அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – முசித்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  முசித்தல்

பொருள்

  • களைத்தல்
  • மெலிதல்
  • அழிதல்
  • திருகுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பார் தாள்
முடிக்கின்றிலை, முருகா என்கிலை, முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே?

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்து உரை

நெஞ்சமே, பழநியில் எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானின் திருநாமங்களை ஓதவில்லை. அவ்வாறு பழநி ஆண்டவரது திருநாமங்களை ஓதுகின்ற அடியார்களின் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்ளவில்லை. (அஃதாவது பாதம் பணிந்து வணங்கவில்லை). அனைத்தும் அறிந்த  பரம்பொருளாகிய திருமுருகப்பெருமானை ‘முருகா’ என்று அழைக்கவில்லை. யாசிப்பவர்கள் பசிப் பிணி கொண்டு மெலிவடையாமல் இருக்கும் பொருட்டு அவர்களுக்குப் உணவு வழங்கி, அக்காரணம் பற்றி நீ வறியவனாகிவிடவில்லை. பேரின்பம் மிகுதியாக வரும்பொருட்டு விம்மி விம்மி அழவில்லை. இனி நமக்கு அடைக்கலம் தரும் பற்றுக்கோடு எங்கு உள்ளது?

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

காரியத்தை காட்டும் உவமை எது?
குடம்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply