அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அனந்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அனந்தல்

பொருள்

  • தூக்கம்
  • மயக்கம்
  • மந்தவொலி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சினந்தனை யற்றுப் பிரியமும் தான் அற்றுச் செய்கையற்று
நினைந்ததும்அற்று, நினையா மையுமற்று, நிர்ச்சிந்தனாய்த்
தனந்தனி யேயிருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலில் என்றிருப்பேன் அத்தனே! கயிலாயத்தனே!

பட்டினத்தார்

கருத்து உரை

கயிலாயத்தில் அமர்ந்தவனே, மாயைக்கு உட்பட்டு இயல்பாக உள்ளத்தில் எழும் கோபத்தை அறவே நீக்கி, ஆசையை அகற்றி, புற, அகச் செய்கைகள் அனைத்தையும் துறந்து, மனதில் சேர்த்து வைத்திருந்த நினைவுகளையெல்லாம் நீக்கிவிட்டு, நினைவு கொள்ளாமை எனும் நிலையையும் அற்ற, சிந்தனைகள் எதுவும் இல்லாமல் தன்னந்தனியானாய் அமர்ந்து  ஆனந்த நித்திரை தரும் மயக்கத்தில்  சிவசிந்தனையோடு எப்போதும் இருப்பது எப்போது ஐயனே!

சமூக ஊடகங்கள்

Leave a Reply