அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – இருந்தவம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  இருந்தவம்

பொருள்

  • பெரியதவம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்
குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென்
சென்று நீரிற் குளித்துத் திரியிலென்
என்று மீசனென் பார்க்கன்றி யில்லையே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

என்றும் எப்பொழுதும்  ஈசன் என்பவர்களாக இல்லாமல், நன்கு பொறுமை உடையவர்களாக இருப்பினும், உண்ணாவிரதம் இருப்பினும், மலையில் ஏறிப் பெருந்தவம் செய்தாலும், விரும்பிச் சென்று நீரில் நீராடித் திரிந்தாலும் ஈசனை விலக்கிய மற்றவர்களுக்கு இவற்றால் பயன் இல்லை.

விளக்க உரை

  • அகவழிபாடு சிறப்பினை விளக்கும் மற்றொரு பாடல்.
  • நோற்றல் – பொறுத்தல், தவம் செய்தல் எனும் பொருள் விளக்கம் இருப்பினும் இரண்டாவது வரியில் ‘குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென்’ எனும் வரிகளால் பொறுமை உடையவர்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் எதனிடத்தில் செய்யப்படுகின்றன.
மாயை ஆகிய சடப்பொருளிடத்தில்

சமூக ஊடகங்கள்

Leave a Reply