அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நவை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நவை

பொருள்

  • குற்றம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு.

சீர் பிரிப்புடன்

ஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே
ஏருடையான் வேளாண்மைதான் இனிது ஆங்கு இனிதே,
தேரின், கோள் நட்புத் திசைக்கு.

பதினெண் கீழ்க்கணக்கு – இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

கருத்து உரை

கட்டளை இட்டு சொன்ன வேலைகளை அதில் மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும். எல்லா காலங்களிலும் குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். ஏரினை சொந்தமாக வைத்து விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லும் அனைத்து திசையிலும் நட்புக்கொள்ளுதல் இனிது.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

உயிர்களிடத்து செய்யப்படும் தொழில்கள் எவை?
மறைத்தல், அருளல்

சமூக ஊடகங்கள்

Leave a Reply