சுயத்தின் பேரொலி

%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf_vv

 

புகைப்படம் :  Vinod VV

 

 

எத்தனை முயற்சித்தாலும்
இவ்வளவு தான் வாழ முடிகிறது.
பெறுவதை நோக்கமாகக் கொண்டப்பின்
கிடைக்கும் ஒரு முழு பீடியும்,
புகைக்கப்பட்ட சிறு துண்டு பீடியும்;
சிறு சண்டைகளுக்குப் பின் கிடைக்கும்
கறி இல்லா கால் பிளேட் பிரியாணி;
புன்னகைக்குப் பின் யாசித்தலை ஒத்து
கிடைக்கும் சிறு தேனீர்;
‘சும்மாதான இருக்க’ எனும் சொல்லுக்கு பின்
அழைத்துச் செல்லப்படும்
தரை டிக்கெட் திரைப்படங்கள்;
நிலை அறிந்தும் நிழலெனத்
தொடரும் உடலெங்கும் காயம் கொண்ட
கருப்பு நிற ஜிம்மியின் வாலசைப்புகள்;
யாரும் அறியா சுயத்தின் பேரொலி.
எத்தனை முயற்சித்தாலும்
இவ்வளவு தான் வாழ முடிகிறது.

 

சமூக ஊடகங்கள்

Leave a Reply