அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அடல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அடல்

பொருள்

  • ஒளிவு
  • மறைவு
  • களவு
  • கபடம்
  • தீய எண்ணம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

மயிலாப்பூரில்,  மாசிமகநாளில், கடலாடுதலைக்  கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளி இருப்பவனும், வலிமை பொருந்திய விடையின் மேல் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

விளக்க உரை

  • மாசிமகநாளன்று கடலாட்டு விழா நிகழ்வு குறித்தப் பாடல்

சமூக ஊடகங்கள்

Leave a Reply