண்டிவனத்தில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவு, புதுச்சேரியில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
திண்டிவனம் – பாண்டி சாலையில் ( வழி : கிளியனூர் ) தைலாபுரம் தாண்டி , ஒழுந்தியாப்பட்டு செல்லும் இடப்புற சாலையில் இருந்து சுமார் 2 கிமீ
திருவக்கரையில் இருந்து பாண்டி செல்லும் சாலை ( வழி : மயிலம் , வானூர் ) , திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு -> திண்டிவனம் சாலை -> கீழ்ப்புத்துப்பட்டு செல்லும் வலப்புறப்பாதை
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 273 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 31 வது தலம்.
அரசலீஸ்வரர்
அரசலீஸ்வரர்
பெரியநாயகி
பெரியநாயகி
புகைப்படம் : தினமலர்
 
பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை        2             
பதிக எண்         95          
திருமுறை எண்   8            
பாடல்
வண்ண மால்வரை தன்னை
மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணுந் தோளுநல் வாயும்
நெரிதரக் கால்விர லூன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பாற்
பாடிய பாடலைக் கேட்டு
அண்ண லாயருள் செய்த
அடிகளுக் கிடமர சிலியே.

 

பொருள்

தான் பயணிக்கும் போது குறிக்கிட்ட அழகிய கயிலை மலையை புரட்ட  முற்பட்ட வலிய அரக்கனாகிய இராவணனின் கண்ணும் தோளும் நல்ல வாயும் நெரியுமாறு அவனைக் கால்விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவன் கைநரம்பால் வீணை செய்து பண்ணொடு கூடிய பாடல்களைப் பாட அதனைக் கேட்டுப் பெருந்தன்மையோடு அவனுக்கு அருள்கள் பலவும் செய்த அடிகளுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும்.

கருத்து
வண்ணமால்வரை-கயிலைமலை.
இன்னாசெய்தாற்கும் இனியவே செய்யும் பெருமையனாகி.
பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை        2             
பதிக எண்         95          
திருமுறை எண்   9            
பாடல்
குறிய மாணுரு வாகிக்
     குவலய மளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே
     விரும்பிய மெய்த்தவத் தோனும்
செறிவொ ணாவகை யெங்குந்
     தேடியுந் திருவடி காண
அறிவொ ணாவுரு வத்தெம்
     அடிகளுக் கிடமர சிலியே. 
பொருள்
குள்ளமான உருவமுடைய வாமனராய்த் தோன்றிப்பின் பேருரு எடுத்து உலகை அளந்த திருமாலும், மணம் கமழும் தாமரை மலரை விரும்பிய நான்முகனும் எங்கும் தேடியும் திருவடிகளை அடைய முடியாதவாறும் அறியமுடியாதவாறும் அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த திருவுருவத்தைக் கொண்டருளிய எம்அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.
கருத்து
குறிய மாணுருவாமனாவதாரம்
வெறிமணம்.
மெய்த்தவத்தோன்பிரமன்.
செறிவு ஒணாசெறிதல் ஒன்றா.
செறிதல்பொருந்துதல்.
அறிவொணாவுருவம்ஐம்பொறிகளாலும், மனதாலும் அறிய இயலா ஞானசொரூபம்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவக்கரை

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவக்கரை
·   வராகநதியான சங்கராபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மிகப்பழமையான கோயில்
·   சதுர அடிப்பாகத்தின் மீது அமைந்த வட்டமான ஆவுடையாரில் மூன்று திருமுகங்களுடன் கம்பீரமாக கிழக்கு நோக்கி திருக்காட்சி தரும் மூலவர்.
·   வக்கிரனை அழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்ற தலம்
·   ராஜகோபுரத்தின் இடப்பக்கம் வக்கிரகாளி அம்மன் சந்நிதி
·   காளியம்மன் சந்நிதி எதிரில் வக்ராசூரன் வழிபட்ட வக்கிரலிங்கம்(ஆத்மலிங்கம் , கண்டலிங்கம் )
·   நடராசர், வக்கிர தாண்வம் எனும் இடுப்புக்குமேல் வரை வளைத்து தூக்கிய திருவடியுடன் கால் மாறியாடும் திருக்கோல காட்சி அமைப்பு
·   உள்பிரகாரத்தில் குண்டலி மாமுனிவர் சமாதி மீது சிவலிங்கம் உடைய சந்நிதி.
·   குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன்  (வக்கிரன்) வழிபட்ட தலம்;  வல் + கரை – வலிய கரை, வற்கரை
·   வக்ராசூரனின் தங்கை துன்முகியை காளி சம்ஹாரம் செய்யும் போது வயிற்றில் குழந்தை இருந்த காரணத்தால் கருவில் உள்ள குழந்தையை குண்டலமாக ஆக்கிய் காதில் அணிந்திருக்கும் காட்சி.
·   சனிஸ்வரனின் காக வாகனம்  தென்திசை நோக்கி
·   கால மாற்றத்தால் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் கல்லாக கல்மரங்களாக  மாறிக் காட்சியளிக்கின்றன
·   கருவறை , நந்தி , கொடிமரம் , ராஜகோபுரம் ஆகியவை ஒரே நேர்க் கோட்டில் இல்லாமல் அமைந்துள்ளது
தலம்
திருவக்கரை
பிற பெயர்கள்
வக்ராபுரி, குண்டலிவனம் , துக்ரபுரி , வக்ரபுரிப்பட்டினம், பிறை சூடிய எம்பெருமான், ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்)
இறைவன்
சந்திரசேகரேசுவரர், சந்திர மௌலீசுவரர்
இறைவி
அமிர்தேசுவரி, வடிவாம்பிகை
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், பிரம்மா தீர்த்தம்,புண்ணிபுனல் தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோவில்
திருவக்கரை
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN – 604304
தொலைபேசி : 9443251012, +91 – 413 – 2688949 , 2680870
வழிபட்டவர்கள்
வக்கிராசுரன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், திரு அருணகிரிநாதர்
நிர்வாகம்
இந்துசமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னை – திண்டிவனம் – கூட்டேரிப்பட்டு – மயிலம் – பெரும்பாக்கம் – திருவக்கரை
சென்னை – பாண்டிச்சேரி – திருச்சிற்றம்பலம் கூட்ரோடு – பெரும்பாக்கம் – திருவக்கரை
விழுப்புரம் – முண்டியம்பாக்கம் – திருக்கனூர் – திருவக்கரை
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில்  30    வது தலம்.
சந்திர மௌலீசுவரர்
சந்திர மௌலீசுவரர்
அமிர்தேசுவரி
அமிர்தேசுவரி
புகைப்படம் : தினமலர்
 
பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         3                     
பதிக எண்          060        
திருமுறை எண்    8         
பாடல்

இலங்கையர் மன்னனாகி எழில்பெற்றஇ ராவணனைக்
கலங்கவோர் கால்விரலாற் கதிர்பொன்முடி பத்தலற
நலங்கெழு சிந்தையனாய் அருள்போற்றலு நன்களித்த
வலங்கெழு மூவிலைவேல் உடையானிடம் வக்கரையே.
பொருள்
அழகு பொருந்திய இலங்கை மன்னனான இராவணன் கலங்குமாறு, ஒளி வீசுகின்ற பொன்னாலான திருமுடிகளணிந்த அவன் தலைகள் பத்திலும் தன் காற்பெருவிரலை ஊன்றி, அலறுமாறு செய்தவன். பின் அவனது ஆணவ செருக்கு நீங்கி, நல்ல சிந்தனையோடு ஈசனைப் போற்றி துதிக்க, ஈசன் அவனுக்கு வீரவாளும், நீண்ட ஆயுளும் கொடுத்து அருள் புரிந்தான். அத்தகைய பெருமான் வலக்கையில் மூவிலைவேல்(சூலம்) ஏந்தி வீற்றிருந்து அருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.
கருத்து
·   மாயா மலங்களில் ஆணவ மலம் நீங்குமாறு செய்பவன் ஈசன். ஆணவத்தை விலக்கி உயிர்களுக்கு அருள் புரிபவன் என்பது துணிபு.
·   தன்னை அணுகியவர்களுக்கு வெற்றியும் அதனை அனுபவிக்கும் ஆயுளையும் தருபவன் ஈசன்
பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         3                     
பதிக எண்          060        
திருமுறை எண்    9         
பாடல்
காமனை யீடழித்திட் டவன்காதலி சென்றிரப்பச்
சேமமே உன்றனக்கென் றருள்செய்தவன் தேவர்பிரான்
சாமவெண் டாமரைமேல் அயனுந்தர ணியளந்த
வாமன னும்மறியா வகையானிடம் வக்கரையே.
பொருள்
அழகிய வலிய தேகத்தை உடைய மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிப் பின்னர் அவன் மனைவி ரதி இரந்து வேண்டிப் பிரார்த்திக்க சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து அவள் கண்ணுக்கு மட்டும் புலப்படும்படி அருள்புரிந்தான். வெண்டாமரையில் வீற்றிருந்து சாமகானம் பாடுகின்ற பிரமனும், உலகையளந்த வாமனனான திருமாலும் அறியாவண்ணம் நீண்ட சோதியாக நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்
கருத்து
·         ஈடு அழித்திட்டுவலிமைக்கு இடமாகிய உடம்பை அழித்து. (ஆணவம் முன்வைத்து)
·         உன்தனக்குச் சேமமேஉன் கண்ணுக்கு மட்டும் புலப்படுவான்
Reference
திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
     தொழிவ துனைச்சிறி …… துரையாதே
(இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
 
 
 

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஅச்சிறுபாக்கம்

274
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் –
இறைவன் சுயம்பு மூர்த்தி, சதுரமான ஆவுடையார்
இரண்டு மூலவர்கள் சந்நிதி (அரசரை ஆட்கொண்ட இறைவனுன் உமையாட்சீஸ்வரர், திரிநேத்ரதாரி  முனிவரை ஆட்கொண்ட இறைவன் ஆட்சீஸ்வரர் சந்நிதி)
வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்களின் கோட்டைகளான பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றை தகர்க்க பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்ட இடம். அந்த நேரத்தில் வினாயகரை மறந்தால் அச்சு முறிந்து, பின் தவறை உணர்ந்து அவரை வழிபட வினாயகர் அச்சினை சரிசெய்த இடம்
சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் துவார பாலகர்கள்
அகத்தியருக்கு திருமணக் காட்சி அளித்தத் தலம்
அச்சுமுறி விநாயகர்”  கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்த காட்சி
பிரமகபால மாலையுடன் பைரவர் காட்சி
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம்,திருநாவுக்கரசரின் ஷேத்திரக் கோவையால் குறிப்பிடப்பட்ட தலம்
சரக்கோன்றை மரத்தடியில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு ஈசன் காட்சி அளித்தத் தலம்
சித்தர்களின் அருளாணைப்படி பழனிச்சாமி முதலியார் என்பரால் அமைக்கப்பட்ட ஆறுமுகவேலவரின் திருக்கரத்தில் உள்ள வெள்ளியால் செய்யப்பட்ட பழனி ஆண்டவர் சத்ருசங்காரச் சக்கரம்  பொறிக்கப்பட்ட வேலாயுதம்
தலம்
அச்சிறுபாக்கம்
பிற பெயர்கள்
அச்சுஇறுபாகம்
இறைவன்
ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர், எமையாட்சீசர் (அச்சேஸ்வரர், அச்சு கொண்டருளிய தேவர்), பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்டநாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார்
இறைவி
இளம்கிளி அம்மை, உமையாம்பிகை, சுந்தரநாயகி, பாலாம்பிகை, மெல்லியலாள், அதிசுந்தரமின்னாள்.
தல விருட்சம்
சரக்கொன்றை
தீர்த்தம்
தேவ தீர்த்தம், சூரிய தீர்த்தம், சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
அச்சிறுபாக்கம் அஞ்சல்
மதுராந்தகம் வட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN – 603301
வழிபட்டவர்கள்
கண்வ முனிவர், கௌதம முனிவர், திரிநேத்ரதாரி முனிவர்
பாடியவர்கள்
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் – 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
மேல்மருவத்தூரில் இருந்து 4 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 29  வது தலம்.
ஆட்சீஸ்வரர்
ஆட்சீஸ்வரர்
 
இளங்கிளி அம்மை
 
இளங்கிளி அம்மை
புகைப்படம் : தினமலர்

பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         1                     
பதிக எண்          077        
திருமுறை எண்    8         
பாடல்
 
கச்சுமொள்வாளுங் கட்டியவுடையர் கதிர்முடிசுடர்விடக் கவரியுங்குடையும்
பிச்சமும்பிறவும் பெண்ணணங்காய பிறைநுதலவர்தமைப் பெரியவர்பேணப்
பச்சமும்வலியுங் கருதியவரக்கன் பருவரையெடுத்ததிண் டோள்களையடர்வித்
தச்சமுமருளுங் கொடுத்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொருள்
இத்தலத்து இறைவன், இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர், ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற்சூடி விளங்குபவர்.பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித்தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார். அப்படிப்பட்ட இறைவன் அச்சிறுபாக்கத்தில் உறையிம் ஆட்சிபுரிஸ்வரர் ஆவார்
பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         1                     
பதிக எண்          077        
திருமுறை எண்    9  
பாடல்
நோற்றலாரேனும் வேட்டலாரேனு நுகர்புகர்சாந்தமொ டேந்தியமாலைக்
கூற்றலாரேனு மின்னவாறென்று மெய்தலாகாததொ ரியல்பினையுடையார்
தோற்றலார்மாலு நான்முகமுடைய தோன்றலுமடியொடு முடியுறத்தங்கள்
ஆற்றலாற்காணா ராயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
பொருள்
அச்சிறுபாக்கத்தில் உறையும் ஆட்சீஸ்வரர் தவம் செய்பவராக இல்லாவிட்டாலும், பிறரிடத்தில் அன்பு செய்பவராக இல்லாவிட்டாலும், வாசனை தரும் சந்தனமுடன் கையினில் மாலை ஆகிய முறைகளில் வழிபாடு செய்யாதவராக இருப்பினும் இவர் இவ்வாறானவர் எனப் பொருள் கொள்ளார். அறியமுடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்றவர் எம்அடிகள்.
கருத்து
 
·         தவம் செய்வதும், மாலைகளுடன் பூசை செய்தலும் எதிர் எதிர் நிகழ்வுகள், ஒன்று புறப்பூசை, மற்றொன்று அகப்பூசை. இறைவன் இரண்டையும் கடந்தவர்.
·         நோற்றலார் – தவஞ்செய்யாதவர். வேட்டலார் – யாகஞ் செய்யாதவர்கள்

சமூக ஊடகங்கள்